ஒளிர்வு-(34), ஆவணி -2013 :-


உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.

பூமிக்கு இரண்டு சந்திரனா??

தற்போது நாம் வானத்தில் பார்க்கும் நிலா முன்பு இரண்டாக இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலவாக மாறியதாகவும் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் பொதுவாக சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்ததாக தற்போது ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய நிலாக்கள் இணைந்தே தற்போது வானத்தில் காணப்படும் பெரிய நிலா உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பகுதி/PART:03"A": இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Beliefs of Tamils:

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Compiled by: Kandiah Thillaivinayagalingam]

""மதமும் மரணமும்""RELIGION & DEATH"[கிறிஸ்தவ மதம் & இஸ்லாம்]

மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக  மறுமை 
(இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை  கொடுத்துள்ளது .இது,இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும்,  மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும்  ஒரு ஆறுதல் கொடுப்பதுடன் ,ஆனால்  மற்றவர்களுக்கு: "ஏன்,எதற்கு  மரணம் இருக்கிறது?" "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?" "எல்லா உயிர்களும்  இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன்  ஆச்சரியமடைய வைக்கிறது.

மரணமும் சமயமும் இயற்கையாகவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன.நாம் இறந்த பின் ஏதாவது ஒன்று எமக்காக காத்திருக்குது என்றால், இயற்கைமுறைக்குளடங்காத,கடவுள் மாதிரியான ஒருவர்[supernatural being like a god ] அதில்   ஈடுபடவேண்டும்.ஆகவே  நாம்  சமய விரிவுரையை/பாடத்தை[religious texts], மரணத்தை பற்றிய  தகவல் அறிய பார்க்க வேண்டும் 

3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஒருவித இயற்கை வழிபாட்டையே பின்பற்றின போதிலும்,அதன் பின் மெகாலிதிக் கற்காலத்தில்[megalithic period]  தாய் தெய்வ வழிபாட்டுடன்,கல்லில் கடவுளுக்கு புற உருவங்கொடுத்து ,மரணம் ,மூதையார்கள்  வழிபாட்டு மரபுகளுக்கு அதி முக்கியம்  கொடுத்த போதிலும்,சங்க காலத்தில் (இது மெகாலிதிக் கற்காலத்துக்கு பின்னானது),சேயோன் ,மாயோன்,கொற்றவை, ஐயனார் போன்ற  குலமரபு தெய்வங்கள்[tribal gods] இருந்த போதிலும் ,அதன் பின் சிவாவை முழுமுதற் கடவுளாக ஏற்ற சைவர்களாக ,பக்தி காலம் வரை தொடர்ந்தார்கள் .அதன் பின்  உலக செல்வாக்கினால் சில தமிழர்கள்  இஸ்லாமிய,கிருஸ்துவ மதங்களுக்கு மாறினார்கள் .இப்பொழுது 88% இன்னும் சைவத்திலும் 12% மற்ற இரு மதங்களிலும் பொதுவாக இருக்கிறார்கள். 

ஆகவே இன்று பல சமய வாக்கியங்கள்[பாடங்கள்/texts] எம்மிடையில் இருக்கின்றன .அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், அவை எல்லாம் மரணத்தைப்பற்றி ஒரே மாதிரி சொல்லவில்லை. மரணத்தைப்பற்றி பல  அபிப்பிராயம் அங்கு நிலவுகிறது.மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.ஆகவே எப்படி எங்களுக்கு தெரியும் ,எந்த நூல்,எம்மை சரியாக வழிகாட்டும்  என்று ?


கிறிஸ்தவ மதம் மறுபிறப்பு என்று குறிப்பாகச் சொல்லா விட்டாலும்,ஒருவரின் கடவுள் நம்பிக்கை ,கடவுள் நம்பிக்கையின்மை என்பவற்றை பொறுத்தும்,அவரின் இவ்வுலக நடத்தையை பொருத்தும்,அவரின் மறுமை சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பது தீர்மானிக்கப்படும் என உறுதிபடச் சொல்கிறது.

அதாவது கிருஸ்துவர்கள் ஒரு மறுமை இருக்கிறது என்பதை நம்புகிறார்கள்.உடம்பு இறந்து அதுஎரிக்கப்பட்ட்டாலும், புதைக்கப்பட்டாலும், தங்களது  தனித்தன்மை வாய்ந்த ஆன்மா[unique soul/உயிர்] தொடர்ந்து வாழ்கிறது என்றும்,அது கடவுளினால் புது வாழ்விற்கு உயிரோடெழுப்பப்படுவர் [raised]  எனவும்  நம்புகின்றனர்.

சிலுவையில் அறையப்பட்டு[crucifixion] மூன்று நாட்களின் பின் இயேசு  இறப்பில் இருந்து எழும்பியது,எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது.அதாவது இயேசுவின் போதனையை பின்பற்றுவதுடன் அவரை இறைவனாகவும் இரட்சகராகவும்[their Lord and Saviour] ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்,இந்த புதிய உயிர்த்தெழுதல்[resurrection] தமக்கும் காத்திருக்கிறது என்று.

இயேசு அவளை நோக்கி: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;"
யோவான் 11:25-26

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
யோவான் 3:16

இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை, அல் குர்ஆன் "இறுதித்தீர்ப்பு நாள்"[a day of judgment] என்று அறிமுகப்படுத்துகின்றது,அந்த நாளில் இறந்த உயிர்கள் எல்லாவற்றிற்கும் மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? நரகமா? என்பதைத் தீர்மானிக்கும் என்கிறது இஸ்லாம்.அது மறுபிறப்பு என்பதை முற்றாக மறுக்கிறது.

குர்ஆன் அல்லது  இஸ்லாத்தின் திருமறையின்  முக்கியமான கோட்பாடு[மையமான கொள்கை]"இறுதித்தீர்ப்பு நாள்".அன்று உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு,எல்லா மக்களும் எல்லா  ஜின்களும்[jinn/genie:spiritual creatures mentioned in the Qur'an ] இறப்பில் இருந்து உயிரோடெழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். ஜின்கள்:என்பது நாம் வாழும் பூமியில் நமது பார்வைக்கு புலப்படாத ஒரு உயிரினம்.அது  நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது.அதாவது  ஜின் என்பது இஸ்லாமிய வழக்கில் சிறு தெய்வ உரு அல்லது  (இஸ்லாமிய புராணத்தில்)கூளி[பேய்; தீய ஆவி]ஆகும்.  

சுட்ட மண் பாண்டங்களைப் போல (தட்டினால்) சப்தம் உண்டாகும், களி மண்ணில் இருந்து (அல்லாஹ்வாகிய) அவன் மனிதனைப் படைத்தான். அதற்கு முன்னரே (சூடான) நெருப்புக் கொழுந்தில் இருந்து ஜின்களைப் படைத்தான்.(அல்குர்ஆன் 55:14-15, 15:26,27) 

இறுதி தீர்ப்பு நாள் வரை,புதைகுழியில்  இறந்த, காலஞ் சென்ற ஆன்மா/உயிர்கள் தமது உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கின்றன.எப்படியாயினும்  அவைகள் தமது விதி அல்லது  தீர்ப்பை உணர்கிறார்கள்.அதாவது நரகத்திற்கு போகிறவர்கள் அங்கு,புதைகுழியில் அவதிப்படுகிறார்கள்.சொர்க்கத்திற்கு போகிறவர்கள் அங்கு அமைதியாய் இருக்கிறார்கள். 

சொர்க்கத்திற்கு நரகத்தின் மேலால் செல்லும் ஒரு ஒடுங்கிய பாலத்தினூடாக இறுதி தீர்ப்பு நாள் அன்று செல்வது போல விவரிக்கலாம்.தமது தீய செயல்களின் சுமையினால்,பாலத்தில் இருந்து விழுந்தவர்கள் அந்த நரகத்தில் எல்லாக் காலத்துக்கம் அங்கேயே இருப்பார்கள்.என்றாலும்  குர்ஆன் இரு விதிவிலக்குகளை கூறுகிறது.

3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.

2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.

பகுதி/PART:03"B""மதமும் மரணமும்""RELIGION & DEATH"[இந்து மதம்]அடுத்த வாரம் தொடரும் 

புகை பழக்கத்தை விட வேண்டுமா??


Smokingதினமும் ஒரு பக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .
மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது,
இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை இதை நீங்களும் உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி.

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்?

இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே . உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை. 

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்டோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

நாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது.

வீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 – 130 முறையும் வளர்ந்த பெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310 முறையும் அதிர்கிறது.

நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது.

பெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது.

நாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும்.

குரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை.

vedio-கோச்சடையான் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 6 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இது ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படமாகும். படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12–ந் தேதியன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோச்சடையான் படத்திற்காக இதுவரை ரூ.125 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் கோச்சடையான், இத்தாலி, ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையாக பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ரா ஒன்னுக்குப் பிறகு ‘கோச்சடையான்’ தொடங்கப்பட்டது. கோச்சடையான் என்றால் நீண்ட தலைமுடி கொண்ட அரசன் என்று பொருள். தமிழக வரலாற்றுப் பின்னணி கொண்ட கோச்சடையான் படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். எல்லா ரஜினி படங்களையும் போல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கோச்சடையான் படத்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்ல பிசினஸ். இந்நிலையில் கோச்சடையான் தொடர்பான ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் காமிக் புத்தகங்கள் வாயிலாகவும் அவர்கள் வருமானத்தை அதிகரித்து வருவதாக தெரிகிறது.
இதன் டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புகளூக்கு மத்தியில் நேற்று வெளியானது.நேற்று இரவு மட்டும் 6 லட்சம்  ரசிகர்கள் டிரெய்லரை பார்த்து உள்ளனர்.காலை 9.30 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடபட்டது. 12 மணி நேரத்தில் 4 லட்சம் ரசிகர்கள் கோச்சடையான் டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர்.
விஜய்-அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படத்தின் டிரெய்லரை 152 நாட்களில் மொத்தம் 12.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் டிரெய்லரை 115 நாட்களில் 17.2 லட்சம் பேர் பார்த்தனர். ஆர்யா நயன்தாராவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற பரபரப்புடன் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் டிரெய்லரை 118 நாட்களில் 8.2 லட்சம் பேர் பார்த்துள் ளார்கள்.நடிகர் ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' படத்தின் டிரெய்லர் யு டியூப் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.


சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராஃப், ஆதி, ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். யு டியூபில் வெளியிடப்பட்டது . இது குறித்து ரசிகர்கள் கூறியது:

"கோச்சடையான்' டிரெய்லரில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்ணனி இசை சிறப்பாகவுள்ளது. வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினியின் இளமைத்தோற்றம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் பிரமாண்டமாகவும், 3டி தொழில் நுட்பத்திலும் உள்ளன. ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துள்ள "கோச்சடையான்' நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம் என்றனர்.

video:யாழ்ப்பாண ஊருக்குள்ளே பெண்ணொருத்தி பிறந்தாலே....


.திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைய்ந்த ஒரு பாடல். -

பகுதி/PART:02-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Beliefs of Tamils

"What is Really "DEATH"?
உண்மையில் இறப்பு என்றால் என்ன?
1. மூச்சு நிற்பது இறப்பா ?--------------- இல்லை
2. இதயம் துடிப்பது நிற்பது இறப்பா ?----- இல்லை
3. மூளை சிந்திப்பதை நிறுத்தும் போதா?-- இல்லை
4. இரத்த ஓட்டம் நிற்கும் போதா?-------- இல்லை 

அல்லது மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றிரண்டின் சேர்க்கையா அல்லது எல்லாவற்றினதும் சேர்க்கையா? வேறு காரணங்கள் தான் இருக்கின்றனவா?


இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம்.ஆனா‌ல் மருத‌்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?

மருத்துவ அறிவியலின் படி மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போனதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம்.மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள்.அதை நாம் "மருத்துவச் சாவு"(Clinical death ) என்றும்,"மூளைச் சாவு"(Cerebral death ) என்றும் குறிப்பிடுகின்றோம்

மருத்துவச் சாவுக்கும்[கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த்] மூளைச் சாவுக்கும்[செ‌ரிபர‌ல் டெ‌த்] உள்ள வித்தியாசம் மிக மிக சிறிதே உண்மையில், ஒரு சில  நெருக்கடியான/அவசியமான நிமிடங்களே.மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும்.அப்பொழுது சுவாசித்தலும் இரத்த ஓட்டமும் நின்றுவிடுகின்றன. இதயம் நின்று போய்விட்டாலும், ஒரு சில நிமிடங்கள் வரை இந்த மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது.இக் கால வரம்பிற்குப் பிறகு,ஆக்ஸிஜன்[பிராணவாயு] பற்றாக்குறையால் மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுகிறது.இதையே மூளைச் சாவு என்கிறோம்.மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும்.ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது.இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.

சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம்  30,000 நாளாகும்.நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் 7000 நாட்களே.அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. 

"மூப்படைதல் ஒரு உயிர் வேதியியல் செயன்முறையாகும்[biochemical process].அதனால் மனிதன் அதனை குறுக்கிடு செய்து எப்படி அதை இன்னும் தாமதமாக்கலாம் என்பதை வருங்காலத்தில் அறிவான்" என நாம் நம்பலாம் 

பிரித்தானிக்கா  கலைக்களஞ்சியத்தின்[Encyclopedia Britannica] முதல் பதிப்பில்  இறப்பு என்பது "உயர் உடலில் இருந்து பிரிவது" என சமய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது .மனித உடலைப்பற்றிய எமது இன்றைய மேலதிக அறிவால்,பதினைந்து பதிப்பின் பின்,அது முப்பது தடவை நீளமாகியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.  

வெளி அடையாளங்களான மூச்சு விடுதல்,இதய துடிப்பு போன்றவை நின்றாலும் அல்லது இல்லாமல் போனாலும்,இன்னும் அந்த நபர் சாகலாமல் இருபதற்கு சந்தர்ப்பம் உண்டு என இப்ப மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள்.   

இன்று,இறப்பு என்ற சொல்லின் சொற்பொருள் விளக்கத்திற்கு  மேலும்  சில சேர்க்க வேண்டி உள்ளன.செயற்கை இதயம்[mechanical heart],சுவாசிபதற்கான கருவி, நரம்பு வழி உணவு செலுத்துதல்[intravenous feedings] போன்றவற்றால் , மருத்துவர் ஒருவர் நோயாளியை ,அவர் ஆழமான  எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கநிலையில்[deep coma]  இருந்தாலும்,அவரை மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ உயிர்  உடன் வைத்திருக்க முடியும் என்பதால்.  


மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக  மறுமை
 ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை/afterlife) நம்பிக்கையை  கொடுத்துள்ளது . இது,இந்த  எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும்,  மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு  ஆறுதல் கொடுப்பதுடன் ,ஆனால்  மற்றவர்களுக்கு: "ஏன்,எதற்கு  மரணம் இருக்கிறது?" "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?" "எல்லா உயிர்களும்  இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன்  ஆச்சரியமடைய வைக்கிறது.

 பகுதி/PART:03"மதமும் மரணமும்""RELIGION & DEATH"தொடரும் 
-[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

தொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி?


தொலைதூர உறவுகள் என்றுமே வெற்றிகரமாக நிலைப்பதில்லை என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது. ஆனால் உறவுச்சிக்கல் நிபுணர்கள் இக்கருத்தில் மாறுபடுகிறார்கள். அதிலும் தொடர்பில் இருக்கும் இருவரும் தங்களை எது இணைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்வதிலும், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் முறைகளிலும் கவனம் செலுத்துவதும் முக்கியம்.
தெளிவாக முடிவு எடுங்கள்
உறவு ஆரம்பிக்கும் போதே உங்கள் உறவு குறித்த சில விஷயங்களை இருவரும் தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் உறவு காதலா, ஈர்ப்பா, திருமணம் நிச்சயிக்கப்பட்ட உறவா என்பதையும், உங்களின் இந்த உறவு ஒருவருடன் மட்டுமே இருக்கிறதா என்பதில் எல்லாம் தெளிவாக இருங்கள். இவை முடிவு செய்வதற்கு கடினமான விஷயங்கள் தான் என்றாலும், எதிர்காலத்தில் பல பிரச்சனைகளையும், மன வலிகளையும் தவிர்க்க உதவும்.
தொடர்பில் இருங்கள் 
ஸ்கைப் வீடியோ சாட்டில் தினமும் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் என முடிந்த அளவிற்கு அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். ஒருவரின் தினசரி வாழ்க்கையில் மற்றொருவர் கண்டிப்பாக பங்கு பெறுவதென்பது அவசியம்.
உணர்வுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள் 
தினமும் பார்க்க முடியாததால், எதாவதொரு வழியில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தொடர்பு கொண்டு உணர்வுபூர்வ தொடர்பை தக்க வைத்தல் அவசியம். நீண்ட நெடிய அழைப்புகள் கூட தேவையில்லை. சிறிய சிறிய மகிழ்ச்சிகளை, துக்கங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டாலே போதுமானது. அறிவுரை கேளுங்கள். அடிக்கடி தொலைபேசியில் அழைக்க முடியாதவர்கள், மெசேஜ் அனுப்புதல், வாய்ஸ் மெயில் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
பிடித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்
பொதுவாக உங்கள் இருவரையுமே ஈர்க்கும் விஷயங்களைப் பற்றி அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஒரு திரைப்படம் உங்கள் இருவருக்குமே பிடிக்கிறதென்றால், அதை தனித்தனியாகப் பார்த்து, கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.
ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதை தவிர்த்திடுங்கள் 
எல்லோருக்கும் தனிமனித ஆசைகள் உண்டென்பதால் யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. ஒருவரின் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கும் வரையில் தான் எந்த உறவுமே நிலைக்கும். 3000 மைல்கள் தள்ளியிருந்தாலும், அடுத்தடுத்த தெருக்களில் இருந்தாலும், ஒரே படுக்கையை பகிரும் திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், நம்பிக்கை இல்லாத எந்த உறவும் தோல்வியில் முடியும். எனவே ஒருவரை ஒருவர் முழுதாக நம்புவது தான் எந்த உறவையும் நீடிக்கச் செய்ய ஒரே வழி.
எதிர்காலத்தைப் பற்றி கலந்து பேசுங்கள் 
எதிர்காலத்தைப் பற்றி கலந்து பேசுவது அவசியம். எவ்வளவு காலத்திற்கு இருவரும் தொலைதூரத்தில் இருக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவின்றி இருந்தீர்கள் என்றால், நீங்களாகவே அதற்கு ஒரு காலவரையறையை நிறுவிக் கொண்டு, அதை நோக்கி உழையுங்கள்.
நம்பிக்கையோடு இருங்கள் 
கால ஓட்டத்தில் உறவுகள் உட்பட எல்லா விஷயங்களுமே நலம் பெறும் என்பதில் நம்பிக்கையோடு இருங்கள்.
நேரில் சந்தித்துக் கொள்ளுங்கள் 
தொலைபேசியில் மட்டுமே ஒரு உறவு நீடித்திருக்க முடியாது. முடிந்தபோதெல்லாம் தனிப்பட்ட முறையில் சந்தித்து அளவளாவுதல் அவசியம்.
பொறாமையை தவிர்த்து நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் 
அனைவருமே, துரோகம் நிரூபிக்கும் வரையில் நம்பிக்கைக்கு உரியவர்களே என்ற முன் முடிவோடு ஒரு உறவில் இருப்பது எப்போதும் நன்மை அளிக்கும். முக்கியமாக உங்கள் துணையை அளவுக்கதிகமாக கேள்விகள் கேட்காதீர்கள். அவரது நண்பர்களுடன் வெளியே செல்லும் போதோ, உங்கள் அழைப்பை ஏற்காத போதோ சந்தேகப்படாதீர்கள். குறிப்பாக தொலைதூரத்தில் இருப்பதாலேயே உங்கள் வாழ்க்கை மற்றொருவரின் வசமாகிவிடும் என நினைக்காதீர்கள்.
 பரிசளியுங்கள் 
உங்களுக்கு சொந்தமான ஏதேனும் ஒரு பொருளை உங்கள் துணைக்கு பரிசளியுங்கள். இதனால் மகிழ்ச்சியுடன் உங்களுடன் இருப்பதைப் போன்ற தோற்றத்தை அப்பொருட்கள் அவர்களுக்குத் தரும்.

உறவு நிபுணர்களிடமிருந்து தொலைதூர உறவுகளை எப்படி வெற்றிகரமாக நிலைக்க வைப்பது என்பது குறித்து சில ஆலோசனைகள் இவை . இவற்றினைப்  படித்து தெரிந்து கொண்டு, உங்கள் தொலைதூர உறவுகளை வலுப்படுத்தி, சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்.
தொகுப்பு:வளவன் 

கர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும்.

கர்ப்பக்காலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பிரசவம் காலம் என்பது ஒரு பெண்ணுக்கு இருப்பது போன்று மற்றொரு பெண்ணுக்கு இருக்காது. வித்தியாசமான பலவித கூறுகள் பெண்களுக்கு பிரசவ காலத்தில் நடப்பதுண்டு. ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பிரசவ காலத்தில் பலவித கட்டுக்கதைகளை நமக்கு பலர் பலவிதத்தில் சொல்வார்கள். அதில் வயிற்றை வைத்து குழந்தை ஆணா பெண்ணா என்று கூறுவது, விமானத்தில் செல்ல கூடாது என்பது, ஆவி குளியல் கூடவே கூடாது என்றெல்லாம் கூறுவர். அதில் எது உண்மை எது பொய் என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. அதைப் பற்றி இங்கு தீர்த்து கொள்வோமா...

கட்டுக்கதை: கர்ப்பிணியின் வயிற்றின் வடிவம். வயிறு பெரியதாக இருந்தால் பெண் என்றும், சிறியதாக இருந்தால் ஆண் என்றும் கூறுவர்.
உண்மை: இந்த ஊகத்தை பற்றி அறிவியல் அடிப்படையில் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்ணின் தசை அளவு, அமைப்பு, கரு நிலை, தோரணை மற்றும் வயிற்றின் அடிப்படை அளவு இதை பொறுத்தே இந்த வடிவம் வருமே தவிர, குழந்தையைப் பொறுத்து இல்லை என்று கூறுகின்றனர்.

கட்டுக்கதை: உப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பையன் என்றும், இனிப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பெண் குழந்தையை குறிக்கின்றது என்பது.
உண்மை: ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், பசியையும், ருசியையும் வைத்து குழந்தையின் பாலியலை தீர்மானிக்க முடியாது என்று சொல்கிறது.

கட்டுக்கதை: கர்ப்பிணியின் தொப்பை மீது ஒரு மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி, அது ஆடும் திசையை வைத்து குழந்தையின் பாலியலை கணிப்பது. அது ஒரு வட்டத்தில் நகருமெனில் பையன் என்றும், முன்னும் பின்னுமாக நகருமெனில் பெண் என்றும் கூறுவர்.
உண்மை: இது உண்மை இல்லை என்றாலும், விளையாட்டாக இதை செய்யலாம்.

கட்டுக்கதை:கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் அவதியால் பாதிக்கப்படுகின்றீர் என்றால் குழந்தைக்கு அதிக முடி என்று அர்த்தம். நெஞ்செரிச்சல் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் உங்கள் குழந்தையின் முடியை வைத்து இது வருவது இல்லை.
உண்மை: நெஞ்செரிச்சலால் மிகவும் கஷ்டப்பட்டும் கூட, பெண்கள் வழுக்கை குழந்தைகளை பெற்றனர்.

கட்டுக்கதை: உங்கள் அம்மாவிற்கு எளிதாக கர்ப்பம் மற்றும் பிரசவம் நடந்தது என்றால், உங்களுக்கும் அதுபோல் நடக்கும்.
உண்மை: உங்கள் பிரசவத்திற்கும், கர்ப்பத்திற்கும் உங்கள் பரம்பரை அம்சத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நீங்கள் உண்ணும் உணவும், உங்கள் வாழ்க்கை முறையுமே காரணம்.

கட்டுக்கதை: மல்லாந்து படுப்பதால் உங்கள் குழந்தைக்கு பாதிப்பு என்பது என்று சொல்வது.
உண்மை: இந்த நிலையில் தூங்குவது உங்கள் குழந்தையை பாதிக்காது என்பதால் ஒரு நிலையில் படுக்கலாம். அதிலும் இடது புறம் படுத்தால் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் சீராக இருப்பதாக அறியப்படுகின்றது. ஆகையால் இடதுபுறம் படுப்பது நல்லது.

கட்டுக்கதை: உடலுறவு குழந்தையை பாதிக்கும் என்று கூறுவதுண்டு.
உண்மை: அடிவயிற்றை சுற்றி பனிக்குடப்பையின் தோல் ஏழு அடுக்குகள் கொண்டது. அவை உங்கள் குழந்தையை பாதுகாப்பதற்காக உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இவை ஒருவித சளி போன்ற படிமத்தை உற்பத்தி செய்து, கருப்பையினை கிருமிகள் தாக்காமல் சுத்தமும் செய்கின்றன. ஆகவே உங்கள் மருத்துவர் கூறினால் மட்டுமே பாலியல் தொடர்பை தவிர்க்கவும், இல்லையென்றால் தேவையில்லை.

கட்டுக்கதை: முதல் குழந்தை எப்போதும் தாமதமாகவே வரும்.
உண்மை: 60 சதவீத பிரசவம் கணிக்கப்பட்ட தேதிக்கு பின் வரும், ஐந்து சதவீதம் கணிக்கப்பட்ட நாளில் வரும், முப்பத்தி ஐந்து கணிக்கப்பட்ட நாளுக்கு முன்பேயே வரும். எனவே குழந்தையின் பிரசவ நேரத்தை, உங்கள் மாதவிடாய் சுழற்சியே திட்டமிடுகிறது. அது குறைவாக இருந்தால், சீக்கிரம் பிரசவம் வரும், அது நீட்டிப்பாய் இருந்தால், பிரசவம் தாமதமாக இருக்கும். சரியாக 28 நாட்கள் இருப்பின் குறித்த நேரத்தில் நடைபெறும்.

கட்டுக்கதை: முதல் அல்லது கடைசி மூன்று மாதங்களில் விமானத்தில் பயணிக்க முடியாது.
உண்மை: மீண்டும் தவறு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விமானத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் சில விமான நிறுவனங்கள், உங்களது இறுதி மூன்று மாதங்களில் விமானத்தில் அனுமதிக்கமாட்டேன் என்று கூறுவர். ஏனெனில் விமானத்திலேயே உங்களுக்கு பிரசவம் ஏற்படும் என்பதால் மட்டுமே.

கட்டுக்கதை: கர்ப்பமாக இருக்கும் போது, சூடான குளியல் எடுத்து கொள்ளக்கூடாது.
உண்மை: இது உண்மை தான். பிரசவ காலத்தில் நீராவிக்குளியல், சுடுநீர் தொட்டி குளியல் போன்ற குளியல்களை கூடாது. மேலும் கர்ப்பக்காலத்தில் 102 டிகிரிக்கு மேல் உங்களின் உடலின் வெப்பநிலை இருக்கக்கூடாது.

ஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி!!

google car

google carட்டுனரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது.2010ம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம் டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.
இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள் கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால் தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.
இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும் கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

கவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}காலை:

ந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் 
முந்தைய கடனை பேசி வாங்கிறான்
ந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் 
சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான்
செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் 
ந்தி பந்தியாய் பறவை பறக்குது
  
ந்த வெயில்  மெல்ல சுடகிறது  
ந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!

நண்பகல்[மத்தியானம்]:

ந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் 
ந்தை துணியுடன் சுந்தரி  கூட்டுறாள் 

செந்தாமரை குளிக்க சோப்பு தேடுறாள் 
ந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான்
தொந்தி பிள்ளையார் எலியில் இருக்கிறார் 
வெந்திய குளம்பு  அடுப்பில் கொதிக்குது 

சிந்திய முத்துகள்  பொறுக்கி எடுத்து   
ந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!! 

மாலை:

ந்தனம் கூறி வசந்தி போறாள் 
ந்தனப்  பொட்டு நெற்றியில் மின்னுது 

பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் 
சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் 

ந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் 
ந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் 

ந்தி ஊஞ்சால் விரைவா ஆடி 
ந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!! 

இரவு:

சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் 
ந்தப்பு விராந்தையில்  பாய் விரிக்கிறார் 
See full size image
ந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் 
ந்தானம் சாமிக்கு தீபம் காட்டுறான் 

செந்தாமரை யன்னலில் கனவு காண்கிறாள் 
ந்தபுரத்தில் இப்ப  ராசாவின் மடியில் 

ந்தன தந்தன  தாளம் போட்டு 
ந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!