ஒளிர்வு-07

மூட நம்பிக்கைகளுக்கு முழுக்குப் போடுவோம்.
முழு மனிதனாகத் தலை நிமிர்வோம்.

POEM:- THE WORLD...............

I believe in a world where violence doesn’t exist
Where fists and pain are always amiss
I believe in a world where hate isn’t real
Where love and peace are all that you feel
I believe in a place where all are kin
Where nothing is considered wrong or as sin
I believe in a place where happiness roams
I believe in a place called home.
--Manuventhan-s

புதிய கண்டுபிடிப்பு:

(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)

 
சமீபத்தில் ஒரு நிறுவனம்,இந்த அருட்பெரும் ,இந்த நூற்றாண்டின் அரியதொரு கண்டுபிடிப்பினை நிகழ்த்தி உள்ளது....இந்த உபகரணதோடு வண்டி ஓட்டும் பொழுது விபத்துக்கள் வெகுவாக குறைக்க பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த கண்டுபிடிப்புக்கு மற்றும் கண்டுபிடிப்பாலருக்கு அனைத்து கணவன் மார்களும் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்....
அந்த அறிய கண்டுபிடிப்பினை கீழே உள்ள படத்தில் காணலாம்...
இதெப்படி இருக்கு.... நகைச்சுவை

ஆன்மீகம்:

இளங்கண்ணனின்.............இதயராகம்
இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான்.இருந்தால் உலகத்திலே அவன் எங்கே வாழ்கிறான்?
மதமாற்றம் என்னும் மயக்கம் தீர சிறுமுயர்ச்சி இம்முயற்சி வெற்றிபெற எல்லாம்வல்ல எம்பெருமானை வேண்டி நின்று வணங்கி ஆரம்பிக்கிறேன், இம்முயற்சி உச்சப் பயன்பெற இவ்விணைய வாசகர்களாகிய உங்களது ஒத்துழைப் பையும் வேண்டிநிற்கிறேன்.இதோ ஆரம்பிக்கிறேன் நன்றி.வாசகர்களாகிய உங்களது பங்களிப்பும் தேவை என்பதால் ஒருபட்டிமன்றப்பாணியில் தொடங்குகிறேன்.
ஆண்டவன் இருப்பது ஆலயத்திலா?அல்லது காவி,கதர்,மற்றும் வேறு கலர் ஆடைகளுக்குள்ளா?
சிறுவதில் கற்றது ஞாபகம் வருகிறது.கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று.அதாவது தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றும்.ஆண்டவனைப் பற்றி அபிராமிப்பட்டர் புவனம் 14 ங்கிலும் பூத்தவளே
என்று பாடியிருக்கிறார்.கிருபானந்தவாரியார் கூறும்போது பசுவின் உடம்பு பூராவும் இரத்தம் ஓடினாலும் அவ்விரத்தத்தைப் பாலாக்கித் தரக்கூடிய இடம் மடிதான் ஆகவே மடியைப் பிடித்துக் கறந்தால்தான் பால்வரும்.அதைவிட்டு செவியையோ அல்லது வாலையையோ பிடித்துக் கறந்தால் பாலுக்குப் பதிலாய் இரத்தம்தான் வரும்.அதுமாதிரித்தான் ஆண்டவன் உலகின் எல்லா இடங்களிலும் நீக்கமறக் பரந்திருந்தாலும் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கு முகமாக எழுந்தருளி இருக்குமிடம் கோவில்தான் என்று.இதேமாதிரி என்னுமொரு உதாரணமும் சொல்லியிருக்கிறார் சூரியனில் இருந்துவரும் வெய்யில் எல்லாஇடத்திலும்
சம அளவில் பரவியிருந்தாலும் அதிலிருக்கும் வெப்பம் அங்கிருக்கும் வைக்கோலையோ பஞ்சையோ அல்லது கடதாசியையோ எரிப்பதில்லை. ஆனால் சூரியகாந்தக் கண்ணாடிக்கூடாக வரும் அதேவெப்பத்தால்தான் மேல்குறிப்பிட்டவையை எரிக்கமுடியும்.
சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை எப்படி சூரியகாந்தக் கண்ணாடி ஓரிடத்தில் குவித்து வெப்பமூட்டி எரியூட்டுகிறதோ அதேமாதிரித்தான் ஆண்டவனின் அருளெங்கும் பரவி இருந்தாலும் கோவிலுக்குள் தான் அவனருள் குவிந்திருக்கிறது என்றார்.ஆகவே ஆண்டவன் கோவிலுக்குள் தான் இருக்கிறார் என்றுமுடிவாகிறது.
ஆனால் நான்தான் கடவுள் என்றுசொல்லி வாயால்  லிங்கம் எடுத்தும் விரலிலிருந்து  விபூதி தீர்த்தம் கொடுத்தும், கைக்குள் இருந்து தங்கம் வைரம் வைடூரியம் போன்ற பெறுமதிமிக்க பொருள்களை எடுத்தும், வேறுபல அற்புதங்கள் என்றுசொல்லி எதை எதையோ செய்து தான்தான் கடவுள் என்றுசிலர் தம்மை அறிமுகப் படுத்துகிறார்கள்.அதைநம்பி பலர் அவர்களை ஆண்டவன் ஸ்தா
னத்தில் வைத்து வணங்குகிறார்கள்.ஏன் தமக்கிருக்கும் குறை குற்றங்களை க் கூறி அதற்க்கு பரிகாரமும் கேக்கிறார்கள்.அதற்க்கு சாமிமாரும் அதை இதை செய்யவேணும் ,அதையும் தாமே செய்துதருவதாகக் கூறி பெரும்தொகைச் செல்வத்தைக் கேக்கிறார்கள் பக்தர்களும்கொடுத்து விடுகிறார்கள்.அதுமட்டுமல்ல அந்தச்சாமியார் தம்மிடம்  நீண்ட காலமாக தீர்க்கமுடியாமல் குறைகள் குற்றங்களை எல்லாம் தீத்துவைத்தார் என்று சாட்சி சொல்லி அந்தச் சாமியின் புகழைப் பரப்பிவருகிரார்க்ளே.இதை கல்லாதவர் முதல் கொண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்வரை செய்கிறார்களே! அதுமட்டுமல்ல, அவர்களுக்கு ஆகம முறைப்படி கோவில்கட்டி மூலஸ்தானத்தில் இருத்தி நெய்வேத்தியம் முதலியன படைத்து தீபம் கற்பூரதீபம் முதலியனகாட்டி  பூசைகள்பல செய்து பல்லக்கிலேற்றி ஊர்வலம் சுற்றிவந்து வழிபடுகிறார்களே.அப்போ ஆண்டவன் காவி மற்றும் கதர் ஆடைகளுக்குள்தானே இருக்கிறான்.இதுமட்டும் அல்ல கறுப்புவெள்ளை மற்றும் பலவர்ணக் கலர் ஆடைகளுக்குள்ளும் இருப்பவர்கள் தாங்கள்தான் உண்மையான கடவுளின் பிரதிநிதிகள், மற்றவர்கள் எல்லாம் கடவுள் என்றுநினைத்து சாத்தானை,பசாசை மற்றும் கெட்ட இச்சை கொண்ட தேவதைகளை வழிபடுகிறார்கள் என்றும் அதனால் துன்பப்பட்டு துவழ்கிறார்கள் என்றும் இவர்கள்தம்மிடம் வந்தால் தாங்கள் அந்தச் சாத்தானிடமிருந்தோ அல்லது அந்தப்பிசாசிடமிருந்தோ ,கேட்டதேவதைகளிடமிருந்தோ அவர்களைக் காப்பாற்றி விடுதலை அளித்து சுபீட்சம் அளிப்போம் என்கிறார்கள்.இச்செய்தியை ஒவ்வொரு
சிறைச்சாலைகளிலும் சென்று அறிவிக்கிறார்கள் மேலும்வயித்தியசாலைகளுக்குச் சென்று நொண்டிகளை நடக்கவைப்போம் ஊமைகளைப்பேசவைப்போம் குருடர்களைப் பார்க்கவைப்போம் செவிடர்களைக் கேட்கவைப்போம் என்னும் என்னென்ன தீராத வியாதிகள் இருக்கோ அத்தனையையும் தீர்த்துவைபோம் என்கிறார்களே! இவையத்தனையும் உண்மையென வேறுசிலர் சாச்சியும் சொல்கிறார்களே! அப்படியானால் அக்கலர் ஆடைக்குள் இருப்பவர்களும் ஆண்டவர்கள்தானே.எனவே என் பிரியமான இவ்விணைய வாசகர்களே ஆண்டவன் ஒருவன்தான் அவனால் ஒரேநேரத்தில் இருஇடங்களிலும் இருக்கமுடியாது
எங்கோ ஒருஇடத்தில்தான் இருக்கமுடியும் அவ்விடம் எது இதுதான் இப்போதைய வாதம்,ஆண்டவன் இருப்பது ஆலயத்துக்குள்ளா?பலவர்ணஆடைக்குள்ளா?எனி உங்கள் வாதத்தை தொடங்கலாம்.எனது தரப்புவாதம் அவ்வப்போது வரும்.நன்றி வணக்கம்.
உங்களிலொருவன் .இளங்கண்ணன்.