''ஐ'' திரைப்பட விமர்சனம்

1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார், ஹீரோ. அந்த சோதனையில் தன்னையே உட்படுத்திக் கொண்ட போது, அனுப்பும் தளத்தில் ஒரு ஈயும் சேர்ந்து விட, ஹீரோ மனிதனும், ஈயும் சேர்ந்த கலப்பினமாக மாறி விடுகிறார். அதனால் அவரது உடம்பிலும், முகத்திலும் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மனிதனாக மாறுவதற்கான போராட்டங்கள், இடையில் காதலியுடனான பிரச்சனைகள் என்று படம் போகிறது
இந்தப் படம் பற்றி ஷங்கர் கேள்விப்படுகிறார். மனிதன் ஈயாக மாறுகிறான்,
முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். இதை
முழுமையாக காட்டாவிட்டாலும் படத்தின்  பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார். அதையே தமிழ் சினிமா ரேஞ்சுக்கு கதை கட்டியிருக்கிறார். எத்தனை நாள் அப்பள வியாபாரத்தையே காட்டுவது, இப்போது ஐடி காலத்தில் எது சீசன் என்று ஆள் வைத்து யோசித்திருப்பார். இப்படித்தான் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக மாறுகிறார். சங்கரும் 2014-க்கு அப்கிரேட் ஆகிறார்.
ஷங்கர் இந்தப் படத்தின் கதையாக சொல்லியிருப்பது, ஆண் மாடலுக்கு வில்லன் மருந்து செலுத்தி விலங்கு மனிதனாக மாற்றுவது என்று போகிறது. அதில் கூட, குறைவு இருக்கலாம். அடிப்படையில் பல காட்சிகள் ஃபிளை படத்திலிருந்து வருகின்றன. டிரெய்லரை பாருங்கள்.
அடுத்ததாக விக்ரம்... ‘என்ன நடிகன்பா... எவ்வளவு உழைப்பு..!’ என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் மனிதர். மாடலாக வரும்போது ‘ஹாலிவுட் மாடல்’ போல இருக்கிறார், ‘ஜிம்’ மாஸ்டராக வரும்போது முறுக்கேறிய உடம்புடன் நிஜ புஜ பலம் காட்டுகிறார், கோர முகம், சிங்க முகம் என ஒவ்வொரு காட்சியிலும் விக்ரமின் உழைப்பு உச்சபட்சம். இனி ஒரு நடிகர் இதுபோல் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழும் அளவுக்கு இருக்கிறது விக்ரமின் பங்களிப்பு!
இணையத்தில் பார்க்க கிடைத்தவை படி இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக போராடி வெற்றி பெறுகிறார். பொறுக்காத போட்டி விளம்பர வில்லன் நடிகர் வைரஸ் கிருமி மருந்தை விக்ரம் உடலில் செலுத்துகிறார். விக்ரம் உடல் மாறுகிறது. அதையே அதிகமாக காட்டினால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள், ஃபேமிலி சப்ஜெக்டாக மாற்ற முடியாது என்பதால் அசிங்கமான விக்ரமை வைத்து பல்வேறு ஆக்சன் காட்சிகள், கிராபிக்ஸ் பாடல்கள் என்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். இறுதியில் விக்ரம் தனது சிக்ஸ் பேக் உடலை திரும்பப் பெற்று வில்லனை வீழ்த்தி நாயகியை கைபிடிக்கிறார்  என்பதே கதை.
 ''தி ஃபிளை'' என்ற ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து பிறந்தது  ''ஐ'' என்றாலும் எம்மால் புரிந்து இரசிக்கக்கூடியதாக எம்மொழிமூலம் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை உருவாக்கிய ஷங்கரை பாராட்டாமல் இருக்கமுடியாது. 

ஆசிட் வீச்சிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் அங்கங்களை இழக்கும் மனிதர்களை இப்படம் எப்படி பார்க்கிறது? யானைக்கால் வியாதி கொண்டோர், இதர  நோய்களால்விகாரத்தோற்றம் கொண்டோரெல்லாம் ஏழைகளின் பகுதியில் இயல்பாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் மயிலாப்பூர் பகுதிகளில் அந்த உணர்வு எப்படி இருக்கும்? விடை வேண்டுவோர் படம் பார்க்கலாம்.


-தொகுப்பு :கன்னன் 







0 comments:

Post a Comment