ஒளிர்வு-(11)- புரட்டாதி த்திங்கள்.சிந்தனை ஒளி:
நாம் வாயைத் திறக்கும் பொழுதெல்லாம்  உள்ளத்தை திறக்கிறோம்.
இன்றைய நாளை இறுகப் பற்றிக் கொள், நாளை நாளைப் பற்றி அதிகம் நம்ப வேண்டாம்.
யார் யார் எதில் உயர்ந்தவர் என்பது இறப்பிற்கு பின்னே தெரியும்.
மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையில் உள்ள முட்டையைப் போன்றது.
துணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும்.
வாதாடப் பலருக்குத் தெரியும், உரையாடுவது சிலருக்குத் தான் தெரியும்.
                  -to contact..manuventhan@hotmail.com

நாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன?......(01)ரொரொண்டோ   நகரில் பெருகி நிற்கும் ஆலயங்களில் மத்தியில்  ஒரு காளியம்மன் ஆலயம்.தேர்த்திருவிழாவுக்கு முதன்நாள் இரவு சப்பறத் திருவிழா வுக்கு சென்று வீடு திரும்பிய நான் என்னுடைய முக்கிய அடையாள அட்டையினை  கைப்பையுடன் ஆலயத்தில் தவற விட்டதனை உணர்ந்தேன்.மறுநாள் அதிகாலையில் ஆலயம் சென்று விசாரித்தபோது,தாம் பிஸி,பின்னர் வரும்படி என்னைதிருப்பி அனுப்பினர்.இரண்டு நாட்கள் கழிந்தபின்னர் அங்கு நான் சென்றபோதும்,இதே பதிலை வழங்கினர்.நம்பிக்கையினை இழந்த நான் அவ் அடையாள அட்டைக்குரிய அலுவலகம் சென்று,இலவசமாக விண்ணப்பித்து,தற்காலிக அட்டையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.மூன்று வாரங்களில் மேற்படி ஆலயத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் எனதுகைப்பையையும்,அடையாள அட்டையையும்,கிடைத்துள்ளதாகவும்,வந்து பெற்றுக்கொள்ளும்
படியும் கேட்டு இருந்தார்கள்.மகிழ்ச்சியுடன் சென்ற என்னிடம்,பதிலாக 500 டொலர் காசு கொடுங்கள் அல்லது 1500  டொலர் பெறுமதியான பூசை   ஒன்றை எடுத்துச் செய்யுங்கள் என்று கோரினர்.
திகைத்து நின்ற என்னிடம் தொலைபேசி இலக்கத்தினை வாங்கி என் பொருளைத் தந்து விட்டனர்.
  ""அர்த்தமுள்ள இந்து மதம் என்னசொன்னது?"".....................சிவமணி,சிவப்பிரகாசம்.

மனிதனே……….வெற்றி நிச்சயம்-------------------------------------------கவிஞர் ஞானசித்தன்
உன்
கண்ணாடி மனதில்
கவலைகளெனும் தூசி
படியாமல் பார்த்துக்கொள்

உன்
இரும்பு நெஞ்சத்தில்
சோம்பலெனும் துரு
பிடிக்காமல் பார்த்துக்கொள்

உன்
தெளிந்த சிந்தனை ஓட்டத்தில்
எதிர்மறைஎண்ணங்களான
பாசி படராமல் பார்த்துக்கொள்

உன்
வெள்ளை மனதில்
கர்வமெனும் கறைசேராமல்
பார்த்துக்கொள்

சோம்பலை சாம்பலாக்கு
அலைபாயும் மனதை அடக்கு
முடங்கி கிடக்கும்
உன் திறமையை முடுக்கிவிடு
கட்டிக்கிடக்கும்
உன் ஆற்றலை கட்டவிழ்த்து விடு
வெற்றி நிச்சயம்.

மனிதனின் சிரிப்பின் வகைகள் :
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகக்காரன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
இடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி
தெரியாது என்று சிரிப்பவன் நடிகன்
இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி
கண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்
சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்
இழவு கண்டுசிரிப்பவன் அரக்கன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்

கோலா கொடுக்கும் கொடுமைகள்
கொக்கோ கோலா கார்பன்டைஆக்ஸைடு கலக்கப்பட்ட ஒரு மென்குடிபானம். இதில் பாஸ்பாரிக் அமிலம், காஃபீன், மக்காச் சோளத்திலிருந்து உண்டாக்கப்படும் சர்க்கரைக்கலவை, இயற்கைச் சுவைகள் மற்றும் வண்ணம் கொடுக்கும் நிறப்பொருட்களும் இருக்கின்றன.

ஒரு லிட்டர் கொக்கோ கோலாவில் இருக்கும் 140 மிகி பாஸ்பேட் நமது உடம்புக்குள் கால்சியம் செல்வதற்கும், அதன் வளர்சிதைமாற்றதிற்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது. நல்ல எலும்பின் அடர்த்திக்கு கால்சியம்தான் தேவை. இங்கு உண்டாகும் கால்சியம்,பாஸ்பேட்டினால் இந்த வேலையைச் செய்ய முடியாது. எலும்பின் அடர்த்தி குறைந்தால் ஓஸ்டியோபோரோஸிஸ் உண்டாகிறது.

கொக்கோ கோலாவில் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் எல்லா நவீனப் பதனிடப்பட்ட உணவுகளிலும் பாஸ்பேட் நிறைந்துள்ளது. இவையெல்லாம் நமது உடல் நலத்துக்கு மோசமானவையே.
ஹார்வர்ட் பொது சுகாதாரப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆராச்சியின்படி, கொக்கோ கோலாவை தொடர்ந்து குடித்த இளம் பெண்களுக்கு விளையாடும் போது, கொக்கோ கோலா குடிக்காத பெண்களைவிட ஜந்து மடங்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
கொக்கோ கோலாவில் உள்ள பாஸ்பரஸ் அமிலம் பற்களின் எனாமலில் உள்ள கால்சியதை நீக்குகிறது. இங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இது கொக்கோ கோலாவுக்கு மட்டுமல்ல, பாஸ்பேட் உள்ள எல்லா மென்குடிபானங்களுக்கும் பொருந்தும். நாள் முழுவதும் மெதுவாக உறிஞ்சி இரசித்துக் குடிக்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்களின் வாய் எப்பொழுதும் அமிலத்தன்மை நிறைந்ததாகவே இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எனாமல் சேதப்பட்டு, காரியஸ் நோய் வருகிறது.
எச்சரிக்கை:கொக்கோ கோலா அல்லது பாஸ்பேட் நிறைந்த மற்ற பானங்களைக் குடித்தவுடன் பல்லைத் தேய்க்க வேண்டாம். உடனடியாகப் பல் தேய்த்தால் கால்சியம் இழப்பு அதிகமாகிவிடும்.
கொக்கோ கோலா உருவாக்கும் செலவைக் குறைப்பத்ற்காக 1985 முதல் மக்காச் சோளத்திலிருந்து உருவாக்கப்படும் இனிப்பு (சீனி, பழச்சர்க்கரைக் கலவை) உபயோகப்படுத்தப் படுகிறது. இதில் இரண்டு ஆபத்துக்கள் இருக்கின்றன. இரத்தச் சர்க்கரையின் அளவு கூடும். அதிக சீனியும், பழச்சர்க்கரையும் ஈரலில் கொழுப்பாக மாற்றப்படும். எடை கூட, சர்க்கரை வியாதி வரும் ஆபத்தும் கூடும். இந்த மக்காச் சோள இனிப்புப் பாகு மரபணு மாற்றப் பட்ட மக்காச் சோளத்திலிருந்தும் வரலாம்.

பழச்சர்க்கரை ஈரலில் வளர்சிதைமாற்றம் அடைகிறது. மதுவும் சுற்றுப்புறச் சூழலால் உடம்பில் சேரும் நச்சுப்பொருட்களும் ஈரல் வழியாகத்தான் வெளியேற்றப் படுகின்றன. ஈரலின் வேலைப் பளு மிக அதிகமாகிறது.

அதிகமாக கொக்கோ கோலா குடித்தவர்களின் இரத்த சர்க்கரை அளவு 80 மி.கிக்குக் கீழே வந்தால், அவர்கள் எப்போதும் சாப்பிடுவதை விட கூடுதலாகச் சாப்பிடுவார்கள். உணவு,அளவுக்கு அதிகமாக உண்பதனால் ஏற்படும் நோய்கள் உருவாகக் காரணமாகலாம்.
இனியாவது கோலாப் பானத்தினை தண்ணீர் போல் விழுங்கி நல வாழ்விலிருந்து விழாது எம்மை பாது காத்துக் கொள்வோமாக!