“நந்தா” புகழ் பெற்ற நாயகன் நடிகமணி வி.வி.வைரமுத்து-மண்டபம் நிறைந்தது மதியழகனின் நூல் வெளியீட்டு விழா

வெளியீட்டு விழாவில் கவிஞர் கந்தவனம்


“தலை சிறந்த நாடக நடிகரான வி.வி.வைரமுத்துவைப் பற்றி பிரபல+அகம்) உள்ளகம் எனப் பொருள்படும். நந்தாப் புகழ்பெற்ற நடிகமணி வி.வி.வைரமுத்துவுக்கும் தனக்கும் இடையிலான தொடர்புகளை இந்நூலின் மூலம் தம்பி மதி யழகன் ஆவணமாக்கி உள்ளார்.

ஊடகக் கலைஞரான தம்பி மதிய ழகன் அருமையான ஏடு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அரைத்த மாவையே அரைக்காது புதிய நடையி ல் இதனை நாவல் போலவும், நாடகம் போலவும் வானொலி நடையில் படைத்துள்ளார். நாடகம் (நாடு +.அகம்) விரும்பும் இடம். ஊடகம் (ஊடு
எட்டாவது அத்தியாயத்தில் நாட்டில் நிலவிய
போர்ச் சூழலை மிக உருக்கமாக எழுதியுள்ளார். ஒன்பதாவது அத்தியாயத்தில் நடிகமணியின் கையெழுத்துடன் கூடிய கடி தம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பதினொராவது அத்தியாயத்திலே வாசகர்களே நீங்கள் இப்போது வானொலி கேட்கும் நேயர்களாக மாற வேண்டுமெனக் கூறி வானொலிக்கான நடையில் எழுதியுள்ளார். எமது சிற ந்த நாட்டுக்
கூத்து கலைஞரின் வாழ்க்கையினை ஆவணப்படுத்தியமைக்காக நான்
தம்பி மதியழகனு க்கு ஒரு முத்தம் கொடுக்கின்றேன். அவரது கலைச் சேவையைப் பாராட்டி கலாச்சார அமைச்சு 2012ம் ஆண்டு “கலாபூஷணம்” என்ற விருதினை வழங்கி கௌரவித்தமை பெருமைக்குரிய விடயம்”.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஸ்காபுறோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்ற திரு.மதியழகனின் நடிகமணி வி.வி.வைரமுத்துவைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் வெளியீட்டுரை நிகழ்த்திய கவிஞர் கந்தவனம் இவ்வாறு கூறினார். எழுத்தாளர் இணையத்தினால் நடாத்தப்பட்ட இந்நூல்
வெளியீட்டு விழா விற்கு இணையத்தின் தலைவர் திரு.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். “1971ம் ஆண்டு தினபதி பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றி பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து சேவையாற்றி தமிழ் சேவை பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற திரு.மதியழகனின் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்குவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.
நடிகமணி வைரமுத்துவின் சொந்த இடமான காங்கேசன்துறையை சேர்ந்தவரும், இலங்கை ஒலி பரப்பு கூட்டுத்தாபணத்தின் தமிழ் பிரிவு தலைவராகவும், தற்போது இங்கு ரி.வி.ஐ.யின் நிறைவேற்று அதிகாரி யாகவும் பணியாற்றி வரும் திரு.விக்னேஸ்வரன் அறிமுக உரையாற்றிய போது “என்னுடன் நாற்பதா ண்டு காலமாக பணியாற்றி வரும் நண்பர் மதியழகன் இந்நூலை வெளியிட்டுள்ளார். நடிகமணியின் ஊரான காங்கேசன்துறையைச் சேர்ந்த நான் சிறுவயது முதல் நடிகமணி வைரமுத்துவை கண்டு களித் தவன். நான் இலங்கை வானொலி
நிலையத்துக்கு நேர்முகப் பரீட்சைக்கு சென்ற போது நடிகமணியின் கடிதத்துடன் சென்றேன். அங்கு அதிபராக இருந்த காலஞ் சென்ற கே.எஸ்.நடராசா அவர்கள் அக்கடித த்துக்கு மிக்க மரியாதை செலுத்தினார். அதன் மூலம் எனக்கு பதவியும் கிடைத்தது. பிற்காலத்தில் நான் நடிகமணியுடன் மிக நெருக்கமாகப் பழகினேன். “வசந்த கான சபை” என்ற அமைப்பின் பெயரில் நடினமணி வைரமுத்து அவர்கள் பல நாடகங்களை மேடை ஏற்றினார். அவரது நாடகங்களுள் “அரிச்சந் திரன் மயான
காண்டம்” மிகவும் சிறப்பான நாடகமாகும். அவரது சேவையைப் பாராட்டும் வகையில் நண்பர் மதியழகன் இந்நூலை எழுதியுள்ளமை பாராட்டுக்கு உரியதாகும்” என்றார்.
இந்நூலுக்கு ஆய்வுரை வழங்கிய பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் “மரத்தில் மறைந்தது மாமத யானைஇ யானையில் மறைந்தது மரம்” என திருமூலர் பாடியதைப் போன்று மதியழகன் தன்னையும், நடிகமணியையும் அத்துடன் ரசிகர்களையும் ஒன்றாக இணைத்து இந்நூலினை எழுதியுள்ளார். இந்நூ லுக்கு பேராசிரியர் சி.தில்லைநாதன் அணிந்துரை வழங்கியுள்ளார்.
நடிகமணி வைரமுத்துவின் வாழ்க் கை வரலாறு, ஆற்றல், நடிப்புத் திறண் ஆகியவற்றினை எடுத்தியம்பும் நூலாக இது அமைந்துள்ளது. வரலாறு பேணப்படுகின்றது. நமது பண்டைய பாரம்பரியங்களை நம்மவர்கள் ஆவணப்படுத்தாது விட்டத னால் அவற்றை எல்லாம் நாம் இழந்து விட்டோம். ஆனால் வி.வி.வைரமுத்துவைப் பற்றி வி.மதியழகன் (மூன்று “வி”க்கள்) இந்நூலை ஆவணப்படுத்தி உள்ளமை வரவேற்கத் தக்கது” என்றார். பேராசிரியர் திரு.பாலசுந்தரம், லிபரல் கட்சி வேட்பாளரான திரு.ஹரி ஆனந்தசங்கரி, மார்க்கம் மாநகர சபை உறுப் பினர் திரு.லோகன் கணபதி, திரு.பத்மநாதன் ரவீந்திரன் ஆகியோருட்பட மற்றும் பலரும் உரையாற்றி னார்கள்.
இவ்விழாவில் நடிகமணியின் நாடகத்தில் லோகிதாசனாக நடித்த திரு.கிருஷ்ணபிள்ளை சுதாகரன் மொன்றியலில் இருந்து வந்து பக்க வாத்;தியங்கள் சகிதம் பாடல்களைப் பாடிய போது ஊரிலே நாடகங்களை நேரடியாகப் பார்த்து ரசித்ததைப் போன்று மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
நன்றி:வீரகேசரி மூர்த்தி


0 comments:

Post a Comment