ஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.

 தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
அதிகம் பேசுபவர்களைவிட அதிகம் செவிமடுப்பவர்களை உலகம் விரும்புகின்றது. சிலர் தங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் மிகச் சிறப்பான முறையில் மற்றவர்களுக்குச் சொல்வதற்கு நாவன்மையும் சொல்வளமும் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எனினும் அவர்களை மற்றவர்களின் கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செவிமடுக்க முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் நாளடைவில் அவர்களை மக்கள்/உறவுகள்  புறக்கணிக்க தலைப்படுவார்கள்.
 ஒரு குழந்தை பிறக்கு முன்னரே செவிமடுத்தல் ஆரம்பமாகிவிடுகின்றது என்பது அதிசயத்தக்க உண்மை.
 கேட்டல் செவிமடுத்தல் இரண்டும் ஒரு அர்த்தத்தைத் தருவதாகத் தோன்றினாலும் இவ்விரு பதங்களுக்கிடையே இமாலய வேறுபாடு உண்டு. கேட்டல் எனும் போது நாம் விரும்பியோ வெறுத்தோ எம்மை அறியாமல் எம் காதுகளை வந்தடையும் ஒலிகளை கிரகிப்பதைக் குறிக்கும். செவிமடுத்தல் எனும்போது உன்னிப்பாகவும் அவதானத்துடனும் ஒலிகளுக்கு எம் செவிகளை வழங்குவதைக் நல்ல செவிமடுப்பவர்களாக இருப்பது நல்ல வாழ்க்கைத் துணைகளாக இருப்பதற்கும் சிறந்தபெற்றோர்களாக,பிள்ளைகளாக  இருப்பதற்கு மட்டுமல்லாது வாழ்கையில் பல துறைகளிலும் தனித்துவமான முத்திரை பதிக்க நிச்சயமாகத் துணைபுரியும்.
எனவே அடுத்தவர் குரலினை செவிமடுக்க இன்றே ஆரம்பியுங்கள். நல்லுறவு விருத்தியடையும். 


FOOD HABITS OF TAMILS/PART :09


[Compiled by: Kandiah Thillaivinayagalingam]
[Food Habits Of Ancient Sumer-continuing]
The first tablet YBC 4644,about,1750 BC,includes 25 recipes for stews,21 are meat stews and 4 are vegetable stews.The recipes list the ingredients and the order in which they should be added,but does not give measures or cooking time - they were clearly meant only for experienced chefs.the second tablet,YBC 8958,1750 BC, has seven recipes which are very detailed.The text is broken in several places and the name of the second recipe is missing,but it is a dish with small birds,maybe partridges.One of the recipe lines goes like this-
"Remove the head and feet.Open the body and clean the birds,reserving the gizzards and the pluck [heart, liver, and lungs].Split the gizzards and clean them.Next rinse the birds and flatten them.Prepare a pot and put birds,gizzards and pluck into it before placing it on the fire"

It does not mention whether fat or water is added- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising,the recipe continues-

"Put the pot back on the fire.Rinse out a pot with fresh water.Place beaten milk into it and place it on the fire.Take the pot (containing the birds) and drain it.Cut off the inedible parts,then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue[aromatic woody herbs or shrubs],which has already been stripped and cleaned.When it has come to a boil,add minced leek,garlic,samidu [Semolina?] and onion (but not too much onion)"

While the birds cook,preparations for serving the dish must be made-

"Rinse crushed grain,then soften it in milk and add to it,as you kneed it,salt,samidu,leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment.Then cut it into two pieces.Take a platter large enough to hold the birds.Place the prepared dough on the bottom of the plate.Be careful that it hangs over the rim of the platter only a little.Place it on top of the oven to cook it.On the dough which has already been seasoned,place the pieces of the birds as well as the gizzards and pluck.Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" to the table.

The third tablet contains 3 damaged recipes for the pot cooking of a
bird,butumtu[An identified grain,may be Pistachio Nuts or Flour?] and some kind of meat.However,a 3900-year-old Sumerian poem honouring Ninkasi, the patron goddess of brewing,contains the oldest surviving complete recipe.

The Sumerians were big-time beer drinkers.In fact,may be by accident, they would have discovered beer.Sources indicate that the old school nomadic hunter-gatherers,finally settled in Mesopotamia and started farming.One of their first harvested products was grain.To keep this grain,it was often baked and stored.Some 6,000 years ago,ancient text reveals that eventually it was
formulated that the sweetest grain,if baked,left out, moistened,forgotten,then eaten,would produce an uplifting,cheerful feeling.Intoxication at the primal level,The first beer! After this blissful discovery,baked grains were broken into pieces and stuffed into a pot.Water,and sometimes aromatics,fruit or honey,were added (creating a basic mash and wort) and left to ferment.Years later, the Babylonians fashioned what we now know as a straw, to extract the juice from the grain pulp in the pot.


PART :10 WILL FOLLOW

தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:09

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

இப்போது,இன்றைய நவீன உலகில்,பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை.ஏராளமான சமையல் புத்தகங்கள்,சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன.ஆனால் எமது பாட்டியை,பாட்டனை  கேட்டால்,அவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள்?அப்படிஎன்றால்,உண்மையாகவே,சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா?அதெல்லாம் இல்லை.கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,இந்த நாளாந்த சமையல் கூட பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால யேல் சமையல் பலகைகள் எடுத்துகாட்டுகின்றன.இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும்,
பொதுவானதாகவும் உள் ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கறி, கோழி, காய்கள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன.உதாரணமாக கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப்படும்,முதலாவது யேல் சமையல் பலகை,YBC 4644,25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது.இவை 21 புலால் துவட்டலும்[மெதுவாக வேகவைத்த சமையல்/stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும்.இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது.ஆனால் எவ்வளவு,எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் அங்கு காணப்படவில்லை.இரண்டாவது யேல் சமையல் பலகை, YBC 8958,ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது.வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை.ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு.அதிகமாக அந்த பறவை கௌதாரியாக[partridges] இருக்கலாம் என அறிஞர்களால் ஊகிக்கப்படுகிறது.அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி செல்கிறது-

"தலையையும் பாதத்தையும் அகற்று,உடலை விரித்து பறவையை கழுவு,பின் இரைப்பை,இதயம்,கல்லீரல்,நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,பின் இரைப் பையை பிரித்து துப்பரவு செய்,அடுத்து,அந்த பறவையின் உடலை அலசி[கழுவி] அதை தட்டையாக கிடத்து,ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம்,கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்"-

ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை.இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால்,அறிவுறுத்தல் ஒன்றும் தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம்.சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது-

"முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த
பின்,மீண்டும் சட்டியை நெருப்பில் வை,புதிய தண்ணீரால் சட்டியை கழுவு,பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை,பின் சட்டியை எடுத்து வடி,சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி,மற்றவைக்கு உப்பு சேர்,அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு,மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர்,அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும்,அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ்,மற்றும் உள்ளி,சமிடு[ரவை?],போதுமான வெங்காயம் சேர்த்து கொள்,"

இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில்,சமைத்த உணவை பரிமாறுதலுக்கான ஆயுத்தமும் செய்யவேண்டும் என்பதால்,அதன் அறிவுறுத்தல் இப்ப மேலும் இப்படி தொடர்கிறது.

  • "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு,பாலில் அதை மென்மையாக்கு,அதை பிசையும் போது,உப்பு,ரவை,லீக்ஸ்,உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி-மாவு பசையாக்கி-,அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு.பின் இரு துண்டுகளாக வெட்டு,பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு,தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை,விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள்,அடுப்பிற்கு மேல் அதை வேக வை,ஏற்கனவே பக்குவபடுத்தப்பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை,அதை ரொட்டி மூடியால் மூடு.பின்  அதை பரிமாறலுக்கு அனுப்பு." என்கிறது.

மூன்றாவது யேல் சமையல் பலகை,மிகவும் சிறியதாகவும் அதே நேரம் மிகவும் உடைந்ததாகவும் உள்ளது.இது மூன்று சமையல் குறிப்பை கொண்டுள்ளது.இது ஒரு பானையில் பறவை ஒன்றின் சமையல்கள் ஆகும்.அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம்[butumtu?]-அதிகமாக இது பசுங்கொட்டை அல்லது அதன் மாவாக இருக்கலாம்[Pistachio Nuts or Flour]?-இறைச்சி போன்றவையை சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும்.என்றாலும் நின்காசியை கௌரவிக்கும் கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே[Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான,சமையல் புத்தகமாக கருதப்படுகிறது.

சுமேரியர்கள் பியர் மது குடிப்பதில் மிகவும் பிரியமானவர்கள்.என்றாலும் உண்மையில்,தற்செயலாகத்தான் இந்த சாராயத்தை கண்டு பிடித்தார்கள் என நம்பப்படுகிறது. சுமேரியர்கள் நாடோடி-வேட்டையாடுபவர்களாக முதலில் மெசொப்பொத்தேமியாவில் குடியேறி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.அவர்கள் செய்த முதல் அறுவடை,ஒரு தானியம் ஆகும்.இந்த தானியத்தை பேணி நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதற்க்காக,கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்,இந்த தானியத்தை வேகவைத்து சேமித்தனர்.இப்படி வேகவைத்த இனிமையான தானியங்கள் நாளடைவில்,ஈரமாகி,அதன் பின் அது ஒரு  மகிழ்ச்சியான,உணர்வுதரத்தக்க,மயக்கம் தர வல்ல,பானம் ஒன்றை தந்தது.இதுவே உலகின் முதல் மது ஆகும்.இது ஒரு தற்செயலான கண்டு பிடிப்பாகும்.அதன் பின்,சுமேரியன் வேகவைத்த தானியத்தை நொறுக்கி தண்ணீர் உள்ள பானை ஒன்றிற்குள் தள்ளினான்.சிலவேளை,அவன் அதற்கு நறுமண பொருட்கள்,பழங்கள் அல்லது தேன் போன்றவற்றை சேர்த்தான்.அதன் பின் அதை புளிக்க வைத்து மது தயாரித்தான்.அப்படி தயாரிக்கப்பட்ட அந்த மதுவை பானையில் இருந்து பாபிலோனியன்,சில ஆண்டுகள் கழித்து,ஒரு உறிஞ்சி மூலம் குடித்து மகிழப் பழகினான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சுமேரியர்களால்,தமது “வாய் நிரப்பும் பெண்மணி" என போற்றப்படும்,"மது" பெண் தெய்வமான நின்காசியை துதித்து போற்றும் சிறப்பு மிக்க-உலகின் முதல் முழுமையான,சமையல் புத்தகமாக கருதப்படும்-ஒரு துதி பாடல்,மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] வரிசையாக எடுத்துக் கூறி,அந்த பண்டைய பெண் தெய்வத்தை அப்பாடல்,பாராட்டுகிறது.இது புளிக்கச் செய்யப்பயன் படும் பொருள் முதல்,ஊறவைத்தல்,நொதித்தல்,வடித்தல் என்பனவற்றின் விபரங்களை ஒவ்வொன்றாகத் வரிசையாகத் தருகிறது.பொதுவாக பண்டைய மெசொப்பொத்தேமியாவில் மது வடிப்போர்/காய்ச்சுவோர் பெண்களாக இருந்தார்கள்,அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள்.மேலும் அங்கு துணை உணவாக மது,வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது.எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த அந்த ஒரு வகைச் சாராயத்தை/பியர் மது பானத்தை [beer]விற்கவும் அவர்களால் முடியும்.அதாவது சுமேரிய பெண்கள் தவறணை காப்பாளராகவும் அன்று இருக்கக் கூடியதாக இருந்தது. 

பகுதி:10 தொடரும்...

FOOD HABITS OF TAMILS PART :08[Food Habits Of Ancient Sumer-continuing]

 [Compiled by: Kandiah Thillaivinayagalingam]
Mesopotamian bread was usually coarse,flat,and unleavened,but a more expensive bread could be baked from finer flour.Pieces of just such a bread were found in the tomb of Queen Puabi of Ur, stored there to provide her spirit with sustenance in the afterlife.Bread could also be enriched with animal and vegetable fat;milk,butter,and cheese;fruit and fruit juice;and sesame seeds.The most important food crop especially in southern Mesopotamia was the date palm.Rich in sugar and iron,dates were easily preserved.Like barley, the date-palm thrived on relatively saline soil and was one of the first plants farmers domesticated.Curiously, two mainstays of the Mediterranean diet--olives and grapes.were seldom found in Mesopotamian cuisine.Meats were cooked by roasting, boiling, barbecuing or broiling and preserved by drying,smoking or salting.

The Sumerian invented cuneiform writing around 3100 BC.The writing system spread to Mesopotamia's other groups to record their language and by about 1900 BC ,the Babylonians compiled a concordance with more than 800 food & drink terms in Sumerian & Akkadian using the common cuneiform script.One of the largest categories was for foods cooked in liquid.These are simply names without gastronomic detail,but the large number of culinary terms suggests that sophisticated cooking had spread throughout Mesopotamia's different ethnic groups and also evidences
indicates that these different peoples shared many food habits.Cooking equipment also evolved to allow more sophisticated cookery.The Sumerians in their prehistory developed stone ovens capable of baking loaves of bread,Fire brick ovens followed by about 2500 BC,Some designed with flat areas that could hold stewing or frying pans,made from either clay or bronze.Very few recipes survive from Mesopotamia.The exceptions are 35 recipes incised on three clay tablets that form part of the Yale babylonion collection,Now held at Yale university.The cuneiform writing system was complex and generally only scribes who had studied for years could read and write, so it is unlikely that the cookbooks were meant for the ordinary cook or chef. Instead, they were
written to document the current practices of culinary art.The recipes are elaborate and often call for rare ingredients.We may assume that they represent Mesopotamian haute cuisine meant for the royal palace or formal "Culinary Liturgy" for religious offerings.The Yale tablets are damaged and contain words that scholars have been unable to translate.Nontheless,They are the single best evidence of how dishes dating back to about 4000 years might have been prepared.Most of the recipes were now by guesses based on scientific,archaeological,biological and other literary evidences.These are the oldest known food recipes any where in the world.

PART :09 WILL FOLLOW

குடல்புண்ணை குணமாக்க .....?

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்…. * வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

சென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு


நீதி தேவதை நீ எங்கே.....??

நீதி தேவதை நீ எங்கே? 
உன்னை த்தேடுகிறோம் 

கண்ணீர்   நிறைந்த 

எங்கள் விழிகளும் 
தூங்க மறுக்குது 
நீ எங்கே?

எங்கள் இனத்தின் 

அவல குரல் கோட்கிறதா?

இழந்துவிட்ட உறவுகளின் 

அழு ஓசைக்கு 
ஒரு அர்த்தம் 
சொல்லி ப்போ! 

உன் வரவை எண்ணி 

பார்த்து விழி ஏங்கி 
நிற்கிறோம் 
நீதி தேவதையே
நீ எங்கே?

காயம் பட்ட உறவுகளுக்கு 

மருந்து தந்து செல்வாயா?

அல்லது கண்ணில் 

நெருப்பு வைத்து 
வேதனையை 
கூட்டி ச்செல்வாயா?

விடை தெரியாமல் 

வினாவுடன் 
ஏங்கி நிற்கிறோம்
 வழி கிடைக்குமா 
நீதி தேவதையே
நீ எங்கே?
...........................................ஆக்கம்:அகிலன்,தமிழன் 

ப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்!


சில பாம்புகள் இரண்டு வருடங்கள்வரை உணவில்லா மல் உயிர்வாழுமாம், காற்றை தின்று உயிர் வாழும் பாம்பு எனசொல்கிறார்களே அவ்வகை பாம்புதான் இ து!  பிரேசிலில் உள்ள ஒரு தீவிற்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்திருக்கிறார்கள். அங்கே ஒரு சதுரமீட்டருக்கு 5 பாம்புகள் வீதம் உள்ளனவாம்!  உலகம் முழுவதும், ஒரு வருடத்திற்கு பாம்பு கடி த்து,  1 லட்சம் மக்கள் வரை இறக்கிறார்களாம்.
.....................................................................................
ஆச்சரியமான செய்தி :    2 தலை உள்ள சில பாம்புகள் இருக்கின்றன. அவை உணவிற்காக தங்களை தாங்களே அடித்துக் கொள்ளு மாம்..!  உலகில் அதிபயங்கரமான பாம்புகள் என வரை யறுக்கப்பட்ட முதல்  10 கொடிய பாம்புகள் அவுஸ்திரே லியாவில் இருக்கின்றனவாம்!
........................................................................... 

................................................................................
பாம்புகள் தங் கள் வாய்களை 150 டிகிரிவரை அகலமாக விரித்து க்கொள்ளுமாம்பாம்பின் வயிற்றிற்குள் ஒரு வித சக்தி வாய்ந்த அசிட் அமிலம் உள்ளதாம்.  Alka – Seltzer மருந்தை பாம்பிற்கு கொடுத்தால், வயிறு வெடித்து இறந்துவிடுமாம்
........................................... 
Titanoboa எனும் பாம்பு 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, அழிந்த இனம் ஆகும்! உலகில் நீள மான, பெரிய, எடைகூடிய பாம்பு இதுதான் என ஆராய் ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்மகுடி வாசிக்க பாம்பு நடனம் ஆடுகிறதே..  அது மகுடியின் சத்தத்திற்கு அல்ல . அதனசைவிற்கு! பாம்பிற்கு காதுகள் இல்லை!
..............................................

கடல் மூக்கு பாம்புஎன அழைக்கப்படும் ஒரு வகை பாம்பு உள்ளது.
அதன்ஒருதுளி விஷம் 3 பேர்களை கொ ல்லும் அளவிற்கு வீரியமானதாம்! பாம்புகளுக்கு நன்கு விரியக்கூடிய நெகிழ்வான தாடைகள் இயற்கையாக அமைந்துள்ளது. பாம்பு தன் தலையை விட பெரிய இரையை லாவகமாக விழு ங்குவதைதொலைக் காட்சிகளில் பார்த் திருப்பீர்கள்பாம்புகளுக்கு கண் இமை கள் இல்லைபாம்புகள் வாசத்தை உண ர்வதற்கு தங்கள் நாக்குகளை பயன்படுத்துகின்றன. அமெரிக்கர்களில் 51 சதவீதமானவர்கள் பாம்புக்குத்தான் அதிகமாக பயப்படுகிறார்கள். இந்த பேய் பிசாசு எல்லாம் அதன் பின்னே தான்!!
....................................................