பூமிநடுக்கம்:-அறிவியல்

பூமிநடுக்கம்: - Richter Scale:-அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் 'சார்லஸ்ரிச்டர்' 1935ம் ஆண்டில் முதன்முதலாக நிலஅதிர்வுகளுக்கு நிலஅளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஒரு  யூனிட் அதற்கு முந்தைய யூனிட் அளவை விடபத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரைமிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால்அவர் அளவுகளை இவ்வாறு வரையருக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிச்டர்ஸ்கேலில் 5 என்ற அளவு நான்கை விடபத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றைவிட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.
ரிச்டர்அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரணமனிதர்களால் அறியமுடியாது. இவைகள் மைக்ரோபூகம்பம் எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும். 6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ரிச்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
புவியின் நிலம் பாறை கொண்ட பல நிலத்தட்டுக்கள் கொண்டவை. அவை இடம்பெயர்ந்து கொண்டு இருப்பவை. இடம்பெயரும்போது அவற்றின் விளிம்புகள் ஒன்றையொன்று மோதும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.அத்தட்டுகளை பின்வரும் படத்தில் காணலாம்.



உதாரணமாக ஜப்பான் நாட்டினை, நோர்த் அமெரிக்கன் தட்டும்  ,இரோசியன் தட்டும் சந்திக்கும் விளிம்பு ஊடறுத்து செல்கிறது. எனவே அங்கு பூமிநடுக்கத்திற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு.

📂செ.மனுவேந்தன்.

0 comments:

Post a Comment