கல்லூரியில் நமது வாழ்க்கை

ஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன?[பகுதி 02]

[பகுதி 01]அலுவலகத்தில் பழகுதல்
[பகுதி 02]கல்லூரியில் நமது வாழ்க்கை
[பகுதி 03]சமூகத்தில் பழகுதல்
வேறு சில ஆலோசனைகள்
ஒருவர், தான் படிக்கும் கல்லூரியில், நண்பர்களை உருவாக்கிக் கொள்வதென்பது, ஒருவகையில் கடினம் மற்றும் ஒருவகையில் எளிது. ஆனால், பெரும்பாலானோருக்கு, எளிதில் பிறரிடம் பழகுவதென்பது, ஒரு கஷ்டமான காரியமாகவே உள்ளது. ஆனால், அந்த கடினத்தை, நாம் விரைவில் எளிதாக்கலாம். உங்களுடன், பள்ளிப் பருவத்திலிருந்தே படித்து அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் அல்லது ஊரில் வசித்த நண்பர் யாரேனும், உங்களது கல்லூரியில் சேர்ந்திருந்தால், புதிய சூழலுக்கு பழகிக்கொள்ள அவர் உதவலாம்.
புதிய மாணவர்களுக்கான party மற்றும் அவர்களுக்கான வாரஇறுதி விழா போன்ற நிகழ்வுகளிலும், கல்லூரியில் நடக்கும் வேறுபல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதன் மூலமாக, உங்களது வளாகத்தில், உங்களுடன் இருக்கும் பிற நண்பர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற சூழல்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே, கல்லூரி வளாகத்தில், உங்களுக்கென சிறப்பான நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் நண்பர் ஒவ்வொருவருடனும், தேவையான நேரத்தை செலவழியுங்கள். புராஜெக்ட்டை ஒன்றாக அமர்ந்து செய்தல் மற்றும் வெளியில் உணவருந்த செல்லுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக, நட்பு வட்டத்தை பலப்படுத்தலாம்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரத்தில், ஒருவரின் அந்தரங்கத்தில் தேவையில்லாமல் தலையிடுவது மற்றும் எப்போது பார்த்தாலும் அவரின் அருகிலேயோ அல்லது தேவையில்லாமலோ பேசிக்கொண்டேயிருந்து, சலிப்படைய வைத்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
உங்கள் நடவடிக்கைகள், இருவருக்குமே பாதகம் விளைவிக்காதவாறு இருத்தல் வேண்டும். சிறிய உரையாடல் எனும் கலையை, சற்று நேரம் எடுத்தே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. புன்னகை ஒன்றுதான் உடனடி மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம்.
உங்களின் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, எத்தனை பேருடன் நீங்களாக சென்று பேச முடியுமோ, அத்தனை பேருடனும் பேசலாம். ஏனெனில், உங்களைப் போலவே, பலரும், தானாக முன்வந்து பேசுவதற்கு தயக்கத்துடனேயே இருப்பார்கள். எனவே, நாமாக முன்வந்து பேசுதல் என்பது, பல நேரங்களில் நன்மை பயக்கும்.
அதேசமயம், ஒருவரிடம் பழகியவுடனேயே, மிகச்சில நாட்களிலேயே, அவரை உற்ற நண்பன்(best friend) என்று கூறிக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாத வேலை. அனைவருமே உற்ற நண்பர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஓரளவு நல்ல நண்பர்களாக இருந்தாலே பெரிய விஷயம்.
[பகுதி 03 தொடரும்..]

0 comments:

Post a Comment