சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்

நந்தலாலா –
நடிகர்கள் - மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம், ரோஹினி, நாசர்
கதை-தன் தாயைத் தேடி மனநோயாளி ஒருவனும், எட்டு வயது சிறுவனும் செல்வது.
புள்ளிகள் -(50)


சிக்கு புக்கு-
நடிகர்கள் - ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம், ஜெகன், வையாபுரி, அனுப்குமார்
கதை- நகர்ப்புறத்தில் நடக்கும் யதார்த்தமான காதல் கதை இது.
புள்ளிகள்-(25)

ரத்த சரித்திரம் –
நடிகர்கள்-சூர்யா, விவேக் ஓபராய், ப்ரியாமணி, கிட்டி, கோட்டா சீனிவாசராவ், ஆஷிஷ் வித்யார்த்தி, சுபலேக சுதாகர், ராதிகா ஆப்டே, சத்ருஹன் சின்ஹா
கதை-ஓர் உண்மை சரித்திரம். வன்முறை நிறைந்து வழிகிறது.
புள்ளிகள்-(60)

கனிமொழி –
நடிகர்கள் - ஜெய், சஷான் பதம்ஸி.
கதை- புலம்பல்,சொதப்பல்,குதம்பல் எல்லாம் கலந்தது.
புள்ளிகள்-(15)

நகரம்-
நடிகர்கள்-சுந்தர் சி, அனுயா, வடிவேலு.
கதை-திருந்தி வாழ துடிக்கும் ஒரு ரவுடியின் கதை..
புள்ளிகள்-(70)

உத்தமபுத்திரன். -----
நடிகர்கள் -தனுஷ், ஜெனிலியா, விவேக்

கதை-புத்திரன் காதலுக்காகக் குடும்பமே ஒன்று சேர்ந்து போடும் நாடகமே.. குடும்பத்தோடு சிரித்து மகிழலாம்.
புள்ளிகள்-(75)

சீன முட்டைகள் ஜாக்கிரதை!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர்.

போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.

மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
பிறகு அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை.
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.

ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.
உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் இவை தடை செய்யப்பட்டிருப்பது நமக்கு சற்று ஆறுதலை கொடுத்தாலும்,நாம் கவனமாக இருக்கவேண்டியவர்களே!
- சுட்டபழம்

ஆன்மீகம்:-நரேந்திரன் (சுவாமி விவேகானந்தர்)

ஒரு முறை நரேந்திரன் ஆல்வின் ராஜ்யத்துக்குச் சென்றார். அங்கு ஆண்ட ராஜா அவரை விருந்தினராக உபசரித்துத் தன துஅரண் மனையில் தங்கச் செய்தார். ஒருநாள் ராஜா நரேந்திரனிடம் சுவாமிஜி! எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இதனால் என் நிலை என்னவாகும் என்றார்? இதைக் கேட்ட நரேந்திரன் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ராஜாவின் தந்தை படத்தைக் கழற்றிவரச் செய்து அதன் மீது யாரேனும் ஒருவர் எச்சில் துப்புங்கள் என்றார்.இதைக் கேட்ட அனைவரும் அங்கு இருந்து விலகிச் சென்றனர்.

உடனே நரேந்திரன் ""ஏன் இதில் வெறும் காகிதமும், வர்ணக் கலவையும் தானே உள்ளது. பின் ஏன் எச்சில் துப்புவதற்கு மறுக்கிறீர்கள்? காரணம் இது உங்கள் மகாராஜாவின் உருவம், அதனால் மரியாதை கொடுக்கிறீர்கள். அது போலவே மக்கள் கடவுளை உருவத்தில் பார்க்கின்றார்கள். யாரும் கல்லே, மண்ணே செம்பே என்று கடவுள் வடிவத்தின் முன் நின்று வேண்டுவதில்லை என்று கூறினார்.இதைக் கேட்ட ராஜா நான் திருந்தினேன் எனக்கூறி நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டார்.

பறுவதம்பாட்டி----அங்கம் -01

உரையாடல்: ஒருதொடர் :

கனடாவில் மகன் வீட்டில் வாழும் பறுவதம் பாட்டிக்கு காதிலியந்தப் புதினம் கிடச்சதிலையிருந்த்து கையும் ஓடலை, காலுமோடலை. இதை எப்பிடியும் மகள் வீட்டில் வாழும் மனிசன் காதிலை போட்டு விடுவம் எண்டு போனிலை பலமுறையும் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை.
"ம்...பக்கத்தில இந்த மனுசன் இருந்தா ஏன் இந்தப்பிரச்சனை!வீட்டில மேள் இருக்கிறாளாக்கும். அவள் வீட்டில் இருக்கும்வரை இந்த மனுசன் போன் எடுக்கமாட்டார்". பாட்டி தனக்குள் முணுமுணுப்பது எனக்குத் தெளிவாக கேட்கிறது.
பாவம் அவர்கள், கனடா வந்ததிலையிருந்து இப்படித்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதோ டெலிபோனே ஒலிக்கிறது. மீண்டும் பாட்டியின் குரல்.
"கேட்டியலே புதிசா தீபம் என்ற சஞ்சிகை வருகுதாமே?
கனடா வந்ததிலிருந்து இங்கயுள்ள தமிழ் ஊடகங்களெல்லாம் ஒன்றும் விடாமல் உள்வாங்கியதன் பலனாக பெரும் வித்துவான் போல்பேசப்பழகிவிட்ட பறுவதம் பாட்டியிடம் ஒன்று சொல்லி ஒன்பது கேட்பதில் ஆர்வம் உள்ளவர் ஏழுமலைத்தாத்தா. அவரும் சர்வசாதாரணமாகவே "டொராண்டோவிலைதான் எத்தனை நியூஸ் பேப்பர்,எத்தனை சஞ்சிகைகள்,எத்தனை ரேடியோக்கள்,எத்தனை தொலைக்காட்சிகள் என்றே அடுக்கிக்கொண்டே போனவரை தடுத்த பாட்டியும் விடவில்லை.
"அ..அ..அத்தனையும் இருந்து இப்ப அறிவில கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறியளோ? பாட்டியின் சொல்லடி தாத்தாவின் வாயைமூடச்செய்திருக்கவேண்டும். பாட்டி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.
"முற்றும் அறிந்த ஔவையாரே தான் கற்றது கைமண்ணளவு என்று கூறும்போது நாம் எந்த மூலைக்குள் என்று சொல்லுங்கோ பார்ப்போம். மேலும் அவர் "நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்,தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு."என்று வேற சொல்லிவைச்சிருக்கிறார்.
நாங்கள் வளர்ந்த ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இங்கை இருக்கிற வசதிகளைப் பயன்படுத்தி எங்களை வளர்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. அதுகளை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது. எங்கட ஆட்களிட்ட இருக்கிற திறமைகள் இப்படியான நாடுகளில்தான் சாதனைகள் படைச்சுக்கொண்டு இருக்கு. யாருடைய முற்போக்கு முயற்சிகளாக இருந்தாலும் உற்சாகப்படுத்துபவர்களாக நாங்கள் இருக்கவேணுமே அல்லாமல் இடைஞ்சலாக இருக்கக்கூடாது.
எத்தனை ஊடகங்களும் வரட்டும் . அனைத்தையும் வரவேற்போம். அத்தனையும் நுகர்வோம். வளரப்போவது நாமும் நம்மினமும் தானே .
பாட்டியின் குட்டிப்பிரச்சங்கத்தை இரசித்துக்கொண்டிருந்த தாத்தாவுடன் நானும் அவவின் இரசிகனாக இணைந்துகொண்டேன். பாட்டியிடம் காணப்படுகின்ற இப்படியான முற்போக்கு சிந்தனைகளே எனக்குப் பாட்டி மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி வைத்திருந்தது.


ஊடகம் என்பது பலகோடி சக்தி படைத்த கதிரவன் போன்றது. அவனாலே உலகம் இயங்குகிறது. திறன் மிக்க கலைத்துறையாக இருந்தாலென்ன, பலமிக்க அரசியலாக இருந்தாலென்ன அவர்களின் எதிர்காலம் ஊடகத்துறையிலேயே தங்கியுள்ளது.
ஒரு கலைப்படைபாளி மேடையில் சிலநிமிடப்பாத்திரமாக இருந்தாலும் அதற்காக பலநாட்கள் பலமணிநேரம் கடுமையான பயிற்சி செய்தே அதனை ஒப்புவிக்கிறான். அதேபோலவே ஒரு சஞ்சிகையும் பலமான பணிகளைக்கடந்தே அது உங்கள்முன் தவழ்கிறது.
வாழுக சஞ்சிகைகள்! வளர்க வாசகர்கள்!
-------------------- பேரன், செ.மனுவேந்தன்

நகைச்சுவை:

பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
----------------------------------------------------------

பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
--------------------------------------------------------

டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..
-------------------------------------------------------

டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?

கேலிச்சித்திரம்: மனிதன்மாறிவிட்டான்

ஆன்மீகம்:விவேகானந்தர்

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும்> அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும்> இறப்பு> பிறப்பு> இரவு> பகல்> இன்பம்> துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர்.. அன்பு> புனிதம்> கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். கடவுள் அவனை;; மனக்கண்ணில் நாம் காணவேண்டும்> ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்> அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு> எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால்> நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே> குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள்> குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா..

செயல் நன்று> சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும்> சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும்> நன்மையும் தீமையும்> அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா> அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம்> ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்..
-விவேகானந்தர்.

வினாடிக் கதை: அவனும் ஒரு நண்பனே!

ஏனோ தெரியவில்லை.அவனை எனக்குப்பிடிக்கவில்லை.தினசரி என் அலுவகத்தில் அவனை நான் சந்தித்தாலும் அவனுடன் பேச எனக்கு ஏனோ விருப்பமில்லை.அவனை அருகில் சந்திக்கும் போதெல்லாம், பாராமுகமாய்சென்றிருக்கிறேன்.

அன்று ஒருநாள் வேலையின்போது வந்த தொலைபேசியில் ,வந்த துயரச் செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. மேசையில் சாய்ந்துவிட்டேன்.

சிலநிமிடங்கள் கழிந்திருக்கும்.இதமான காற்று என்னை வருடஎன்தலையை நிமிர்த்திப்பார்க்கிறேன். என்னால் வெறுக்கப்பட்டவன் விசிறியால் விசுக்கியபடி, எனக்காக கையிலே கோப்பிக்கப்புடன் நிண்டு கொண்டிருந்தான்.

கவிதை: நாம்தமிழர் (#1)

ஒற்றுமைக்காக
ஒழுங்கமைக்கப்பட்ட
ஒன்றுகூடல்
ஒத்தகருத்தின்மையால்
ஒடிந்து
ஒழிந்தது