கணினிஉலகம்


கைப்பேசிகளுக்கான Firefox இயங்குதளம் விரைவில் அறிமுகமாகின்றது 


முன்னணி இணைய உலாவியான Firefox - இனை வெளியிட்டு பயனர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட Mozillaநிறுவனமானது கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள்

ஒன்றான ZTE உடன் இணைந்து புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தவிருக்கின்றது. Firefox OS என பெயரிடப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இயங்குதமளாது கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ள அன்ரோயிட் இயங்குதளத்திற்கு சவாலாக விளங்கும் என்றும் Mozilla நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

அட்டகாசமான ஆடியோ எடிட்டிங் செய்வதற்கு


பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் கணினியானது இசைத்துறையினையும் விட்டுவைக்கவில்லை.இதன் அடிப்படையில் புதிய இசையமைத்தல்அவற்றினை மீள எடிட்டிங் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பல்வேறு கணினி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றின் வரிசையில் தற்போத ACID Xpress எனும் மென்பொருளும் இணைந்துள்ளது. சோனி நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மென்பொருளினை முற்றிலும் இலசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் ஆடியோக்களை Edit, Mix, மற்றும் Record செய்யும் வசதியினை தருகின்றது.இன்று காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கணினிகளில் காணப்படும் அப்பிளிக்கேஷன்களை செயற்படுத்துவதற்கு Responding Heads 4 எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொடுதிரையின் மூலம் கணினிகளை இயக்கும் தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக குரல் கட்டகளைகள் மூலம் அவற்றினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் புதிய பரிமாணத்திற்குள்
இம்மென்பொருளினை கணினியில் நிறுவிக்கொண்டு நுனுக்குப்பன்னி (Microphone) மூலம் குரல் வழிக்கட்டளைகளை வழங்குவதன் ஊடாக ஏனைய அப்பிளிக்கேஷன்களை இயக்கக்கூடியவாறு காணப்படுகின்றது.
உதாரணமாக Outlook Express - இனை ”Open Mail” எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் செயற்படுத்த முடியும்.

அப்பிளின் iOS 6.0.2 புதிய பதிப்பு வெளியானது

அப்பிள் நிறுவனம் தன்னுடைய இயங்குதளமான iOS 6.0.2 பதிப்பினை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
 ஐபோன் 5 மற்றும் ஐபோன் மினியில் இந்த இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.
இந்த புதிய பதிப்பில்பழைய பதிப்பிலிருந்த wi-Fi இயக்கத்தின் பிழை திருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு Settings என்பதில் Software Update சென்று System Softwareதொகுப்பினை அப்டேட் செய்து கொள்ளலாம் அல்லது ஐட்யூன்ஸ் (iTunes)வழியாகவும் அப்டேட் செய்திடலாம்.

Android 4.1 Smart TV இனை அறிமுகப்படுத்துகின்றது Archos


கூகுளின் இயங்குதளமான Android 4.1 Jelly Bean இல் செயற்படக்கூடிய Smart TV இனை உருவாக்கியுள்ள Archos நிறுவனம் அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்தக்
காத்திருக்கின்றது.
1.5 GHz Multi-Core TI OMAP 4470 Processor, 1GB RAM, மற்றும் 8GB சேமிப்பு சாதனம் ஆகியவற்றினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது Ethernet port, Mini HDMI output, Micro USB port, Micro SD slot, HD webcam என்பனவற்றினையும் LED சமிக்ஞை விள்குகளையும் கொண்டுள்ளன.
இத்தொலைக்காட்சியின் ஊடாக கூகுளின் Play Store போன்றவற்றினை பயன்படுத்தக்கூடியதான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியின் பெறுமதியானது 129 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audio Editing செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள்


MP3 கோப்புக்களை பயன்படுத்தி Audio Editing செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

எனினும் அவற்றில் அனேகமானவற்றை பணம் கொடுத்து கொள்வனவு செய்யவேண்டி இருப்பதுடன் கடினமான பயனர் இடைமுகத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றன.
ஆனால் Audio Mp3 Editor எனும் மென்பொருளானது முற்றிலும் இலவசமான மென்பொருளாகவும்இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
தவிர Converter மற்றும் CD Ripper ஆகவும் இம்மென்பொருள் தொழிற்படுகின்றது. அதாவது MP3, WMA, WAV, Ogg Vorbis, VOX, Audio CD Tracks(CDA), PCM, RAW, AVI, MPEG, G721 ஆகிய கோப்புக்களாக மாற்றும் வசதியினை இம்மென்பொருள் கொண்டுள்ளது.

Click & Clean: கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

கணனியில் தேங்கும் Browsing History, Ttyped URLs, Flash Cookiesபோன்றவற்றினை இலகுவாக நீக்குவதற்காக Click & Clean எனும் நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 கணனியின் வன்றட்டில் காணப்படும் தேவையற்ற கோப்புகளை CCleanerஅல்லது Wise Disk Cleaner போன்ற மென்பொருட்களின் உதவியுடன் நீக்க முடியும்.
இதே போன்று தேவையற்ற கோப்புகளை நீக்கவும்கணனியின் வேகத்தை அதிகரிக்கவும் Click & Clean எனும் நீட்சி பயன்படுகிறது.

புதுவருடத்தில் ஓர் இலவசமான அன்டிவரைஸ் மென்பொருள்


 பெருகிவரும் கணினி பாவனைக்கு ஈடாக வைரஸ் தாக்கங்களும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
இப்படியான வைரஸ் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் காணப்படுகின்றபோதும் அவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைப்பதில்லை.
ஆனால் பிரபலமான அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றானBitdefender Antivirus தற்போது புதுவருடத்தில் Bitdefender Antivirus 2013 எனும் பெயரில் தனது இலவச பதிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடிய இம்மென்பொருளை பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.

0 comments:

Post a Comment