இவ்வாரம் புதிய படங்களும் ,உளம்கவர் திரைப்படத்தின் கதையும்

புதிதாக வெளிவந்த திரைப்படங்கள் 

படம்:டெடி 

 நடிகர்கள் :ஆர்யாசாயீஷா சைகல்மகிழ் திருமேனி

இயக்குனர்: சக்தி சவுந்தர் ராஜன்

கதைச் சுருக்கம்: ஒரு  கரடி பொம்மை(teddy bear)க்குள் ஒரு உயிர்(ஆவி அல்ல) புகுந்து தன் உடலை மீட்கப் போராடுகிறது. [குழந்தைகள் மட்டும் ரசிக்கலாம்].)

 வெளியீடு:12 மார்ச்  2021

புள்ளிகள்: 2/5

படம்: ராஜ வம்சம்

நடிகர்கள் : சசி குமார்நிக்கி கல்ராணிசசி குமார்

தம்பி ராமையாமனோபாலாராதா ரவி,ஆர் விஜய்குமார்

சதீஷ்ரமேஷ் கண்ணாரமேஷ் கண்ணாயோகி பாபு

 இயக்குனர்:கதிர்வேலு

கதைச் சுருக்கம்:கடந்த 15 வருடங்களாக நவீன தொழிநுட்பம் காரணமாக புவி வெப்பமடைதலால் பாதிப்படைந்த இயற்கையினை அதே தொழிநுட்பத்தை உதவியுடன்பாதுகாக்கப்  போராடும் ஒரு இளைஞனின் கதை.

வெளியீடு: 12 மார்ச்  2021

புள்ளிகள்: 3/5

படம்: தீதும் நன்றும்

நடிகர்கள் : அபர்ணா பாலமுரளி

இயக்குனர்: ராசு ரஞ்சித்

கதைச் சுருக்கம்: கொடுமைக்காரனாகிய தன் மகனைக் காக்க இறைவனிடம் தவமிருந்து பெற்ற வரமே   ,கொடுமைக்காரனையும் தந்தையையும் கொன்றொழித்த மகா பாரதக் கதை.

புள்ளிகள்: 3/5

வெளியீடு: 12 மார்ச்  2021

அற்புதம் திரைப்படம் - காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த கதை.

(அற்புதம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராகவேந்திரா லாரன்ஸ் நடித்த இப்படத்தை ஆர். எஸ். வெங்கடேஷ் இயக்கினார்.)

கதையின் நாயகன் அசோக் (ராகவா லாரன்ஸ்)  தனது நண்பர்களுடன் வெட்டியாகச் சுற்றித் திரிவதை தவிர வேறு வேலை  எதுவுமில்லை. ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து அவன்  வந்திருந்தாலும்அசோக்கிற்கு பணம் சம்பாதிக்கும் எண்ணமோ  அல்லது அவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எண்ணமோ இருந்ததில்லை.

 

 ஒரு நாள்அசோக் பிரியாவை (அனு பிரபாகர்) சந்தித்தபோது  அவளுடைய அழகு, பண்பு என்பவற்றால் ஈர்க்கப்பட்டான்   . அசோக் பிரியாவிடம்  அவன் காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறான்.

 

[இக்கலாச்சாரம்தான் இன்று தமிழ்நாட்டில் பல பெண்களின் கொலைக்கும்தற்கொலைக்கும்அவர்கள்மீதான வன்முறைக்கும் காரணமாக உள்ளது.]


பிரியாஅசோக்கில் காதல் கொள்ளவில்லை  என்றாலும்அவன்  முதலில்வாழ்க்கையில் ஏதாவது குறிக்கோள் இருக்கவேண்டும் ,கடுமையாக உழைக்க வேண்டும், அதனை  சாதிக்கவேண்டும்  என்று கூறிச் சமாளித்து விடுகிறாள். தான் சாதித்தால் அவள் தன்னைக் காதலிப்பாள் என்ற அவா அசோக்கின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் ஏற்படுத்துகிறது.

 

பல முயற்சிகளுக்குப் பிறகுஅவன் ஒரு மொபைல் துரித உணவு உணவகத்தைத் தொடங்க முடிவு செய்கிறான். வங்கி மேலாளராக இருக்கும் அரவிந்த் (குணால்) நிதியுதவி உதவியுடன் அசோக் படிப்படியாக தனது தொழிலை வளர்த்துக் கொள்கிறான். உண்மையில் ஏற்கனவே அரவிந்தும் பிரியாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பவர்கள் என்பது  அசோக்கிற்கு தெரியாத விடயம்.

 

அசோக்கின் வணிகம் ஹோட்டல்சூப்பர் மார்க்கெட்டுகள்ரியல் எஸ்டேட் போன்றவற்றில் விரிவடைகிறதுமேலும் அவன்  நகரத்தின் முன்னணி வணிகர்களில் ஒருவராக மாறுகிறான். ஒரு தொலைக்காட்சி சேனலுக்கான நேர்காணலின் போது​​அசோக் தனது வெற்றியைப் பின்தொடரும் உந்து சக்தியாக இருந்த தனது காதலைப்  பற்றி குறிப்பிடுகிறான். இதைக் கேட்டு பிரியா அதிர்ச்சியடைந்துஅரவிந்த் மற்றும் அசோக்கின் நண்பர்களை  இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுகிறாள். இருப்பினும்அரவிந்த் மற்றும் அசோக்கின் நண்பர்கள் அசோக்கிற்கு உண்மையை வெளியிட முடியவில்லைஏனெனில் அசோக் அவள் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தன்னை அழித்துவிடுவதாக கூறிக்கொண்டிருந்தான்.

 

அசோக் ஒரு பங்களாவைக் கட்டுகிறார்அவருடைய திருமணம் அங்கே நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். அரவிந்த்தும்  அசோக்கின் நிலையினை உணர்ந்து அவனைத்  திருமணம் செய்ய பிரியாவை நிர்பந்திக்கிறான்.

[ஆண்களுக்கு மட்டும் தான் ஆசை ,மனம்,என்றில்லை.பெண்களும் மனித இனம்தான்.அவர்களுக்கும் உணர்வுகள், விருப்பங்கள், குறிக்கோள்கள் உண்டு.ஆடு மாட்டை சேர்த்து வைப்பது போல், பெண்களின்  ஆசைகளில் மண்ணைப் போட்டு முடிவு எழுதிய பல பழைய திரைப்படங்கள் உண்டு.ஆனால் அது ஆண் ,பெண் இருவருக்குமே  சந்தோஷமான வாழ்விவைக் கொடுத்ததில்லை என்றே பெரும்பாலும் உணர்த்தியது.]

 

பிரியா விருப்பமில்லை   என்றாலும்அசோக்கின் தற்கொலை குறிக்கோளுக்குப் பயந்து அவனைத்  திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

[இந்த இடத்தில் இளையோர் சிந்திப்பதில்லை. திருமணம் என்பது பல்லாண்டு சந்தோசமாக வாழவே ஒவ்வொருவனும் விரும்புவான். ஆனால்   விருப்பமில்லாத  பெண்ணைக்  கட்டாயப்படுத்திக்  கல்யாணம் செய்வது என்பதுகாலமெல்லாம் ஒரு நரகக் குழியினுள் வீழ்வதற்கு  அவ் ஆண் தானே தனக்குத் தோண்டும் குழி ஆகும். இதே போலவே காதல் என்பதும் இருவருக்கும் இருக்கவேண்டியது. அதை விடுத்து ,நீ என்னை காதலிக்கவேண்டும்என்னில் என்னடி குறைகண்டாய் என்று வம்பிற்கு பெண்களை இழுப்பதானது  நீ உனக்கு நல் வாழ்வினைத் தேடவில்லை உன்மேல் நீயே தீயை மூட்டுகிறாய் என்பதே பொருள்.

 

மேலும் காதலிக்கும் வேளையில்  பழகியதால் ஆணில் குறை கண்டு கை விடும் பெண்கள் விடயத்திலும் சில இடங்களில் ஆண்களின் பழிவாங்கல் விசித்திரமாக இருக்கிறது. உன்னில் ஒரு குறை கண்டு செல்லும் பெண்நீ கல்யாணம் செய்தபின் எப்படி உன்னுடன் சந்தோசமாக இருப்பார்கள். இந்தளவில் விடை பெற்றது உன் பாக்கியமே என்று கருதாமல்பதிலாக அவர்கள் மேல் வன்முறையினை மேற்கொள்வது ஆண் தன் எதிர்காலத்தினை பாழாக்குவதே ஆகும்.]

திருமண நாளில்,  பிரியாவிற்கும் அரவிந்திற்கும் இடையிலான உரையாடலை அசோக் ஒட்டுக் கேட்டு அனைத்து உண்மைகளையும் புரிந்துகொள்கிறான் .தனது காதல் ஒரு பக்கமானது  என்பதனை உணர்கிறான். இறுதியில்அவன்  தனது திருமணத்தை ரத்துசெய்துபிரியாவை அரவிந்துடன் ஒன்றிணைத்து   திருமணம் செய்து வைக்கிறான்.

 [அசோக்கும் பிரியாவின் மேல் காதலில் வெறி கொண்டே இருந்தான் .அதுவே அவன் வாழ்வில்பெரும் வளர்ச்சிக்கு காரணமாயிற்று. அவள் விரும்பவில்லை என்றதும் ஒதுங்கிக்கொண்டான்.அது தான் மனிதாபிமானமும் நாகரீகமும். அதை விடுத்து இன்றய சில இளைஞர் போன்று பழி வாங்க புறப்பட்டிருந்தால் அவன் வாழ்வும் இன்று தொலைந்திருக்கும். இன்றய இளையோருக்கு நல்ல கருத்துக்களை இப்படம் வழங்கியிருந்ததால் இன்று நாம் இதை வழங்கியுள்ளோம்.]

தொகுப்பு:செ.மனுவேந்தன்

சிரிக்கச் சில நிமிடம் ........01

ரசிகை:அண்ணே என் குழந்தைக்கு பெயர் வையுங்க ?

 விஜய்: என் மனசை தொட்ட பெயர் "ஷோபா" ன்னு வையுமா.

பகுதி 07/ இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்

 


 "மரணம் குறித்த சொற்கள்[11 - 25]":

 

'இறப்பு' பொதுவாக 'சாவு' என தமிழில் அழைக்கப்படுகிறது. இறப்பு, இழவு என்பன இலக்கிய சொற்களாகும். சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது மரணம் என்ற சொல்லாகும். உயிரியலின் படி, "மனித வளர்ச்சி கருத்தரிப்பின் போதே தொடங்குகிறது". கருத்தரித்த கருமுளை பொதுவாக 'கரு' என குறிக்கப்படுகிறது.

உங்கள் பிள்ளை சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் வளர...

குழந்தையின் வயது மற்றும் பள்ளியில் தரம் அதிகரிக்கும் போது அனைத்து வகையான உடல் பயிற்சிகளிலும்  பங்கேற்பது பெரும்  அளவில் குறைகிறது. உடல் பயிற்சி  குடும்ப வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக இருக்க வேண்டியது  முக்கியம்.

Tamil Comedy Old Vs New Songs தமிழ் நகைச்சுவை-பழைய பாடல்களா, புதிய பாடல்...


அர்த்தமற்ற புதிய பாடல்களுக்குக் கிண்டலான விளக்கங்கள்.
Tamil Comedy Old Vs New Songs

தீட்டுமில்லை...! புதிருமில்லை..!!


தீட்டுமில்லை...! புதிருமில்லை..!!

 

சித்தர் சிந்திய முத்துக்களில் ........4/25

 


சிவவாக்கியம்-143

காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலை காலை யாச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர்
காலை மாலை அற்று நீர் கருத்துளே ஒடுங்கினால்
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!

"கார் கூந்தல் சரிந்து விழ"

  


"கார் கூந்தல் சரிந்து விழுந்து

காற்றோடு அது அலை பாய

 

புதிய படங்களும்,உளங்கவர் திரைப்படமும்


இவ்வாரம் வெளிவந்த படங்களும் , உள்ளம் கவர்ந்த ஒரு திரைப்படமும்


மார்ச் 2021 திரைப்படங்கள்

படம்:நெஞ்சம் மறப்பதில்லை 

நடிகர்: எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேஸ்சன்றா.

இமய மலையின் ரூப் குண்ட் மர்ம ஏரி:

 


'1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'

இந்தியாவில் இருக்கும் உயரமான இமயமலைப் பகுதி ஒன்றில், பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் ஓர் ஏரி அமைந்திருக்கிறது. அந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் சிதறிக்கிடக்கின்றன.

 

பகுதி 06 /:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்

  "மரணம் குறித்த சொற்கள் [1 - 10]"

 


பொதுவாக ஒரு நபர் இறந்துவிட்டால், அந்த துக்ககரமான நிகழ்வை மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொழுது, "செத்தார்' அல்லது "மரணம் அடைந்தார்" போன்ற வார்த்தைகள் பாவிப்பது பொதுவாக இல்லை, ஆனால் அதற்கு பதிலாக, "இறைவனடி சேர்ந்தார்" அல்லது  "காலமானார்" போன்ற வார்த்தைகள் பாவிப்பதை பார்த்திருப்பீர்கள். எல்லா சொற்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன என்றாலும், அதன் உட்கருத்து

இரவு-உயர் இரத்த அழுத்தம் ஆண்களுக்கு அல்சைமர் ஆபத்து

ஸ்வீடனில் இருந்து ஒரு புதிய ஆய்வு-பகலில் இருப்பதை விட இரவில் அதிக இரத்த அழுத்தம் உள்ள வயதான ஆண்களுக்கு (Alzheimer disease) அல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று கூறுகிறது.

 

ஆல்சைமர் நோய் எனப்படுவது நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும்- மெதுவாக ஆரம்பித்து நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் -ஒரு நாட்பட்ட நோயாகும். இது அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். பொதுவாக இதன் ஆரம்ப அறிகுறி சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல் அல்லது குறுகிய கால நினைவு இழப்பு ஆகும்.

 

கண்ணகியில் விழுந்த பழி -03சிலப்பதிகாரக் காலம், தமிழகம் பலவிதக் குழப்பங்கள் மலிந்த காலம், மூவேந்தரும் கட்டற்ற முடியாட்சியைத் தழுவிய காலம் என்று மேலே கூறினோம். அதுவரை அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த வேளாண் குடியினரும் வாணிகரும் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களின் இடத்தை, அரசனைப் புகழ்ந்தும் ஏத்தியும் ஒட்டுண்ணிப் பார்ப்பனர் பிடித்தனர். பிரம தேயங்களை முற்றூட்டாகப் பெற்றனர், வேள்வி வளர்த்துப் பெருஞ்செல்வம் ஈட்டினர். மனங்கசந்த வாணிகர்கள் வடக்கிலிருந்து வந்த சமணத்தைச் தழுவினர்.

 

சித்தர் சிந்திய முத்துக்களில் ........3/24

 


சிவவாக்கியம்-137


தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தான்மைஅற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே!!!

பெண்ணிடம் தூமை என்ற மாதவிலக்கு நின்ற பிறகுதான் அங்கெ கருவாகி, ஆண், பெண், அலி என்ற தன்மையற்ற பிண்டமாக உயிர் நிற்கின்றது. அதன் பின் அப்பிண்டம் சிசுவாகி கருவறையில் வளர்ந்து குழந்தையாக வெளிவருகிறது. அது வளர்ந்து வாழ்கையில் அடையும் இன்ப துன்பங்களை பெற்று தான் என்ற ஆணவத்தால் பல சஞ்சலங்களை அடைந்து மரணம் அடைகிறது. அத்தூமையால் ஆனா உடம்பில் உயிர் போன பின் பிணம் என்ற பேர் பெற்றது, தூமை அற்றதால் என்பதனை அறியுங்கள். ஆகவே தீட்டில்லாத உடம்பு சவமே!!!
******************************************* 

"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்""தூங்கையிலே உன் சிந்தனை வந்து

தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க

தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க

தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !"

 

புதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்

 


இவ்வாரம் வெளியான படங்களும் ,

ஒரு திரைப்படத்தின் கதையும்

இவ்வாரம் வெளியான படங்கள்

 

பகுதி 05/இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :

Death & Its Beliefs of Tamil

 "மதமும் மரணமும்"[சைவ மதம்  / இந்து மதம்]:

 


உலகின் மிக பழமையான மதமான, சைவ / இந்து மதத்தின் படி, மரணம் என்பது இயற்கையானது. முற் பிறப்பிலே செய்த பாவ, புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி, தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புக்களை அல்லது மறுபிறப்புகளை ஒரு ஆன்மா [soul] எடுக்கும்.