சிரிக்க.. சிரிக்க...... நோய் விட்டுப் போகும்


🤰கத்திரிக்காய் வாங்க போன அவளோட புருசன் லாரி அடிச்சு செத்து போயிட்டாராம்.
👩அய்யோ பாவம், அப்புறம் என்னாச்சு?
🤰வீட்டுல இருந்த முருங்கைக்காயை வச்சு சாம்பார் வச்சாளாம்.
 →→→→→→→→→→→→→→→→→
👩மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
👦கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு.
 →→→→→→→→→→→→→→→→→
👩மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
👦கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...
 →→→→→→→→→→→→→→→→→
👩மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
👦கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!
 →→→→→→→→→→→→→→→→→
👩மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு,
நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.
👦கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
 →→→→→→→→→→→→→→→→→
சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக்கு மனு  கொடுத்தனர்.
♔நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.
👴சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.
 →→→→→→→→→→→→→→→→→
சர்தார் இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார். சர்தார் கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.
 →→→→→→→→→→→→→→→→→
👴சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.
🕴பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.
👴சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.
 →→→→→→→→→→→→→→→→→
👴சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.
( நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)
 →→→→→→→→→→→→→→→→→
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து (சேர்த்து)சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.
 →→→→→→→→→→→→→→→→→
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'

சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. 

போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
 →→→→→→→→→→→→→→→→→

நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடீரெண்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது. சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய்'' என்று எழுதியிருந்தது..

தொகுப்பு:கஜல்விழி ,பரந்தாமன் 

ஆலங்கட்டி மழை என்றால் என்ன?[அறிவியல்]



மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்?:ஆங்கிலத்தில் ஹெயில் ஸ்ரோன் [hail stone]  என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது.
பெரிய ஆலங்கட்டியை இரண்டாகப் பிளந்து ஆராய்ந்தால் பல அடுக்குகளைக் காணலாம். ஆலங்கட்டிகள் உருண்டையாகத்தான் இருக்கும். பனித்துகள் (ஸ்ரோஃப்ளேக்ஸ்) எப்போதும் அறுகோணப் படிகங்களாகக் காணப்படும். மாரிகாலத்தில் பனிமழை பெய்யும். ஆனால் ஆலங்கட்டி மழை வருஷத்தில் எந்தப் பருவத்திலும் பெய்யலாம்.
☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃ படித்ததில் பிடித்தது ☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃☃

சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / பகுதி 02A


 ஆடம்பர வழிபாடு  

  
              ஆன்மீகம் என்ற போர்வையில்   இந்த ஆடம்பர வழிபாடு என்பது  பெரும்பாலும்  பணம், பொருள் வசதி உள்ளவர்களால்  கடைபிடிக்கப்படும்  பாதையாகும்.  இந்த ஆடம்பர வழிபாட்டின்   கர்த்தா யார் என்றால் மடாதிபதி, பீடாதிபதி, குரு, ஆச்சாரியார் என பெயர் வைத்துக்கொண்டு பணம் படைத்தவர்களை, செல்வந்தர்களை தமக்கு சீடராக வைத்துக் கொண்டு,அவர்களிடம் பணம், பொருள்,  சொத்தை ஏமாற்றி வாங்கி  தான் சுகமாக வாழும் எண்ணம் கொண்டவர்கள் .
               இவர்களாகவே ஒரு பெயர் வைத்துக்கொண்டு, அல்லது சித்தர்கள்,ரிஷிகளின் பெயரை சொல்லிக் கொண்டு, அல்லது முதலிருந்து பெயர்பெற்றவரின் அடுத்த அவதாரம் என்று கூறிக்கொண்டு அதற்கு  மடம், பீடம் என பெயர் வைத்துக்கொண்டு  தங்களை மிகவும் சக்தி உள்ளவர்கள் போல் உலகில் காட்டி கொள்வார்கள். அரசியல் தலைவர்கள் தனக்கு கீழ் தொண்டர்களை வைத்து கொள்வதுபோல் ,  இந்த போலி குருமார்கள் தனக்கு கீழ் சீடர்களை வைத்துக் கொண்டு,  நாடெங்கும்  மன்றங்களையும்,  கிளை மடங்களையும், அமைத்து கொண்டு,அங்கங்கே சின்ன சாமியார், பெரிய சாமியார், தலைமை சாமியார் என பதவிகளை நியமித்து,ஒரு தனி வழிபாட்டு வியாபாரம் செய்து வருபவர்கள்.

:அடுத்த பகுதி 2B  படிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /2B   
  முதலிலிருந்து படிக்க Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...:01

விளைநிலம்



வியர்வை ஓடும் விளைநிலம்
விலையில்லா
உணவளிக்கும் உறைவிடம்
விவசாயி உள்ளவரை
காத்திருக்கும் விளைநிலம்
விட்டு கொடுக்க முடியாத
கற்பகம்
விழி மூடி மௌனமாய்
விலைகொடுத்து வாங்க வேண்டாமே!

உயிர்கள் உண்டாக
பெண்மைகள் இல்லை என்றால்
உனக்கும் அழகான உயிர்
கிடைத்துவிடுமா?
உணவு உண்டாக
விளைநிலம் இல்லையென்றால்
உன் வாழ்வும் நிலைத்துவிடுமா?

வீணான விதண்டா வாதம் மென
விலகியே போவீர்கள் எனில்
விரைவிலேயே வந்துவிடும் பட்டினி
இருளில்லா வாழ்வுக்காய்
இன்றே செயல்படுவோம்
ஓங்கியே உலகமெங்கும்
வறுமை நீங்கட்டும்!

🖎காலையடி,அகிலன் 






பங்காளி கிணறு விற்ற கதை:


கந்தன் என்பவர் சோமர் என்பவரிடம். இருவருக்கும் பொதுவாக இருந்த ஒரு கிணற்றை, பணம் கொடுத்து முறைப்படி எழுதி தனக்குச் சொந்தமாக வாங்கிக் கொண்டார்.

சோமருக்குக் கொஞ்சம் கவலைதான், கிணறு கைவிட்டுப் போனது. சோமர் ஒரு கபட புத்தி உள்ளவர். வீட்டுக்குச் சென்ற சோமர் கந்தனை தொலை பேசியில் அழைத்து,
" அடடா, நான் ஒன்றை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன். நான் உங்களுக்கு விற்றது கிணற்றை மட்டும்தான்; உள்ளே உள்ள தண்ணீரை அல்ல! தண்ணீர் இன்னும் எனக்குத்தான் சொந்தம்" என்று போட்டார் ஒரு போடு.
கந்தன் "அப்படியா?"
"ஆமாம்"
"அப்போ?"
"நீங்கள் கிணற்றில் அள்ளி எடுக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீருக்கும் லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் எனக்கு தினசரி பணம் தர வேண்டி இருக்கும்"
"அப்போ சரிங்க. நான் தருகின்றேன். கிணற்றுக்குள் எவ்வளவு உங்கள் தண்ணீர் இருக்கின்றது என்று அளந்து சொல்லுங்க; பின்னர் குறைந்தால் நான் எடுத்தது என்று சொல்லப் படாது"
"நாளைக்குச் சொல்கின்றேன்"

சோமர் கிணற்றின் விட்டம்,ஆழம் எல்லாம் அளந்து கணக்குப் பார்த்து சரியாக எத்தனை லீட்டர் என்று கண்டு, கந்தனை நேரிலேயே போய் சந்தித்து,

"கந்தன், கிணற்றுக்குள் 22 538  லீட்டர் தண்ணீர் இருக்கிறது. நீங்கள் எப்பவும் அள்ளலாம், ஆனால் பணம் மட்டும் ...."
"சரிங்க, பிரச்சனையே இல்லை"
கந்தனுக்கு கிணற்றில் அள்ள, அள்ள நீர் ஊறி ஒரே மடடத்தில்தான் நிற்கும் என்பது தெரிந்த விடயம்.
சோமர் மனதுக்குள் தனது வெற்றியை நினைத்து சிரித்தபடியே,
"நல்லது, சந்திப்போம்"

சோமர் போக வெளிக்கிடவேகந்தன்,
"கொஞ்சம் பொறுங்க சோமர்"
"என்ன விடயம்?"
"கிணற்றுக்குள் இருப்பது முழுவதுமே உங்கள் தண்ணீர் தானே?"
"ஆமாம், அதில் என்ன சந்தேகம்?"
" 22 538  லீட்டரும் உங்களுடையது?"
"ஆம்"
"கிணறு மட்டும்தான் என்னுடையது?"
"ஆமாம், அதுதான் முடிவாகி விட்டதே!
"அப்படி என்றால், எனது கிணற்றில் உங்கள் தண்ணீரை நான் வைத்துப் பாதுகாப்பதற்கு நீங்கள் எனக்கு நாளாந்தம் வாடகை தர வேண்டும்"
"என்னா ... "
"ஒரு லிட்டருக்கு 10 சதம் படி ஒவ்வொரு நாளும் 2254 ரூபா தர வேண்டும்"
"கந்தன்..."
"உங்களுக்கு வாடகைப் பணம் தர இஷ்டம் இல்லை என்றால் ஒரு சொட்டு நீரும் இல்லாமல் கிணற்றில் இருந்து அப்புறப் படுத்தி எடுத்துச் செல்லலாம்"
"கந்தன்........!"
"அத்தோடு தண்ணீர் எடுக்க பம்ப், பைப்புகள் போட்டு எனது கிணற்றைப் பாவிக்க மேலதிக கட்டணமும் உண்டு!"

சோமர் ஆளை விடடால் போதும் என்று ஓட, ஓட , கந்தன்,
"சோமர், இறைத்த பின்னர் புதிதாய் ஊறி வரும் தண்ணீரும் உங்களுடையது தான், உங்களுடையதே தான்! கொஞ்சம் நில்லுங்க..!"


(கோரா-quora-வில் இருந்து எடுத்து மெருகூட்டப்பட்டது.)
கூட்டல் : செல்வதுரை, சந்திரகாசன்