பாருக்குள் ஒரு நாடு-ஐ.அமெரிக்கா ….ஒரு பார்வை:

அமெரிக்க ஐக்கிய நாடு

அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America USA US, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.எஸ்.ஏ, அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுவது) ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு மத்திய வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும், தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. அலாஸ்கா வட அமெரிக்க கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் கொண்டுள்ளது. ஹவாய் மாநிலம் மத்திய பசிபிக்கில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும். அமெரிக்கா கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. உலகில் பன்முக இனங்களையும் பலவித கலாச்சாரங்களையும் மிக அதிகளவில் கொண்ட தேசங்களில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும். அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).

அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. சூலை 4, 1776 அன்று, சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன, இது தான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் சுதந்திர போராகும். திபிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த வருடத்தில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான மத்திய அரசாங்கத்தின் கீழான ஒற்றை குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய சுதந்திரங்களை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது..

19 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் டெக்சஸ் குடியரசையும் மற்றும் ஹவாய் குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாய தெற்கிற்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் 1860களில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தன. வடக்கின் வெற்றி, நாட்டின் பிரிவினையைத் தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. 1870களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.
அமெரிக்கா ஒரு முதலாளித்துவ கலப்பு பொருளாதாரம், இது அளவற்ற இயற்கை வளங்கள், நன்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு, மற்றும் உயர்ந்த உற்பத்திதிறன் ஆகியவை மூலம் வளப்படுகிறது. ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் சொத்து மற்றும் கார்பரேட் வருவாய் வரி விகிதங்கள் பொதுவாக அதிகமாக இருக்கின்றன, உழைப்பு மற்றும், குறிப்பாக, நுகர்வு வரி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி அறிவியல் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. 1876 ஆம் ஆண்டில், தொலைபேசிக்கான முதல் அமெரிக்க காப்புரிமை அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பெற்றார். தாமஸ் எடிசனின் ஆய்வகமானது போனோகிராப், முதல் நெடுநேரம் எரியும் லைட் பல்ப், மூவி கேமரா ஆகியவற்றை உருவாக்கியது. நிகோலா டெஸ்லா அல்டர்னெடிங் மின்சாரம், ஏசி மோட்டார், ரேடியோ ஆகியவற்றை உருவாக்கினார். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரான்சம் ஈ.ஓல்ட்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டின் தானுந்து நிறுவனங்கள் தொகுப்புவரிசையை ஊக்கப்படுத்தின. 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள், முதலாவது கட்டுப்படுத்தக்கூடிய காற்றை விட கனமான உந்துசக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினர்.

சீனா மற்றும் இந்தியாவை அடுத்து உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மூன்றாவது நாடாக அமெரிக்கா திகழ்கிறது. ஆங்கிலம் பயன்பாட்டு தேசிய மொழியாகும். அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு.

அமெரிக்காவின் சராசரி ஆயுள் காலமான பிறப்பு சமயத்தில் 77.8 வருடங்கள் என்பது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அளவை விட ஒரு வருடம் குறைவானது, நார்வே, சுவிட்சர்லாந்து, மற்றும் கனடாவை விடவும் மூன்று முதல் நான்கு வருடங்கள் குறைவானதாகும். அமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பு வேறு எந்த நாட்டினை விட அதிகமான தொகை செலவிடுகிறது. அமெரிக்கா ஒரு பல கலாச்சார தேசம்,

பிரதான அமெரிக்க சமையல் கலை பிற மேற்கத்திய நாடுகளில் உள்ளதை ஒத்து இருக்கின்றன. கோதுமை தான் பிரதான உணவு தானியமாக இருக்கிறது. வான்கோழி, வெள்ளை-வால் மான் , உருளைக்கிழங்குகள், இனிப்பு உருளைக்கிழங்குகள், மக்காச்சோளம், ஸ்குவாஷ், மற்றும் மேபிள் சாறு ஆகியவற்றை மரபான அமெரிக்க சமையல்முறைகள் பயன்படுத்துகின்றன. அமெரிக்கர்கள் பெரும்பாலும் தேநீரைக் காட்டிலும் காபியையே விரும்புகிறார்கள்.

பல பெரும் அமெரிக்க விளையாட்டுகள் ஐரோப்பிய வழக்கங்களில் இருந்து பிறந்தவையாக இருக்க, கூடைப்பந்து, கைப்பந்து, ஸ்கேட்போர்டிங், ஸ்னோபோர்டிங், மற்றும் சியர்லீடரிங் ஆகியவை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுக்களாகும்.

📂தொகுப்பு:செ.மனுவேந்தன் 

உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01[The belief and science of the sleep] 

இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படும் சொற்களான 'தூங்குதல்', 'தூக்கம்',  'நித்திரை' போன்ற சொற்களை சங்க இலக்கிய காலத்தில் காணமுடியவில்லை. அங்கு தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தான் நாம் காண்கிறோம். மேலும் நித்திரை என்பது சமஸ்கிருதச் சொல் 'nidra' ['निद्रा'] வில் இருந்து பிறந்த சொல். தமிழில் இதற்கு 'உறக்கம்', 'துயில்', 'துஞ்சுதல்' போன்ற அழகான சொற்களை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். உதாரணமாக திருவள்ளுவர், தனது குறளில், ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்று உறக்கம் என்ற சொல்லை கையாளுகிறார். மேலும் அவர் இன்னும் ஒரு குறளில் ‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்’ என்பதன் மூலம் தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளில் கையாளுகிறார். என்றாலும் இன்று திரைப்படத்தில் ‘தூங்காதே தம்பி, தூங்காதே!’ என்றும், ‘தூங்காத கண்ணொன்று உண்டு’ என்ற வரிகளை கண்டாலும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’ என்ற கர்ணன் படப் பாடல்வரி ஒரு ஆறுதலை கொடுக்கிறது. உறக்கம், துயில், துஞ்சுதல் எனும் சொற்களின் வரிசை பிழைத்து எப்படி  தூக்கம் வந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. பால காண்டத்தில், கவியரசர் கம்பன் அழகாக 'உறங்கும்' சொல்லை பயன் படுத்தி உள்ளதுடன், பலவகையான உறங்கல் செய்திகளையும் வரிசைப் படுத்துகிறான்.

"நீரிடை உறங்கும் சங்கம்;
நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு;
தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;
துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்;
பொழிலிடை உறங்கும் தோகை"

அதாவது, சங்குகள் தண்ணீரில் உறங்கிக் கொண்டிருக்கும்; எருமைகள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருக்கும்; வண்டுகள் மலர் மாலைகளிலே உறங்கிக்கொண்டிருக்கும்;  திருமகள் தாமரை மலரிலே உறங்குவாள்; ஆமைகள் சேற்றிலே உறங்கும்; முத்துச் சிப்பிகள் நீர்த் துறைகளிலே உறங்கும்; அன்னங்கள் நெற்போரிலே உறங்கிக் கிடக்கும்; மயில்கள் சோலைகளிலே உறங்கிக் கொண்டிருக்கும் என்ற ஒரு நீண்ட உறங்கல் செய்தியை சொல்கிறான். மேலும் அவன் யுத்த காண்டத்தில்,

"உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்ற தின்று காண், எழுந்திராய், எழுந்திராய்!
கறங்கு போன்ற விற்பிடித்த கால தேவர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!’"

என்கிறான். அதாவது,உறங்குகின்ற கும்பகர்ணனே! உங்களுடைய மாய வாழ்க்கை இன்றோடு வீழ்ச்சி அடையத் தொடங்குகிறது; இதனை எழுந்து நீ பார்ப்பாயாக; காற்றாடி போல வில் பிடித்த எம தூதர்களின் கையில் நிரந்தரமாகக் கிடந்து இனி உறங்குவாயாக என்கிறார். எனவே, பண்டைய தமிழில், தூங்குதல், தூக்கம் போன்ற சொற்கள் உறக்கம் என்ற பொருளில் காணப்படவில்லை. ஆகவே நாமும் இயன்றவரை அப்படியான சொற்களை தவிர்ப்போம்.

'உலக உறக்க தினம்" எல்லா நாடுகளிலும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு நாள் நம்முடைய அவசர வாழ்க்கையில் நாம் பகுதியாக நிராகரிக்கும் அல்லது தள்ளி போடப்படும் உறக்கத்தின் முக்கியத்தை எல்லோர் காதிலும் உரக்கச்சொல்ல இது ஒரு அரிய வாய்ப்பாக எமக்கு அமைகிறது. உதாரணமாக, உடலிலுள்ள அத்தனை உயிரணுக்களை [cells] தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், மனிதனுக்கு உறக்கம் இன்றியமையாததாக உள்ளது. குறுந்தொகை 6, உறக்கம் [துயில், துஞ்சுதல்] பற்றி கூறுகையில், நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கி விட்டன. வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்குகின்றனர். அகன்ற உலகமும் உறங்குகின்றது என "நள்ளென் றன்றே யாமம், சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி, நனந்தலை உலகமும் துஞ்சும்" என்கிறது. மேலும் ‘பசிக்கு ருசி வேண்டாம், உறக்கத்திற்கு பாய் வேண்டாம்’ அல்லது 'பசி ருசி அறியாது உறக்கம் சுகமறியாது' போன்ற பழமொழியையும் சேர்த்து பார்க்கும் பொழுது, எமக்கு ஒன்று புலப்படுகிறது. அதாவது உறங்குவதற்கு ஏற்ற காலம், பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி குளிர்ச்சி பொருந்திய அமைதியான இரவு என்பதும், அவர்கள் அன்று பாய், அல்லது பாய் போன்ற ஒன்றில் உறங்கினார்கள் என்பதும் தெரியவருகிறது.

உதாரணமாக, பிரகாசமான இரவு வானம் இல்லாததும் வேட்டையாடும் விலங்குகளின் அச்சுறுத்தலும் எமது புதிய கற்கால மூதாதையர்களை [Neolithic ancestors]  சாயங்காலம் ஓரிரு மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்லவைத்தது. அவர்கள், முன்பு எமது பழையகற்கால மூதாதையர்கள் [Paleolithic predecessors during the Stone Age] வைக்கோலின் குவியல்கள் [The heaps of straw] மேல் படுத்ததை, மேலும் விரிவு படுத்தி, தமது படுக்கையை  உயர்த்தப்பட்ட மேற்பரப்புகளால் மாற்றி அமைத்தார்கள். இதன் மூலம் அவர்கள் தமது படுக்கை இடத்தை ஒரு குடியிருக்கத்தக்க அல்லது வாழக்கூடிய பகுதியாக [bedtime space more habitable] மாற்றினார்கள். 
இன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய உறங்கும் உறைவிடங்களை கண்டு பிடித்துள்ளனர், ஆனால் அவை இன்றைய படுக்கைகளை விட அதிகமாக வட்டமாகவும் கூடுகள் போலவும் இருப்பதை கண்டனர் [were circular and more like nests than beds]. இந்த தற்காலிக படுக்கைகளின் வட்ட வடிவம் எமக்கு எடுத்து காட்டுவது, கரு [fetal - a posture characteristic of a fetus, with the back curved forwards and the limbs folded in front of the body ] ஒன்றிற்குள் எப்படி குழந்தை ஒன்று கை, கால்களை முன்பக்கமாக மடக்கி இருக்கிறதோ, அப்படித்தான் இவர்களும் படுத்துள்ளார்கள் என்பதேயாகும். பின்பு காலப் போக்கில், உதாரணமாக மத்தியகாலத்தில் [middle ages], சுகாதாரம் ஒரு முக்கிய பிரச்சனையாக வந்து, அடைத்த மெத்தைகளுடன் கூடிய படுக்கை சட்டங்கள் பொதுவானவையாக வழக்கத்திற்கு வந்தன [Bedframes with stuffed mattresses became common]. மேலும் சங்க இலக்கியமான ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரி அந்த காலத்திலேயே உறங்கும் முன்பு, வசதியாக படுக்க, இரவி உடை [nightie] அணியும் மரபு இருந்ததை, மணமான மகளிர், பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, மென்-மையான பருத்தி ஆடையாகிய துகில் அணிகிறார்கள் என்பதன் மூலம் எடுத்து காட்டுகிறது.

அன்றில் இருந்து இன்று வரை நாம் தினமும் உறங்குகிறோம், விடுமுறை நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் உறங்கி மகிழ்கிறோம். உறங்குவது என்பது ஆனந்தமான விடயம் தான். ஆனால் நாம் ஏன் உறங்குகிறோம் என்று தெரியுமா? உறக்கம் நமக்கு ஏன் அவசியம் என்று தெரியுமா? உறக்கம் பற்றிய நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் விளக்கங்கள் கட்டாயம் நாம் அறிய வேண்டும். அப்போதுதான் நாம் உறக்கத்தை ஒரு சீராக்கவும், உறக்கமின்மையை தவிர்க்கவும் முடியும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 02 தொடரும்

உணவின் துவர்ப்பும் புளிப்பும் புதினம்


உப்பு:உப்பு அதிகமானால் ஏற்படும் உடற்கோளாறு என்ன என்று கேட்டால், 'உயர் இரத்த அழுத்தம்என்ற பதிலைத்தான் பெரும்பாலும் நாம் சொல்லுவோம்இதில் சரிபாதிதான் உண்மைஉயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டபின்உப்பினைச் சேர்த்துக்கொள்வது அதன் தீவிரத்தை அதிகரிக்கும்எனவேஉங்கள் மருத்துவர் உங்களை உப்பைக்குறைக்கும்படி ஆலோசனை கூறினால்கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்.
ஆனால்சரியான அளவு இரத்த அழுத்தமுடையவர்கள்உப்பினைச் சேர்த்துக்கொள்வதன் காரணமாக அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுவிடும் என மருத்துவ உலகம் கருதவில்லைஇதைப்படித்ததும் மகிழ்ச்சியடைந்துவிட வேண்டாம்.ஏனெனில்உடலில் உப்பு அதிகம் சேர்வதற்கும் மற்றும் பல உடற்கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதுஅவை, Stroke எனப்படும் வாதநோய்உடல் பருமன்உடல்/உள்ளுறுப்புக்கள் வீக்கம்சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல் (ஆஸ்டியோபோரோசிஸ் ) ஆகியவற்றிற்குப் பெருமளவில் காரணமான வில்லன்உணவிற்குச் சுவைகூட்டும் கதாநாயகனான உப்புதான்.

உலக அளவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில்வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உப்பினை அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதுமிகவும் புகழ் பெற்ற ஆராய்ச்சியான 'INTERSALT Study' யானது உயர் இரத்த அழுத்தத்திற்கும் உப்பிற்கும் உள்ள தொடர்பை நிறுவ இயலவில்லையானாலும்உப்பிற்கும் வாதநோய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறுநீரகச் செயலிழப்பிலும்அதிக உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியப்பங்கு வகிக்கிறதுஉடலுக்கு மிக முக்கியத் தேவையான தாதுப்பொருளாகிய கால்சியம் உடலில் உப்பு அதிகம் சேருகையில்சிறுநீருடன் பெருமளவு கலந்து வெளியேற்றப்படுகிறதுஇது சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாவதோடு எலும்புகள் வலுவற்றுப் போகவும்எளிதில் எலும்பு முறிவு ஏற்படவும் வழிவகுத்துவிடுகிறது. (கால்சியம்தான்எலும்புகளையும் பற்களையும் வலுவாக வைத்திருக்க முக்கியக் காரணி என்பது நாம் அறிந்ததே!)
உடலில் உப்பு அதிகம் இருப்பதுகால்கள் வீங்குதல்உடலின் உள்பாகங்கள் வீக்கமடைதல்கண்களைச் சுற்றி உப்புதல் இவற்றிற்கும் காரணமாகிறதுஇத்தகைய வீக்கம்நமது சீரணத்தை சரிவர நடத்துகின்ற சுரப்பிகளான ஈரல்கணையம் முதலியவற்றிலும்சிறுநீரகத்திலும்கூட ஏற்படக் கூடும்.
உடல் பருமன் என்பது இன்று உலகளாவிய சிக்கலாகக் கருதப்படுகிறதுஇதிலும் முக்கியப்பங்காற்றுபவர் திருவாளர் உப்புதான் என்றால் வியப்பாக இருக்கிறதா?
ஆம்உப்பினை அதிகம் சேர்த்துக்கொண்டால்உடலில் நீரின் தேவை அதிகரிக்கிறது. 'உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கணும்..' என்ற சொலவடை நினைவுக்கு வருகிறதாஉண்மைதான்உடலில் உப்பின் அளவு அதிகரிக்கையில்உடல் சேமித்துவைக்கும் நீரின் அளவும் அதிகரிக்கிறதுஉப்பைக்குறைத்தால் உடல் எடையும் தன்னால் குறைந்துவிடும்இயற்கை உணவுகள் உண்டால் (சமைக்காத பழங்கள்காய்கறிகள்எடை இறங்குவது இதனால்தான்உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டுவது உப்பைக் குறைப்பதுதான்.
நினைவிருக்கட்டும்இயற்கை எதையுமே சமச்சீராக வைத்திருக்கத்தான் விரும்புகிறதுஉடலில் உப்புசர்க்கரை இரண்டும் அதிகமாவது ஆபத்தென்றால்மிகவும் குறைவதும் ஆபத்துத்தான்அடிசன் நோய்வயிற்றுப்போக்குவிபத்தினால் ஏற்படும் இரத்த இழப்புசில குடல் தொற்றுநோய்கள் இவற்றிற்கு உப்பினை உணவில் சேர்ப்பது மிகவும் தேவைஇக்கோளாறுகள் உள்ளவர்கள் உப்பினைத் தவிர்த்தால் நிலைமை விபரீதமாகிவிடும்.

உணவில் இலேசாக உப்பைச் சேர்த்துச் சமைப்பதில் தவறில்லைதான்ஆனால்முதலில் குறிப்பிட்டவாறுபதப்படுத்தப் பட்ட உணவுகள் (உப்பு அதிகமாகச்சேர்க்காவிட்டால் உணவைப் பதப்படுத்த இயலாது), உப்பு தூவிய வறுவல் வகைகள்அதிக மசாலாப்பொருட்கள் சேர்த்தகாரமான உணவுப்பொருட்கள், Bakery Items என்று சொல்லப்படும் Bread, Bun, Biscuits முதலியவை (குறிப்பாக உப்பு தூவியவைஇவற்றைத் தவிர்ப்பதுடன்தயிர்/மோர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் உண்பதுகாய்கறிகளுக்கு மிகுந்த சுவையூட்டக் கருதி அதிக உப்புக்காரமிட்டு எண்ணெயில் வதக்குவது இவற்றைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
குளிர்காலத்தில் புளிப்பு சுவைகோடைகாலத்தில் புளிப்பு சுவை கொண்ட மோர்பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம்அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம்இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாதுமீறி எடுத்துக்கொண்டால்உடலில் உள்ள "அக்கலைன் சிட்ரைட்அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ்மார்புச்சளிஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.                அதனால்குளிர் காலத்தில் "கூல் டிரிங்ஸ்மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம்ஏன்... புளிப்பு சுவை கொண்ட 
வைட்டமின்'சி'  பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.
⥈⥈⥈⥈⥈⥈⥈⥈⥈