ஒளிர்வு-(18) வைகாசி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,/பறுவதம்பாட்டி/க..கவி...கவிதை/கனடாவில்......உறவு /ஆராய்ச்சியாளரின்செய்திகள்,/ சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க/தொழில்நுட்பம்,/உணவின்புதினம்,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/கர்ப்பகாலத்தில் முகப்பருவா?/சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,/சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
*உண்மைக்காக எதையம் தியாகம் செய்யலாம். ஆனால்,
  எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது!    
*பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல.
   கட்டுக்குள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு!
* புகையிலையில் பற்று வைத்தால் அது நெஞ்சில்
  புற்று வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்!
* நாம் எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கிறோமோ,
   அங்கே நமக்காக ஏமாற்றங்களும் காத்திருக்கும்!
* விட்டுக்கொடுக்க நினைப்பவன் கெட்டுப் போவதில்லை!
   கெட்டுப்போக நினைப்பவன் விட்டுக் கொடுப்பதில்லை!

கனடாவில்........உறவு


                       உறவு / uravu
“உறவு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு வலுவான ஒரு உறவுப்பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.
கனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின்உறவு”.
கணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர். குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது.
கனடியத் தமிழர் திரைப்படங்களில் இதுவரை இருந்த பெருகுறைகளான ஒரு முழுமையற்ற திரைக்கதை,சுறுசுறுப்பற்றதும்-பாவம் அற்ற  பேச்சுவழக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் என்பனபோன்றவற்றினை  தவிர்ப்பதில் திவ்வியராஜன் வெற்றி கண்டுள்ளமை அவருடைய இரண்டாவது திரைப்பட வெற்றிக்கு காரணமெனலாம்.
 பொதுவாக,எமது திரைப்பட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய கவனங்கள் இன்னும் மலையளவு உள்ளன. நம்பமுடியாத மாயாஜால சண்டைக் காட்சிகளும்,ஆடையில்லாத நடனங்களும் எல்லாத் திரைக்கதைகளுக்கும் அவசியம் என்பதில்லை. அவை இல்லாத பல இந்தியத் திரைப் படங்கள் கூட சாதனை படைத்திருக்கின்றன.அதேவேளை சம்பந்தமில்லாமல், தேவை இல்லாமல் அக்காட்சிகளை வில்லங்கமாக திரைக்கதையில் புகுத்தி படு தோல்வியில் தொலைந்த இந்தியத் திரைப்படங்களும் உண்டு.

திரைப்படங்களில் ஒரு முழுமையான திரைக்கதை, நகைச்சுவைநல்ல பின்னணி இசை,பாடல்கள்,நடிகர்கள்,தயாரிப்பு,இயக்கம்,கமரா என அனைத்தும் தரமானதாக அமையும்போது நிச்சயம் அப்படம் வெற்றியடையும்.
“உறவு” திரைக்கதையிலும் நாயகி ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்பது சில காட்சிகள் கடந்த பின்னரே உணர முடிந்தது. பின்னணி இசையிலும் பல இடங்களில் தொய்வு. வழமைபோல் குரலைத் தாழ்த்தியும்,அழுத்தியும் நம்மவர் மேடையில் பேசி நடிப்பதனை திரையில் தவிர்த்திருக்கலாம். இவை போன்ற ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும் இதுவரையில் வந்த எம்மவர் திரைப் படங்களில் “உறவு” முன்னணி வகிக்கிறது.
ஒரு இரசிகனின் பார்வையில் கருத்துக் கூறுகையில் நட்புக்காக நண்பர்களையும்உறவுக்காக உறவுகளையும்- அவர்களை திரைக்கு இழுத்து வந்து வெறும் பொம்மைகளாக வந்து செல்வோரை வந்து பார்த்து திரை அரங்குகளில் சிலமணி நேரம் செலவிடுவதற்கு  தமிழ் இரசிகர்கள்  தயாராக  இல்லைசில திரைப் படங்களில் தோன்றுவோர்கள் அவர்களின் பாத்திரம் என்னயாரோடு பேசுகிறார்கள் என்று எதுவும் புரிவதில்லை.
எனவேதான் நடிகர்களையும்நல்லகதைகளையும்  நாடிய திரைப் படங்கள் எம் மத்தியில் வரவேற்கப்படுகின்றனவெற்றியை தேடி அடைகின்றன.
 இந்தியத் தமிழ் திரைப் படங்கள் அவற்றின் உரையாடும் மொழி 50 ,60 களில் நீண்ட வசனங்களாகவும் இலக்கணத் தமிழாகவும் இருந்தன.70 களில் மிகவும் குறைந்த வசனங்களாகவும் உரையாடலில் இடைவெளிகளும் கொண்டு வெளிவந்தனஅப்படங்களை தற்போது எடுத்து பார்த்தால் பொறுமையினை இழந்துவிடுவோம்.ஏனெனில்  தற்போது விரைவான இயல்பான நடிப்பு சினிமா இரசிகர்களை கவர்ந்துகொண்டு இருக்கிறதுஇப்படிக் காலத்திற்கு காலம் கதை,வசனம்,நடிப்பு என்பனவற்றை மாற்றிக் கொண்டு வருவதன் முலமே இரசிகர்கள் மத்தியில் அவை இன்றும் வளர்ந்துகொண்டு இருக்கிறதுதமிழை மாற்றிப் பேசும்படி நாம் எதிர்பார்க்கவில்லைநாம் அந்தக் காலத்தில் நாடக மேடையில் பேசியதுபோன்றே இன்றும் பேசிக்கொண்டு இருப்பது பெரும் குறையாகவே தோன்றுகிறதுஆம்திரைக்கென்று ஒரு திரை மொழி எம் மத்தியில் உருவாகவேண்டும்அப்பொழுது தான் எமது சினிமாவும் எம் மத்தியில் வளர்ந்து நிற்கும்.    
------------------ theebam.com

ஆராய்ச்சியாளரின்செய்திகள்:

ஓம்” பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி: ஓம் என உச்சரிப்பதால்  ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்! இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை,சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது என்கின்றனர் அவர்கள்.
பெற்றோருடன் குழந்தைகள்:பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், குண்டாவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், பெற்றொருடன் இல்லாமல், தனியாக உறங்கும் குழந்தைகள் குண்டாவதாக கூறுகின்றனர்.

இதற்கு காரணம், பெற்றோர்கள் உடன் உறங்கும் குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.
இதனால், தொந்தரவின்றி அமைதியான தூக்கம் கிடைக்கிறது.
ஆனால், தொந்தரவான உறக்கம் உடல்பெருக்கத்துடன் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது, தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களை பாதித்து உடல்பெருக்கத்தை தூண்டும் என்கிறார்கள்.
இதுக்குறித்து டென்மார்க் நாட்டில் 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்தனர்.
அவர்களில் பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாக படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
          இந்த ஆய்வு தரும் முடிவுகள் என்னவென்றால், பெற்றொர் அரவணைப்புடன், இரவில் உறங்கும்போது தம்முடன் குழந்தைகள் உறங்கவைத்தால், அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும் அதுமட்டுமல்லாமல், உடல்பெருக்கத்தையும் தடுக்க முடியும் என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான மருத்துவர் நன்னா ஓல்சன்.

மேலும், தங்கள் குழந்தைகளை தங்களுடன் படுத்து கொள்ள அனுமதிக்காத பெற்றோரால் குழந்தைகள் புறக்கணிக்கப்படும் உணர்வுக்கு ஆட்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஓவர் வெயிட் ஆகவும் வாய்ப்புள்ளது.
பெற்றொர்களே இனியாவது குழந்தைகளை உங்கள் அரவணைப்பில் உறங்க வையுங்கள்.
உயரமான பெண்களுக்கு: ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் உயரமான பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுதும் நடத்திய ஆவுகளின் முடிவுகளின் படி அவர்கள் இந்த முடிவை எட்டியதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அந்த பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெற்றார்களா என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ப்ளாஸ் மெடிசின் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருவக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அலசப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் கருவக புற்று நோய் உள்ள 25,000 பெண்களும், கருவக புற்று நோய் இல்லாத 48,000 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு 5 செமீ உயர வளர்ச்சியிலும் 7% இவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக 165 செமீ உயரம் இருப்பவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பிருந்தால், 155 செமீ உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவாக உள்ளது.

கருவக புற்று நோய் வளர்ச்சியில் பெண்களின் உயரம் என்பதை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவி புரிவதாக ஆக்ஸ்பர்ட் பலகலை புற்று நோய் ஆய்வாளர் டாக்டர் கில்லியன் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உயரம் ஏன் கருவக புற்று நோய் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியாவிட்டாலும் சில விளக்கங்கள் கொடுக்க முடியும் என்கிறார் ரீவ்ஸ்.

உதாரணமாக உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு 'இன்சுலின்' மட்டம் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இன்சுலின் அளவுதான் மற்ற புற்று நோய்களைத் தீர்மானிக்கிறது, உதாரணமாக மார்பக புற்று நோயைக் கூறலாம்.

அல்லது உயரம் அதிகம் இருப்பதால் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும் நடைமுறையில் புற்று நோய் செல் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஆனாலும் எதிர்கால ஆய்வுகள்தான் இதனை தீர்மானிக்கவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
மூளைப் புற்றுநோய் :மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
மிக அதிக அளவில் வைட்டமின் சி கொடுக்கப்பட்டால் நோயாளியின் புற்றுக்கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும் அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் "சி' அதிக டோஸ் செலுத்த ஊசிதான் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது அதிகமாகும் என்று மருத்துவ உலகம் மகிழ்கிறது.