நாம் தமிழர் மத்தியில் நடப்பவை என்ன?............அங்கம்-03

டொராண்டோவில் அது ஒரு பெரும் தொழிற்சாலை. பல்லாயிரம் தொழிலாளர்கள் தொழில் புரியும் அத் தொழிலகத்தில் பல நூறு தமிழர்கள் பணிபுரிவது ஆச்சரியம் என்பதனை விட, அவர்களுள் ஒருவர் மட்டும் அரிச்சந்திர ராசாவாக கணிக்கப்பட்டது தான் ஆச்சரியம். அந்த ராசாவும் மெல்ல மெல்ல சீட்டுக் கார முதலாளியாக மாறிவிட்டார்.அவரை நம்பி அங்கு பணி புரியும்  சில பல  தமிழர்கள் சீட்டுக் கட்டி இணைந்தார்கள்.அவரின் தொழிலில் நேர்மை கண்ட பலரும் ஆசை மிகுதியினால் விழுந்த சீட்டுக் காசினை வெளியில் வட்டிக்கு கொடுக்கும்படி அந்த மகராசனிடமே கொடுத்து வைத்தனர். இப்படியே பத்து வருடங்கள் தொழில் வளர்ச்சி கண்டது. திடீரென்று அரிச்சந்திர மகராசா தமிழ் சினிமா அசோகனா மாறித் தம் கையை விரித்துவிட்டார். சீட்டுக்காரர் அனைவரும் என்னதான் செய்யமுடியும். தங்கள் கைகளைத் தம்  தலையில் வைத்துக் கொண்டார்கள்..
இப்படிப் புலம் பெயர் தமிழர் மத்தியில் எத்தனை?எத்தனையோ?
💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰

0 comments:

Post a Comment