சினிமா வில் இன்று...காணொளி[VIDEO ]


இன்று சினிமாவிலிருந்து, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ,தனுஷ், ஐஷ்வர்யா ல்ட்சுசுமி, ஆனந்தி,அதிதி பாலன் , எஸ் ஜே சூர்யா , அஜித், அனிகா , ஸ்ரீகாந்த் , விஜய், அசின் , ராய் லக்சுமி , சூர்யா, ஆர்யா தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன.

சிரித்து நலம் பெற நகைச்சுவை
தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:77

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


சில ஆஃப்ரிக்க மக்களின்
 முக தோற்றம் 
உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்றினான்.உலகில் உள்ள மனித இனங்கள் எல்லாம், ஆஃப்ரிக்காவில் இருந்து பிரிந்து சென்றவை என்பதை முன்பு பார்த்தோம்.அது மட்டும் அல்ல தமிழர்களைப் போன்ற தோற்றம் கொண்ட ஆஃப்ரிக்கர்களையும் நாம் காணமுடியும்.குறிப்பாக,சோமாலியர்கள்,எதியோப்பியர்கள், எரித்திரியர்கள் போன்ற இனங்களில்,தமிழர்களின் முகச் சாயலைக் கொண்ட பலரை நாம் காணலாம்.ஆகவே ஆஃப்ரிக்காவிற்கும் திராவிடர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பு உள்ளது என்பதை நாம் முற்றாக புறம் தள்ள முடியாது.உதாரணமாக எதியோபியானை காணும் ஒருவர் அவரை தமிழர் என தவறுதலாக அடையாளம் காணலாம்.ஏனென்றால் தமிழர்,எதியோப்பியர் இருவரினதும் சாயல் ஒரே மாதிரி இருப்பதே.சில திராவிட குழுக்கள் சில ஆபிரிக்க குழுக்களுடன் நெருங்கிய உறவு இருக்கலாம்.இந்த எண்ணம் சரியா பிழையா என்பது மேலும் ஆய்வு செய்ய வேண்டியது.இப்படியான கருத்து ஒரு காலத்தில் செனேகல்[Senegal] அரசியல் வாதிகளால் ஊக்கமளிக்கப் பட்டது.அது மட்டும் அல்ல தமிழ் நாட்டின் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் .. அறவாணன் அவர்களால் சில புத்தகங்கள் வெளியிடப்பட்டன.அதில் முக்கியமானது "திராவிடரும் ஆஃப்ரிக்கரும்“Dravidians and Africans” என்ற தொகுப்பு.இந்த தொகுப்பு பல படங்களை கொண்டிருப்பதுடன்,அவை முருக வழிபாடு கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருப்பதை தெரியப்படுத்துவதுடன்,அங்கு வேல்[ ஈட்டி],மயில் போன்றவை தமிழ் நாடு,இலங்கையில் உள்ளவை போன்று ஒத்து போகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து,ஒரே ஆரம்ப மொழியை
சில ஆஃப்ரிக்க மக்களின்
 முக தோற்றம் 
பேசி,ஒருமித்த கலாச்சாரம்,கருத்தாக்கம்,மரபு, நம் பிக்கை,ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்பார்கள்.இப்படி ஆரம்பித்த இனம்,பிறகு வெவ் வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும்,அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால்,கடைசி வரை அவர்கள் அதே இனமே.ஆகவே தான் தமிழர்,தெலுங்கர்,மலையாளி,துலு,கன்னடக்காரர்,போன்றோர்கள் அவர்களுக் கிடையில் இப்ப உள்ள மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி,அனைத்து திடராவிடமொழி பேசு பவர்களையும் ஒரே கூட்டம் அல்லது இனம் என்கிறோம்.இதற்கு காரணம் இவரகள் எல்லோரும் ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி,ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் என்பதால் ஆகும்.

ஆகவே நான்காவது கருதுகோளான ஆதியில் ஆஃப்ரிக்காவில் இருந்து தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல் களே தமிழர் என்றால்,தமிழருக்கும் ஆஃப்ரியருக்கும் இடையில் பல கோணங்களில்,அதாவது மொழி,பண்பாடு,மரபு, நம்பிக்கை,போன்றவற்றிற்கு இடையில் ஒரு அடிப்படை ஒற்றுமை இருக்கவேண்டும்.மேலும் அவர்கள் ஆஃப்ரிக் காவில் இருந்து தென் இந்தியா வந்தார்கள் என்பதற்கும் சரித்திர சான்றுகள் வேண்டும்.ஏன் என்றால் அவர்கள் குமரிக்கண்டத்தில் இருந்தோ அல்லது மேசொபோடமிய,சிந்து சம வெளியில் இருந்தோ,மீண்டும் ஆஃப்ரிக்கா போயிருக்கலாம்

பெரும் அளவு இவை பற்றி முழுமையாக ஆராயப்படவில்லை என்றாலும் அங்கொன்று இங்கொன்றாக சிலர் தமது கருத்துகளை /சில சான்றுகளை சுட்டிக்காட்டி உள்ளார்கள்.உதாரணமாக "The story of India"by Michael Wood ,"Dravidians and Africans"by K.P. Aravanan,கலையரசனின் "நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!",மேலும் Runoko Rashidi அவர்களால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் போன்றவைகள் ஆகும்.

தென் இந்தியாவும் மற்றும் செனெகல் மாலி,சூடான்,எதியோபியா,சோமாலியா போன்ற கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகள் ஒரே நில நேர்க்கோட்டில்[same latitude] இருக்கிறது.அது மட்டும் அல்ல இந்தியா சமுத்திரம் மட்டுமே அவையை பிரிக்கின்றன.மேலும் மிக பண்டைய காலத்தில் இந்தியா உப கண்டம் ஆஃப்ரிக்காவுடன் இணைந்து இருந்தது என புவியியல் வல்லுநர் கூறுகின்றனர்.

அது மட்டும் அல்ல,தமிழ் செவி வழிக்கதை/பழங்கதை அப்படி ஒன்று இருந்ததையும் அங்கு செழித்து ஓங்கிய நகரங்கள் கடலில் மூழ்கியதையும் குறிப்பிடுகிறது.இது,இந்த பெரும் வெள்ளத்தின் தெளிவற்ற  நினைவு தான் சங்க பாடலில் ஒரு மேல்விளக்கமாக சிலப்பதிகாரம் போன்றவற்றில் தரப்பட்டுள்ளது என ஊகிக்கலாம்.

சில தமிழர்களின்
முக தோற்றம்
இந்தியாவில் இருந்து மலேசியா வரை நீண்டு இருந்த வெப்பமண்டலம் அல்லது உப வெப்பமண்டலத்தில்,குறிப்பாக ஆஃப்ரிக்க கண்டத்தில் உயர் விலங்கினமான மனித குரங்கினம் பரிணமித்தது என்பார்கள்.

மொகஞ்சதாரோ ஹரப்பா பகுதிகளில் கி மு 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் அதியுயர் நாகரிகம் அடைந்து இருந்தனர் என்று முன்பு நாம் பார்த்தோம்.ஆகவே அவர்கள்,இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என்றால் கட்டாயம் வட-மேற்கு எல்லைப்புறத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்கலாம் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்,அவர்கள் எந்த  வட-மேற்கு பகுதியில் இருந்து வந்தார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.மேலும் இந்த திராவிடர்களின் எந்த உறவினர்,குருதித் தொடர்புடையோர் அங்கு விடுபட்டனர்? அல்லது அவர்கள் வேறு திசை நோக்கி புலம் பெயர்ந்தனரா? மற்ற இனத்தவர்களின் தாக்குதல்களால் இப்ப முற்றாக அழிக்கப்பட்ட  அல்லது இனஅழிவு செய்யப்பட்ட பண்டைய இனங்களான சுமேரியன்,காக்கேசியன்,எலமைட் மொழி குடும்பம்,பாஸ்குவேஸ்  (Basques) போன்றவற்றுடன் அல்லது கருநிறமுடைய நீகிரோ-ஆஃப்ரிக்கருடன் இந்த சிந்து சம வெளி மக்கள் தொடர்புடையவர்களா? அப்படியாயின் இவர்களில் எவர்களின் வழித்தோன்றல்கள் இப்ப இந்தியாவில் மட்டும் தப்பி பிழைத்து இருக்கின்றன? இப்படி பல கேள்விகள் எழலாம்.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01
பகுதி 78 வாசிக்க→   Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 78
பகுதி:78 தொடரும்