எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திரிகோணமலை]போலாகுமா?

 திருகோணமலை/Trincomalee
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
திருகோணமலை அல்லது திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.
இலங்கையின் கீழ் கரையில் அதாவது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.
திருக்கோணமலையில் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

பிரித்தானியர் ஆட்சி

1957 வரை திருக்கோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. 1950 களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன். சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருக்கோணமலையே பிரித்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோணேச்சரம்
இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜ என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை

கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான். கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர். அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.

கன்னியா வெந்நீரூற்று
கன்னியா வெந்நீரூற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 - 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும்.
தமிழ் வரலாற்றின் படி, பத்துத் தலை படைத்த இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும் ஐதீகம் உண்டு.
தற்போது பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று நீராடுகின்றனர்.

வரலாறு 

 திருகோணமலை மரபுரிமைகள் நிறைந்ததும், ஆரம்ப வரலாற்றுக் காலகட்டம் முதல் வாழ்ந்த மனிதர்களின் சான்றுகள் நிறைந்ததுமான பிரதேசமாகக் கருதப்படுகின்றது. இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்திலிருந்து அந்நியர் ஆட்சிக் காலம் வரை வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. சமவெளிப் பிரதேசமாகக் காணப்படுகின்ற இந்த மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள கற்குகைகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்தமைக்கான பல சான்றுகள்  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசேடமாக இங்கு அமைந்துள்ள இயற்கையான துறைமுகம், சேருவில பிரதேசத்தில் இயற்கையாக அமைந்துள்ள செம்புச் சுரங்கம் போன்ற விடயங்கள் காரணமாக திருகோணமலை மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரதேசமாக விளங்குகின்றது. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியினுள் சேருவில பிரதேசத்தில் இருந்த செம்புச் சுரங்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் செம்பு வர்த்தக ரீதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பாவனையில் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்பு அகழ்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், அவற்றை உருக்குகின்ற இடங்கள், உருக்குவதற்காகப் பயன்படுத்தும் அடுப்புகள் என்பன தொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பிரதேசத்தில்  அமைந்திருக்கும் திருகோணமலை இயற்கைத் துறைமுகம் தவிர்ந்த கடந்த காலங்களில் பாவனையில் இருந்த ஏனைய பல சிறு துறைமுகங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. திருகோணமலைத் துறைமுகம் புராதன காலத்தில் கோகண்ண துறைமுகம் என அழைக்கப்பட்டதாகவும், இலங்கையிலேயே உள்ள மிகப் பெரிய இயற்கைத் துறைமுகம் எனவும் பிரசித்தி பெற்று இருந்தது. புராதன காலந்தொட்டு மேலைத்தேய மற்றும் கீழைத்தேய நாடுகளை இணைக்கும் வர்த்தகத் தொடர்பு மையமாகவும் விளங்கிய இத்துறைமுகம் சுற்றிவர மலைகளால் சூழப்பட்ட ஒரு வளைகுடா போன்று அமைந்திருப்பதனால், சீரற்ற காலநிலைகள் காரணமாக கப்பல்களுக்குச் சேதமேற்படாதவாறு காப்பதற்கான ஒரு சிறந்த பாதுகாப்புப் பிரதேசமாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்து மகா சமுத்திரத்தில் மிகவும் பாதுகாப்பாகவும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த துறைமுகமாகவும் விளங்குவதாக மேலை நாட்டவர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆகையால் துறைமுகம் சார்ந்த பிரதேசத்தில் தமது கோட்டைகளை நிறுவினார்கள். தற்போது எஞ்சியுள்ள பிரெட்றிக்  கோட்டையை ஒல்லாந்தர் நிர்மாணித்துள்ளதாகவும், கடந்த காலம் தொடங்கி இன்று வரை மிகவும் பாதுகாப்பானதொரு கோட்டையாக இது விளங்குகின்றது. விசேடமாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலந் தொடங்கி செயற்பாட்டில் இருந்த கிழக்கு மாகாண பிரதான பாதை திருகோணமலையில் இந்த துறைமுகத்தில் முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 


📂செ.மனுவேந்தன்

🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்


🔻🔻🔻🔻🔻🔻🔻


[மேலும்  இலங்கை,இந்திய,உலக  செய்திகளுக்கான  வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர்  links இறுதியில்  இணைக்கப்பட்டுள்ளது.]

இலங்கையில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில் [+40=]1,683       பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 823 ஆகவும், 849         பேர் வைத்திய கவனிப்பிலும்,  01 நிலை கவலைக்கிடமாகவும்  உயிரிழந்தோர் எண்ணிக்கை  [+01=]11 ஆகவும் உயர்ந்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
இலங்கைப் பாராளுமன்றை கலைத்தல் மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தை புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்ற வேளையில் 14 மோட்டர் குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் ​நேற்று (02) மீட்கப்பட்டுள்ளன.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
அக்கரைப்பற்று-ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வெடிக்க வைத்தனர்.கடந்த யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டவை என சந்தேகிக்கப்படும் பொதியில் ஆர்.பி.ஜி-04, கிளைமோர் குண்டு-02, 60 மில்லி-02, 81 மெகசின்-12, 81 மெகசின் கைக் குண்டு-02 ஆகிய இருந்தன.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
தமிழ்நாடு கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து கடல் மார்க்கமாக சட்ட விரோதமான முறையில் நேற்று (01) அதிகாலை 33 வயதுடைய தந்தை மற்றும் 8 வயதுடைய மகள் ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.விசாரணைகள் முடிந்தவுடன் குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
கிளிநாெச்சி – முகமாலை முன்னரங்கு பகுதியாக இருந்த பகுதியில் இன்று (02) 2ம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டிருந்த அகழ்வு பணிகளின்போது ஒருவருடைய எலும்பு கூடு மற்றும் புலிகளின் சீருடை, ரவை கூடுகள், துப்பாக்கி ரவைகள் 34, மோட்டார் குண்டு, தகடு, குப்பி ஆகியன மீட்கப்பட்டிருக்கின்றது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
தமிழகத்தில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில்  [+1091=]24,586 பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை [+536=]13,703 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை [+13] 197 ஆகவும் உயர்ந்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
சென்னை, எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் வீடு மற்றும் தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
சென்னை : கருத்து சுதந்திரம் என்ற பெயரில், ஹிந்து மத விரோத போக்கை பின்பற்றும் படைப்பாளிகளுக்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாக, இந்து தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
'கொரோனா தொற்று உச்சத்திற்கு செல்வதால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட கோவில்களில், ஜூலை, 15 ம் தேதி வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில், அரசு எந்த நிர்ப்பந்தத்திற்கும் ஆட்படக்கூடாது' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
திருச்சி : உடும்பை கொன்று, வசிய மை தயாரித்ததாக, 'யு டியூப்'பில் பதிவேற்றம் செய்த திருச்சி, மணப்பாறை அருகே, மணியங்குறிச்சியைச் சேர்ந்தவர் வீர பெரியசாமி, 29. என்ற ஜோதிடரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
கனடாவில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில்  [+705 =]92,410 பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 50,357 ஆகவும், 34,658 பேர் வைத்திய கவனிப்பிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை [+69] 7,395                      ஆகவும் உயர்ந்துள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
கொரோனா வைரஸ் வைரஸ் பற்றிய முழுமை யான தகவல்களை, உலக சுகாதார நிறுவனத்துக்கு, சீனா, தாமதமாகவே தந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
அமெரிக்க போலீசால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, போராட்டங்கள் எட்டாவது நாளாக தொடர்ந்தது; பெரும்பாலான நகரங்களில், வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
சீனாவில், நேற்று முன்தினம், 15 பேரிடம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்ற டாக்டர் இறந்ததாக, செய்தி வெளியாகி உள்ளது.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
காபூலில் உள்ள மசூதிக்குள் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் வஜீர் அக்பர் கானின் மசூதி அமற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்யாஸ் நியாஜி உட்பட இரண்டு பேர் பலியானார்கள்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
ரஷியா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தி சோதிக்க 50 ராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இன்று வரையில் -பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை [+110,879=] 6,474,075 ஆகவும்,   மீண்டவர்களின் எண்ணிக்கை 3,006,831   ஆகவும் , ஒருநாளில் பலியானவர்கள் + 4,528 ஆக  381,718 பேர் மொத்தம் பலியாகியுள்ளனர்.
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
உலகில் சிலநாடுகளில்
🌍கொரோன வைரஸினால் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் தொகை,
🌎ஒருநாளில் பாதிக்கப்படடவர்கள் தொகை
🌐 இதுவரையில் இறந்தவர்கள் மொத்த தொகை ,
🌏ஒரு நாளில் இறந்தவர்கள் தொகை
 முறையே….. அமெரிக்கா- 1,881,205 +21,882  108,059  +1,134  
அமெரிக்கா- 🌍1,881,205 🌎+21,882🌐108,059🌏+1,134
பிரேஸில்- 556,668    +27,263   31,278  +1,232  
ஸ்பெயின்- 287,012   +294      27,127   +00
ரஷ்யா- 423,741   +8,863   5,037    +182
இங்கிலாந்- 277,985   +1,653   39,369   +324
இத்தாலி- 233,515 +318     33,530   +55
பிரான்ஸ்- 189,220 +00 28,940   +107
ஜெர்மனி- 184,091 +326     8,674  +56
இந்தியா- 207,191 +8,821   5,829    +221
நெதலாண்ட்- 46,647  +102     5,967  +5
சுவிஸ்- 30,874   +3  1,920    +00
சுவீடன்- 38,589   +775     4,468    +65
சிங்கப்பூர்- 35,836 +544       24     +00  
டென்மார்க்- 11,734   +35   580        +4 
நோர்வே- 8,455   +9  237   +1 

அவுஸ்திரேலியா- 7,221   +17 102 +00

                                               🔻🔻🔻02.06.2020

எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர இலங்கை போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி-அம்பன்பொல, அம்பகொவெவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின், 30 வயதுடைய தந்தையொருவர் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற ,தும்பங்கேணி, திக்கோடையைச் சேர்ந்த விவசாயியான 59 வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம்,   வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது .
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அத்தியாவசியமாக இயக்கப்படும் 2 பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்தும் முறைக்கான சோதனை துவங்கியுள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் என்ற கிராமத்தில் மகளை கொலை செய்துவிட்டால் அதிக செல்வம் சேரும் என  பெண் மந்திரவாதி கூறியதை கேட்டு தந்தை பண்ணீர் என்பவர் தனது 13வயது மகளை கழுத்து நெரித்து கொன்ற தொடர்பாக மந்திரவாதி,தந்தை உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தபோவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
சீன, இலங்கை உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
பாதாள உலக கோஸ்டியை கட்டுப்படுத்த இன்று முதல் இலங்கை முழுவதும் விசேட அதிரடிப்படை களத்தில் இறங்குகின்றது.

➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
இலங்கையில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில் [+10=]1,643       பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 811 ஆகவும், 821         பேர் வைத்திய கவனிப்பிலும்,  01 நிலை கவலைக்கிடமாகவும்  உயிரிழந்தோர் எண்ணிக்கை  [+01=]11 ஆகவும் உயர்ந்துள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ஐ.எம். மன்சூர் தொடர்ந்தும் பணியாற்ற திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
ஆறுமுகம் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற எவருக்கும் கொரோனா தொற்று காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் – பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
மட்டக்களப்பு வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாக்கியராஜா மேனகா என்ற மாணவி, ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என ஏசியதாகவும் அதனால் வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் ஜூன் 15ம திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு  காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி. றிஸ்வான் (01) உத்தரவிட்டார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
திருகோணமலை -கந்தளாய், சேருவில பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் பேராறு பகுதியைச் சேர்ந்த டி எல் சதாத் [52] வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியானதோடு, ஏ.எம்.மாஹாத் வயது (40)  பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
தமிழகத்தில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில்  [+1149=]22,333 பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை [+757=]12,757 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை [+13] 173 ஆகவும் உயர்ந்துள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று பஸ்கள் ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். நகை, துணிக்கடைகள் உள்பட பெரிய கடைகளும் திறக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைக்க தமிழக அரசு சார்பில் 2-ம் கட்டமாக ரூ.50 லட்சம் நிதியை எடப்பாடி பழனிசாமி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் வழங்கினார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த  [சிவராணி (29). திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை] பெண் போலீசை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிரானது என, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காட்மேன் வெப்சீரிஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
கனடாவில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில்  [+751 =]91,705 பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 49,726 ஆகவும், 34,653 பேர் வைத்திய கவனிப்பிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை [+31] 7,326             ஆகவும் உயர்ந்துள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இன்று வரையில் -பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை [+101,971=] 6,361,221         ஆகவும்,   மீண்டவர்களின் எண்ணிக்கை 2,899,983 ஆகவும் , ஒருநாளில் பலியானவர்கள் +3,009   ஆக  377,147 பேர் மொத்தம் பலியாகியுள்ளனர்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு நாட்டை அவமானப்படுத்துவது. அந்நாட்டைஇகழ்ந்து பேசுவது. அந்த நாட்டை மிக மோசமாக மிரட்டுவது. ரகசியங்களை வெளியிட போவதாக மிரட்டுவது, உளவு தகவல்களை வெளியிட போவதாக கூறுவது ஓநாய் வீரர்கள் படையின் முக்கிய ஸ்டைல் ஆகும்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
அமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா,’’ பங்கரில் ஒளிந்து கொண்ட ட்ரம்ப் உடனே வெளியே வரவேண்டும்’’ என முதல்முறையாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த யாழ்ப்பாணம் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் (வயது 37 ) என்பவர்  கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டு   பூரண குணமடைந்த நிலையில், சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு  கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
உளவு பார்த்த 2 தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை பாகிஸ்தான் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்தது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன  ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சையின்போது கோமா நிலைக்கு சென்றது. 32 நாட்கள் கோமாவில் இருந்து செயற்கை சுவாச கருவியில்  54 நாட்கள் ஆன நிலையில் அந்த குழந்தை உயிர் பிழைத்தது அங்கு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥
உலகில் சிலநாடுகளில்
🌍கொரோன வைரஸினால் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் தொகை,
🌎ஒருநாளில் பாதிக்கப்படடவர்கள் தொகை
🌐 இதுவரையில் இறந்தவர்கள் மொத்த தொகை ,
🌏ஒரு நாளில் இறந்தவர்கள் தொகை
 முறையே….. அமெரிக்கா-1,858,825   +21,655   106,921     +726
அமெரிக்கா- 🌍1,858,825 🌎+21,655🌐106,921🌏+728
 பிரேஸில்-529,018   +14,169  30,046   +732
ஸ்பெயின்-286,718   +209     27,127   +00
ரஷ்யா-414,878   +9,035   4,855    +162
இங்கிலாந்-276,332   +1,570   39,045   +111
இத்தாலி-233,197 +200     33,475   +60
பிரான்ஸ்-189,220 +338     28,833   +31
ஜெர்மனி-183,765 +271     8,618    +13
இந்தியா-198,370 +7,761  5,608    +200
நெதலாண்ட்-46,545   +103     5,962    +6 
சுவிஸ்-30,871   +9  1,920    +00
சுவீடன்-37,814   +272 4,403    +8
சிங்கப்பூர்-35,292 +408       24    +1
டென்மார்க்-11,699    +30 576 +2 
நோர்வே-8,446   +6  236 +00

அவுஸ்திரேலியா-7,204   +9  103 +00

                                                  🔻🔻🔻01.06.2020🔻🔻🔻


கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகுசேவைகள் இன்றிலிருந்து வழமைக்குத் திரும்பவுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
தொண்டமானின் அமைச்சுக்களான சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களுக்கு மேல் கலவரம் பரவி உள்ளது. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
ஜனாதிபதிபதியின் வெள்ளை மாளிகையை கலகக்காரர்கள் முற்றுகையிட்டதால் அங்கிருந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலத்திற்கு கீழ் உள்ள பதுங்கு குழிக்கு பாதுகாப்பு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், திரிபோஷா உற்பத்திக்கு கிடைக்கும் பிரதான தானிய வகையான சோளம் இன்னும் கிடைக்காத காரணத்தினால் ஜா-எல பகுதியில் உள்ள திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளது.

➼➼➼➼➼➼➼➼➼➼
இலங்கையில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில் [+00=]1,633       பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 801 ஆகவும், 822         பேர் வைத்திய கவனிப்பிலும்,  00 நிலை கவலைக்கிடமாகவும்  உயிரிழந்தோர் எண்ணிக்கை  [+0=]10 ஆகவும் உயர்ந்துள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் அதை செலுத்தி வந்த புலிகண்டிகுளம் கோமரங்கடவல பிரதேசத்தை சேர்ந்த [35] இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேசத்தில் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்று மண்ணுக்குள்  மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
நாவாந்துறை – காக்கைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் உக்கக் கூடிய திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
கொரோனா அச்சுறுத்லை அடுத்து மூப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு இலங்கை கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
இலங்கையிலும் குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கிருமிநாசினியைப் பயன்படுத்தி அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
தமிழகத்தில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில்  [+1149=]22,333 பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை [+757=]12,757 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை [+13] 173 ஆகவும் உயர்ந்துள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி இடி மின்னல் தாக்கியதால் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.இதனால் மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
➼➼➼➼➼➼➼➼➼➼
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அனைத்து பெரிய கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பஸ்சில் அனுமதி இல்லை என்றும் பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
விருகம்பாக்கம், இளங்கோ நகரில் கொரோனாவிற்கு 55 வயது மகள் இறந்த சோகத்தில், தந்தை[தியாகராஜன், 85.] யின் உயிர் பிரிந்தது.
➼➼➼➼➼➼➼➼➼➼
திருச்சியில், 'டாஸ்மாக்' கடையின் பூட்டை உடைத்து, 3.56 லட்சம் ரூபாய் திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
ராமநாதபுரம் : அரசு வேலை வாங்கி தருவதாக, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உட்பட [ஜார்ஜ் பிலிப், பிரகாஷ்] இருவரை, போலீசார் கைது செய்தனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
கனடாவில் கொரோனா வைரஸ்   பாதிப்பு இன்று வரையில்  [+757 =] 90,947 பேர் ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 48,879 ஆகவும், 34,773 பேர் வைத்திய கவனிப்பிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை [+222] 7,295             ஆகவும் உயர்ந்துள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இன்று வரையில் -பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை [+108,761=]6,259,243 ஆகவும்,   மீண்டவர்களின் எண்ணிக்கை 2,785,516 ஆகவும் , ஒருநாளில் பலியானவர்கள் +3,190 ஆக  373,696 பேர் மொத்தம் பலியாகியுள்ளனர்.
➼➼➼➼➼➼➼➼➼➼
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் நடந்துகொள்ளும் போலீஸ் கார் மூலமும் , குதிரையாலும் மக்களை மோதும் வெறியாட்டம்  காணொளியாக வெளிவந்துள்ளது. பொலிஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.
➼➼➼➼➼➼➼➼➼➼
அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பரிசோதனையில் வைத்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு உலகெங்கிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்தடுப்பூசியை உருவாக்கிய வல்லுநர் குழுவின் ஒரு அங்கமாக இந்தியாவைச் சேர்ந்த சந்திரபாலி தத்தா என்பவர் இருந்துள்ளார்.
➼➼➼➼➼➼➼➼➼➼
பாகிஸ்தானின் உளவு அமைப்புக்காக இந்தியாவை உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் 2 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.6 அலகாக பதிவாகியுள்ளது.
➼➼➼➼➼➼➼➼➼➼
உலகில் சிலநாடுகளில்
🌍கொரோன வைரஸினால் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் தொகை,
🌎ஒருநாளில் பாதிக்கப்படடவர்கள் தொகை
🌐 இதுவரையில் இறந்தவர்கள் மொத்த தொகை ,
🌏ஒரு நாளில் இறந்தவர்கள் தொகை
 முறையே….. அமெரிக்கா 1,837,165 +20,345     106,194     +637
அமெரிக்கா- 🌍1,837,165 🌎+20,345🌐106,194🌏+637
 பிரேஸில்-514,849   +16,409  29,314   +480
ஸ்பெயின்-286,509   +201     27,127        +2 
ரஷ்யா-405,843   +9,268   4,693    +138
இங்கிலாந்-274,762   +1,936   38,489   +113
இத்தாலி-232,997 +333        33,415     +75
பிரான்ஸ்-188,882   +257   28,802   +31
ஜெர்மனி-183,494       +200     8,605    +5 
இந்தியா-190,609 +8,782   5,408    +223
நெதலாண்ட்-46,442   +185           5,956    +5 
சுவிஸ்-30,862   +17     1,920          +1 
சுவீடன்-37,542   +429     4,395      +00  
சிங்கப்பூர்-34,884 +518      23      +00
டென்மார்க்-11,669     +36       574   +3 
நோர்வே-8,440   +3  236    +00

அவுஸ்திரேலியா-7,195   +10 103    +00

                                                                   
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
↶விரிவான செய்திகளுக்கு அழுத்தவும் ↷

⬐ [இலங்கை]வீரகேசரி ⬎
           https://www.virakesari.lk/

⬐ [இந்தியா]வெப்துனியா ⬎ 
      https://tamil.webdunia.com/

⬐ [இலங்கை]தினகரன் ⬎
  https://epaper.thinakaran.lk/Home/FullPage

⬐ [இந்தியா]மாலைமலர்  ⬎
https://www.maalaimalar.com/

⬐ சமூகம் காணொளிச்  செய்திகள்⬎   https://www.youtube.com/channel/UCorkJqjwtQMy3BObeN_kuFw
 samugam corona china
                    tags:-Aishwarya Rajesh Sanchita Shetty     sanmugam sri lanka ibc                Samantha  Oviya          Kalavani     Amy Jackson                 Chandini Tamilarasan                  
                    Srushti Dange               Taapsee Pannu             Hansika Motwani         Janani Iyer Pranitha    Nithya Menen              Shruti Haasan               
                    Rakul Preet Singh         Radhika Apte                Nandita Swetha                                Gayathrie   Varalaxmi Sarathkumar                    Mahima Nambiar        
                    Nazriya Nazim               Sri Divya     Catherine Tresa            Nikki Galrani                 Keerthy Suresh            
Aari             Atharvaa Murali           Arulnithi    Harish Kalyan                Vidharth     Vijay Sethupathi           Ashwin       Sivakarthikeyan                    Sri              
                    Udhayanidhi Stalin      Dinesh        Attakathi    Vijay Antony                 Vikram Prabhu             Gautham Karthik                    Ashok Selvan               
Bobby Simha                 Kathir         Madha Yaanai Koottam                  Naveen Chandra          Bramman   Koottam Kalaiyarasan
                    G. V. Prakash Kumar surya vijay karththik kamalhasan rajanikanth Srikanth suri vavelu
தேடல் துணைகள்: thamizh, tamil, sampanthar, vadakilakku, vadakku, kizhakku, arasu, maiththiri, ranil, muslim, hindu, jesu, pothai, heroyin, val, jaffna, kilinochchi, maddakkalappu, butticola , ponnampalam, malaiyakam thondamaan, tiger, koddiya, ilankai ,ceylon, sinkalese , unp, slfp, suren  ragavan, vigginesvaran,tricomalai , vavuniya, mullaitivu, mannar , puththalam, kandy,achchuvely araly, ariyalai, allarai, allaippiddi, alvay, alaveddy, anailaithivu
aththiyadi,avarankal, anaikkoddai, edaikadu, enuvil, erupalai, elakkanavaththai,elavalai, echchankadu, echchamoddai, evinai, uduppiddi, udivil urumpirai, urelu, eluthumadduval, elalai, oddakappulam, kachchay, kaddudai, kadduvan, kantharmadam, kantharodai, kamparmalai, karanavay, karanthan, karampon, karaveddi, kalvayal, kalviyankadu, kalapumy, kankesanthurai, kks, karainagar, kirimalai, kuppilan, kurunakar, kurumpasiddi, kerudavil, kerpeli, kerudavil, kerpely, kaithadi, kokkuvil, kodikamam, kommanthurai, kollankaladdi, kolumpuththurai, kondavil, koppai koyirkudiyiruppu, sankaththanai, sankanai, sankuveli, sandilippay,sarasalai, savakachchery,singanagar.siththankeny, sinthupuram, sillalai, siruvilan,siruppiddi,sundikkuly, suthumalai,sunnakam, chulipiram, choliyapuram, thachchanthoppu, thanankilappu, thavady,thirunelvely, thunnalai, thellippalai, thevapuram,thaiyiddi, thondaimanaru, tholpuram, nainadivu, nallur, navakkiry, navaly, nagarkovil, nayanmarkkaddu, naranthanai, navanthurai, nilavarai, nirvely, niraviyady, nunavil, nelliyady, pandaththeruppu, pandaththarippu, pannagam, paththameny, pointpirro, paruththithurai, palaly ,pannalai, panippulm, pasaiyur, palavy, puththur
puloly, puliyankudal, punnalaikkadduvan, periyavilan, ponnalai, madduvil, mandaidivu, mandaithivu, maruthanarmadam, mallakam, maravanpulavu, masiyappiddi, mathakal, mavaliththurai, maviddapuram, manippay,mirusuvil, mesalai, mulai, vaddukkoddai, vadamarachchi, vadaliyadaippu, vannarpannai, vayavilan, varany, vallipuram, valveddiththurai, varuththalaipilan, viyaparimulai,velanai thevu, punkuduthevu,