தீபம்
வாசகர்கள் அனைவருக்கும்
எமது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.
தளத்தில்:சிந்தனைஒளி, பறுவதம் பாட்டி , தமிழ் மொழி, பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்,ஆன்மீகம், , குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம், ஆராய்ச்சியாளரின் செய்திகள், தொழில்நுட்பம், உணவின் புதினம் ,அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்குதெரியுமா? ,சிரிக்க...!,சினிமா, விளையாட்டு.உங்கள் படைப்பை சமர்ப்பிக்க:manuventhan@hotmail.com
சிந்தனைஒளி
* நல்லவர்கள்உதவிசெய்தேன்என்றுசொல்லமாட்டார்கள்!
உதவிசெய்தேன்என்றுசொல்பவர்கள்நல்லவரல்ல!
*கனிந்தகாதலிஇறந்தாலும்நினைப்பில்வாழலாம்!
முறிந்தகாதலியைநினைக்கவும்முடியாது!மறக்கவும்முடியாது!
*அன்புசெலுத்துபவனைஅடக்கிஆழமுடியாது!
ஆனால், அடக்கிஆழ்பவனையும்அன்பினால்வெல்லலாம்!
*பிராத்தனைஉங்கள்நம்பிக்கைக்குஉயிர்கொடுக்காது!
நம்பிக்கைதான்உங்கள்பிராத்தனைக்குஉயிர்கொடுக்கும்!
* மனிதன்வெட்டும்போதுஆட்டின்இதயம்துடிக்கிறது!
அதன்கொலோஸ்ரோலால்மனிதஇதயம்வலிக்கிறது
தீபத்திற்கு எமது தைபொங்கல் வாழ்த்துக்கள்.எம்மை விட்டு தூர தேசத்தில் வாழ்ந்தாலும் எம் மொழி,பண்பாடு காத்து வளரும் தீபம் மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteதீபம் இணையத்தளத்திற்கும் சக வாசகர்களுக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteponkal vazhththukkal
ReplyDelete*கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்!
ReplyDeleteமுறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!
-பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே
கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு
அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து
சதையை தாண்டி விதியை காண்பது காதல் -
அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான்
மும்தாஜ் மஹால் இறந்த பின்.....
-கண்களை கலந்தது ,இதயங்களை ஒன்றாக்கி ,
மௌனத்தை மொழியாக்கி ,சிந்தனையை சீராக்கி ,
வாழ்வை வசந்தமாக்கி ,இன்பத்தை இரட்டிப்பாக்கி-
கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்!
வேறு பல மனைவி இருந்தும், அவள் 14 பிள்ளைகள் பெற்றப் பின்பும், அவள் மீதான அன்பு தனியாமல் இருந்ததால், அது காதலின் சின்னம் என்று சொல்லப்படுகிறது.
-உன்னை ஒரு பார்வைகேட்டேன். கண்கள் பேசும்-சில வார்த்தை கேட்டேன். கன்னத்தில் வந்த ஈரமும் இதயத்தில் நொந்த காயமும்தான் எனக்காக நீ கொடுத்தது...! -
இந்த முறிந்த காதலியை இனி நினைக்க முடியாது! என் என்றால் அவள் எங்கோ யாருடனோ இப்ப வாழ்கிறாள்!!
- அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே-
என மறக்கவும் முடியாது! என் என்றால் ...
-என் நெஞ்சுக்கு[வேறு ] நினைவில்லை என் நிழலுக்கு[இப்ப ] உறக்கமில்லை-
தன் சிறு பருவத்திலிருந்தே லைலா என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்புகொண்டு வளர்கிறான் 'கைஸ்' . அன்பு முற்றிக் காதலாகிறது.காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்துவிட்ட கைஸ் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப் போல் ஆகிவிட்டான். மக்கள் அவனை "மஜ்னூன்" என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகிவிடுகிறது. மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்துவிடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்.இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான்.
மஜ்னூன் சொல்கிறான் முறிந்த காதலியை பற்றி இப்படி :
"ரோஜா
காதலின் சின்னம்
என்பது சரிதான்.
காலையில் இருக்கிறது
அவளைப் போல்.
மாலையில் ஆகிறது
என்னைப் போல்."
தீபத்திற்கும் சக வாசகர்களுக்கும் எமது இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்!
"அருவியில் தவம் முடித்து
இருவராய் சேர்த்ததும் தையே[கனிந்த காதலராய்]
ஊருக்கு பொங்கல் படைத்த
பெருவிழா தந்ததும் தையே"[தமிழர் திரு நாளாய்]