ஒளிர்வு-(23) புரட்டாதி த்திங்கள்-2012தளத்தில்:சிந்தனை ஒளி,//பறுவதம்பாட்டி// தமிழ் சினிமா//என் அம்மாவுக்கு அர்ப்பணம்//ஆன்மீகம்// இப்படியும் சில பெண்கள்// ஆராய்ச்சியாளரின்செய்திகள்,//குழந்தைகள் முன்னிலையில்...// தொழில்நுட்பம்,!//உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்// உணவின்புதினம்,//கணினி உலகம்//பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை// வயிற்றுக்கு உகந்த பொருட்கள்// எளிய திருமணம்//உங்களுக்குதெரியுமா?// இன்டர்நெட் எனும் பெருந்தெருவில்…// சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,//சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
 சிந்தனை ஒளி
*பாதி உலகம் அறியாமையினால் துன்புறுகிறது!
  மீதி உலகம் புத்திசாலித்தனத்தால் துன்புறுகிறது!
* நீ நிலைத்து நிற்க வேண்டும் என்றால்
  ஓடிக்கொண்டே இரு!
* எவரும் தோற்பதற்குத் திட்ட மிடுவதில்லை!
  திட்ட மிடுவதில்தான் தோற்கிறார்கள்!
* ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல!
   வீழ்ந்த பொழுதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை!
* நம்பிக்கை இழந்து மதம் மாறுபவன்
   நம்பி வந்தவளை மாற்ற மாட்டானா?

ஆராய்ச்சியாளரின்செய்திகள்


இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்: உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.  was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.

இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலை துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.

மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு மாணவி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்தார்.
 “இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.

ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியது,

 ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும்.

இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.

வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன் பின்னர் அவர் தனது உண்மையை தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.
செவ்வாயின் தரையில்:
நாசா: செவ்வாய் கிரகத்தின் தரைத்தளம் குறித்த புதிய தகவல்களை கியூரியாசிட்டி விண்கலத்தின் செம்கேம் (Chemistry and Camera) லேசர் காமரா அனுப்பியுள்ளது. இதுவரை கிடைத்திராத புதிய தகவல்கள் இதில் அடங்கியிருப்பதால் கியூரியாசிட்டியை கண்காணித்து வரும் செவ்வாய் கிரக அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியும், திரில்லும் அடைந்துள்ளனர். மிகவும் அருமையான முடிவுகளை கியூரியாசிட்டி அனுப்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கியூரியாசிட்டியின் செம்கேம் லேசர் கேமரா மூலம் இந்த லேசர் ஒளிக்கற்றைப் படங்கள். கிட்டத்தட்ட 500 ஒளிக்கற்றைப் படங்களை செம்கேம் அனுப்பிக் குவித்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிரக தரைத்தளத்தின் கட்டமைப்பு குறித்த உறுதியான, தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செம்கேம் லேசர் காமராவை கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளவரான லாஸ் அலமோஸில் உள்ள தேசிய பிளானட்டரி ஆய்வக விஞ்ஞானி ரோஜர் வெய்ன்ஸ் கூறுகையில்,இதைப் பார்த்தால் பூமியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மிகவும் அரிய தகவல் இது. இந்தப் படங்களைப் பார்த்து நாங்கள் பெரும் குஷியாகி விட்டோம். அந்தக் குஷியில் கொஞ்சம் சாம்பெய்னையும் கூட எடுத்து வாயில் விட்டுக் கொண்டோம் என்றால் பாருங்களேன் என்றார் படா குஷியுடன்.

அடுத்து இந்தப் படங்களையும், பூமியின் தரைத்தளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறார்கள் நாசா விஞ்ஞானிகள். மேலும், செவ்வாயில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளையும் படம் எடுத்து அனுப்பப் போகிறது கியூரியாசிட்டி. அதையும் பூமியில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கவுள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள படங்களின்படி, செவ்வாயின் தரைத் தளமானது, ஹைட்ரஜன் மற்றும் மெக்னீசியத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரத்த அழுத்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த:
உயர் ரத்த அழுத்த நோய்க்கும் சிறுநீரகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில் மெல்போர்னில் உள்ள போகர் ஐடிஐ இதயம் மற்றும் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இது தொடர்பாக மேற்கொண்டனர். அதாவது, சிறுநீரக ரத்தக் குழாய் சுவரில் உள்ள நரம்புகளில் ரேடியோ அதிர்வலைகளைச் செலுத்தி அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மாத்திரைகளை மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கானவர்களுக்கு இது மிகப் பெரும் நிவாரணமாக அமையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உணவில் உப்பு அளவைக் குறைத்தல், புகை பிடிப்பதைத் தவிர்த்தல், மது அருந்துவதைத் தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியன மூலம்தான் ரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

இது தவிர, தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலமும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க முடியும். தியானப் பயிற்சி மூலமும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் இவையெல்லாம் கடினமானவையாகக் கருதப்படுகின்றன. நவீன சிகிச்சை கண்டுபிடிப்பு முறையில், ரேடியோ அதிர்வலையை சிறுநீரகச் சுவர் ரத்தக் குழாய் நரம்பினுள் செலுத்துவதன் மூலம் அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
புற்றுநோயை குணப்படுத்தும் வைட்டமின் ‘ஏ: ஆய்வில் தகவல்
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயைக் கட்டுப்படுத்த பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இந்நோயை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை.

அந்த அடிப்படையில் தற்போதைய ஆய்வில், வைட்டமின்சத்து புற்றுநோயை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி ஆய்வு நடத்தி யார்க்சயர் புற்றுநோய் ஆராய்ச்சி மைய பேராசிரியர் நார்மன் மைட்லாண்ட் கூறியதாவது:-

புற்றுநோயை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மாலிங்னட் எனப்படும் செல்களாகும்.
 இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் திறன் வைட்டமின்க்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த வைட்டமின்யை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இதை உணவுச் சத்துக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்றாட உணவில் வைட்டமின்சத்து அதிகமுள்ள மீன், கேரட், கல்லீரல், சிவப்பு மிளகு, காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். அதற்காக, அதிக அளவு வைட்டமின்மாத்திரைகளை சாப்பிடுவது சரியான முறையல்ல.
வேற்றுக்கிரவாசிகளை நாங்க கண்டுபிடிச்சிருவம்
புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் போல எதிர்வரும் 40 ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகளும் கண்டுபிடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் மூத்த விண்வெளி விஞ்ஞானி லார்ட் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

பூமியை போன்று அங்கும் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து விடுவோம். அதைத் தொடர்ந்து அந்த கிரகங்களில் தங்கியிருக்கும் வேற்று கிரகவாசிகள் அடுத்த 40 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.