"தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 16

"FOOD HABITS OF TAMILS" PART /  "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள்"  / "Food Habits of Ancient Indus valley people or Harappans"  [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]

சிந்து சம வெளியில் வாழ்ந்த ஹரப்பான் தமது சமையல் குறிப்புகளை, அதாவது சேர்மானங்கள், செய்முறைகளை பதிந்து வைக்க வில்லை. சிந்து வெளியில் இருந்து பல முத்திரைகள் கண்டு எடுத்தாலும், அவை மிகச் சிறிய குறிப்புகளையே கொண்டிருந்தன. சுமேரியர் போல எந்த இலக்கியமும் அல்லது பெரிய குறிப்புகளும் அங்கு இதுவரை கண்டு பிடிக்கப்பட வில்லை. அது மட்டும் அல்ல, இன்னும் சிந்து சம வெளி மொழி சரியாக மொழி பெயர்க்கப்பட வில்லை. எனினும் அவை திராவிட மொழி அல்லது பழைய தமிழ் என்பதில் ஆய்வாளர்கள் பலரும், அதிகமாக எல்லோரும் உடன் படுகிறார்கள். இங்கு எழுத்து மூலமான சான்றுகள் இல்லாத நிலையில், சிந்து சம வெளி மக்களின் உணவு பழக்கங்கள் என்ன என்பதை அறிய எமக்கு அங்கு சமையல் பாத்திரங்கள், கருகிய உணவின் எச்சங்கள், விவசாய கருவிகள், மற்றும் படங்களுடன் கூடிய முத்திரைகள் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டனவா போன்ற கேள்விகள் எழுவது இயற்கையே.


அங்கு பல தரப்பட்ட அளவில், வடிவங்களில் பானைகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை அதிகமாக, பலதரப் பட்ட தானியங்களை அல்லது திரவங்களை சுமக்க, சேமிக்க பாவிக்கப்பட்டு இருக்கலாம்?மேலும் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட துளையிடப் பட்ட பானைகள் அதிகமாக பாற்கட்டி [சீஸ்] தயாரிக்க பாவிக்கப்பட்டு இருக்கலாம்?அத்துடன் அங்கு கண்டு எடுக்கப்பட்ட விளிம்புடன் கூடிய செம்பு மற்றும் வெண்கல தட்டுகள், அதிகமாக நகரத்தில் வாழும்,பணக்கார மேல் வகுப்பினர் தமது உணவை சாப்பிட பாவித்து இருக்கலாம்? ஹரப்பாவில் பொதுவாக மண்பாத்திரங்கள் சமைப்பதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. என்றாலும், வசதியானவர்கள் உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தி யிருக்கிறார்கள். அங்கு கண்டு எடுக்கப் பட்டவைகளில் இருந்து மற்றும் ஆய்வுகளில் இருந்தும், அவர்களின் முதன்மை உணவு கோதுமையையும் பார்லியையும் அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. இவைகள் வேகவைத்து ரோட்டியாகவும், மேலும், ஒரு வேளை, அவை நீருடன் சேர்த்து கஞ்சி அல்லது கூழ் போன்றவையாகவும் சமைத்து இருக்கலாம்.


குறிப்பாக, இன்றைய குஜராத் இருக்கும் பகுதிகளில், அவர்கள் உள்நாட்டு சில வகை திணை பயிர்களை விவசாயம் செய்தார்கள் என அறிய முடிகிறது. இது அதிகமாக தென் மத்திய ஆசியாவில் இருந்து அறிமுகப் படுத்தப் பட்ட பனிவரகாக [broom corn millet] இருக்கலாம். இவர்கள் காட்டு அரிசியை கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து இருந்தாலும், அதன் பொருட்டு, அங்கு அரிசியை பயிரிடத் தொடங்கி இருந்தாலும், அரிசி இவர்களின் முதன்மை உணவாக பிந்திய - ஹரப்பான் காலத்திலேயே பெரும்பாலும் வந்தன. அரிசி லோத்தல் மற்றும் குஜராத்தின் சில இடங்களில் பயிரிடப்  பட்டிருப்பதைக் காணமுடிகிறது. பயறு, மற்றும் பட்டாணி, சுண்டல், பாசிப்பயிறு, உளுந்து போன்ற பருப்பு வகைகளும் அங்கு ஹரப்பானால் வளர்க்கப்பட்டன. அது மட்டும் அல்ல, ஹரப்பான் மக்கள் பல தரப்பட்ட பழங்கள், காய்கறிகள், வாசனைத் திரவிய பொருள்கள் [spices] உட்கொண்டனர். இவை கடுகு, கொத்தமல்லி, பேரீச்சம்பழம், இலந்தைப்பழம், வால்நட்ஸ் (WALNUTS) எனப்படும் அக்ரூட் பருப்புகள், திராட்சை, அத்தி, மற்றும் மாம்பழம், மாதுளம்பழம், வெண்டைகாய், ஊறுகாய் போட உதவும் துள்ளு எனப்படும் ஒரு முட்செடி வகையின் மலர் [caper], கரும்பு, உள்ளி, மஞ்சள், இஞ்சி, சீரகம், கறுவா போன்றவையாகும். இவை ஹரப்பான் மக்களால் வளர்க்கப்பட்டு இருக்கலாம்  அல்லது தானாக வளர்ந்ததில் இருந்து பொருக்கி எடுக்கப் பட்டதாக இருக்கலாம். என்றாலும் இவைகளுக்கான சான்றுகள் குறைவாகவே காணப் படுகின்றன.


எப்படியாயினும், பழங்கள் - காய்கறிகளின் எச்சங்கள் அங்கு கண்டு எடுக்கப்பட்ட பானை, மட்பாண்டங்களில் காணப் பட்டது, அங்கு குறைந்தது வாழை [வாழைப்பழம்] , பேரீச்சை, பூசணி, மாதுளை, போன்றவை பாவிக்கப்பட்டது தெரிகிறது. எள், அங்கு எண்ணெய் எடுப்பதற்கு வளர்க்கப்ப ட்டன. அதே நேரம் அவர்கள் ஆளி விதை [Flaxseed] எண்ணெயும், மிருகங்களின் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களும் பாவித்தார்கள். கிமு.3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பயிரிடப்பட்டு வந்த ஆளி விதை இதய நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள். மொகஞ்சதாரோவில் நல்லெண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்கள் பயன்படுத்தப் பட்டதாக உணவியல் அறிஞர் கே.டி. ஆசயா [Dr. K.T. Achaya] குறிப்பிடுகிறார். இவைகளுக்கு நேரடியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், சிந்து வெளி மக்கள், தமது ஆபரணங்களை பல பழங்களின் வடிவங்களில் செய்து அணிந்தது உறுதிப்படுத்துகிறது.ஹரப்பா நகரில் காணப்பட்ட சில களஞ்சியங்கள், அங்கு பெரும் அளவு தானியங்கள் உற்பத்தி செய்து இருக்கலாம் என்பதை பறை சாற்றுகிறது. சிந்து வெளியில் காட்டு இனங்களான காட்டுப் பன்றி, மான், ஒரு வகை மீன் சாப்பிடும் பெரிய முதலை [gharial also known as the gavial] போன்ற வற்றின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன, மற்றும் ஒரு சுவாரசியமான கண்டு பிடிப்பு வாழைப்பழம் ஆகும். என்றாலும் வாழை ஹரப்பாவில் வளர்க்கப்பட்டனவா அல்லது வர்த்தகம் மூலம் வாழைப்பழம் பெறப்பட்டனவா என்பது இன்னும் தெரியாது. மேலும் நியூ கினியாவின் குக் சகதிப்பகுதி யில் (Kuk swamp) நடந்த அகழ்வாராய்ச்சிகளின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப் பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. மொகஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு அந்நிய நாடுகளுடன் வணிகரீதியான உறவு இருந்த காரணத்தால், கிரேக்கம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் உணவுப் பொருட்கள் அறிமுகமாகி யிருக்கின்றன. சுமேரியாவுக்கு இந்தியாவில் இருந்து எள் கொண்டு போகப்பட்டிருக்கிறது. ‘ராகி’ எனப்படும் கேழ்வரகின் தாயகம் உகாண்டா. ஆப்பிரிக்காவில் இருந்து மனித  இடப்பெயர்வின் போது ராகியை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 1800-ல் ராகி இந்தியாவில் உணவு தானியமாக இருந்திருப்பதை அகழ்வாய்வுகள் நிரூபணம் செய்கின்றன.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 

பகுதி : 17 தொடரும்

👉அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"- பகுதி:17


👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க...

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:


 

"FOOD HABITS OF TAMILS" PART: 16

"Food Habits of Ancient Indus valley people or Harappans"

 


The Harappans who lived in the Indus Valley civilization did not pass down their recipes, but they had various Terracotta pots of all shapes and sizes were found at Mohenjo-Daro and other Indus Valley sites. Pots were probably used to carry and store many different types of liquids and grains. Also, perforated pots, they found along with others, may have been used for cheese making. Plate with vertical sides. Copper and bronze plates were also found, probably used exclusively by wealthy upper class city dwellers. Their main staples were wheat and barley, which were presumably made into bread and perhaps also cooked with water as a gruel or porridge. In some places, particularly Gujarat, they also cultivated some native millets; possibly broomcorn millet, which may have been introduced from southern Central Asia; Though they fed wild rice to their cattle, and probably began to cultivate it, though rice does not become an important crop until Post - Harappan times. The Harappans grew lentils and other pulses (peas, chickpeas, green gram, black gram) also. The Harappans must have eaten a range of fruit, vegetables and spices: these included a variety of brassica, brown mustard greens, coriander, dates, jujube, walnuts, grapes, figs; many others, such as mango, okra, caper, sugarcane, garlic, turmeric, ginger, cumin and cinnamon, were locally available and probably grown or gathered by the Harappans, but the evidence is lacking. However, fruits and vegetables remains found in pots and pottery illustrations prove that banana, date, gourd, pomegranate were in use. Sesame was grown for oil, and linseed oil may also have been used. The people of the valley were habituated in creating ornaments in the shape of various fruits which were found during excavation, further supporting these facts. The granaries found at some Harappan cities clearly indicate that cereals were produced in large quantity.

 

However, archaeological evidence from Indus Valley sites (c. 3300 BC to 1300 BC) in present-day India and Pakistan suggests that a purely vegetarian meal will not provide a complete picture of what the Harappan people ate. “To judge from the quantity of bones left behind, animal foods were consumed in abundance: Bones of wild species such as boar, deer, and gharial also known as the gavial, and the fish-eating crocodile, are also found in Indus valley and food historian K T Achaya recorded beef, buffalo, mutton, turtles, tortoises, gharials, and river and sea fish in his magisterial history of Indian food, Indian Food: A Historical Companion (Oxford University Press, 1994). Also, Achaya writes that oilseeds such as sesame, linseed, and mustard were also grown. Another interesting find is the banana, which was first cultivated in Papua New Guinea. It is not clear if banana was cultivated in the Harappan region or if it was obtained via trade with people in the East via the trading hubs of the ancient world.

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

PART : 17 WILL FOLLOW

🔜🔜🔜🔜🔜🔜🔜🔜

மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா?

உடல்நலம்

2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது.

அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல்முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்ததுபிறகு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதுஇதற்கு 'குசு தாக்குதல்' (Fart Attack) என்று பெயரிடப்பட்டதுடிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது.

இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும்வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறதுஇந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?


உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?

அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார்.

இதற்கு காரணம் என்னகாற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறதுஇது நோயாஇதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. 

ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடிநம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறைநாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போதுஅதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது.

உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்றுநமது வயிறுசிறுகுடல்பெருங்குடல்மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது.

அதன் வடிவம் மாறும்போதுகடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும்மணமாகவும் உருமாறுகிறது.

நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டதுவாயு அதிகமாகும்போதுஅது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்என்றும்மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசுஎன்றும் அழைக்கிறோம்.

 

உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்:

கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது.

சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதுஇரண்டாம் வகை நீரிழிவு நோய்கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு.

கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறதுசிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லைசரியாக செரிமானம் செய்யப்படாத உணவுபெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போதுஅங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன.

 

எப்போது வயிற்று வலி ஏற்படும்?

பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும்ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும்சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும்.

இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும்உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள்சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும்காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா?

 

சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்?

பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாதுஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாதுஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும்அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம்.

நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டுகாற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம்அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது.

பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போதுகுடல் தசைகள் விரிவடைகின்றனஅப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறதுமலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.

 

இது கவலைக்குரியதா?

நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம்.

இதைத் தவிரசிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும்இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும்.

பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பதுவேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடுஇதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, 'ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார்ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.'

பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார்.

ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும்எதுவாக இருந்தாலும்அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது.

வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

 

மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி?

உணவு முறையில் மாற்றம்

மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால்உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும்.

உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோபால் ஒவ்வாமை இருந்தாலோபால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம்பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால்உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும்.

உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும்பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால்காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால்திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம்அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும்.


நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள்

😋சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும்ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம்நன்கு மென்று சாப்பிடவும்.

😋உடற்பயிற்சி செய்வது அவசியம்உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும்அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறதுஎனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாதுஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

😋சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறதுஅதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

😋அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரைலாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ்குளுக்கோஸ்), இன்சுலின்நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம்இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

😋சோடாபீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றனஅவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள்உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறதுஇவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றனஎனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்துஅதற்கு பதிலாக தண்ணீர்தேநீர்பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம்.

நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளனஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றனபுரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன.

புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும்அதேபோலமலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறதுஇதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும்அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது.


மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?

உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லைஅதற்காக கவலைப்படவேண்டாம்உணவு முறையையையும்வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும்பொதுவான சில மருந்துகளே போதுமானது.

ஆனால்வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது.

எனவே காற்று அதிகமாக வெளியேறும் போதுஅதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால்உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்.

▶வலி

தலைசுற்றல்

வாந்தி

வயிற்றுப்போக்கு

மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம்உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றதுஅதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம்.

ஆனால்இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம்ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே...

நன்றி-:பரத் ஷர்மா/பிபிசி