(விடுப்பும் நடப்பும்) கனடாவிலிருந்து ஒரு கடிதம்


                                                   03.02.2014 
அன்புள்ள அப்புவுக்கு,வணக்கம்.         
                    நான் நலமுடையேன்.உங்கள் சுகங்களையும் கடிதம் மூலம் அறிந்து மகிழ்ச்சி.
 அப்பு,உங்கள் கடிதம் தற்போது ஊரின் நிலையை தெளிவாகக் கூறியது.

எங்கட ஆட்களும் இப்போது  தென்னிந்தியத் தமிழ்ச்சினிமாவுகுள்ளும், சின்னத்திரைத் தொடர்களுக்குள்ளும் அமிழ்ந்துபோய் இருப்பது கவலையையே கொடுக்கிறது.ஒரு இனத்தின் கலை,மொழி பண்பாட்டினை காக்கவேண்டிய மேற்படி ஊடகங்கள் மாறாக எம் இனத்தினையே அழிக்கவென்று உறுதிபூண்டுள்ளதாகத் தெரிகிறது. இதிலும் குறிப்பாக இளையோர் அவற்றிற்கு அடிமைப் பட்டிருபதனை திரும்பத்   திரும்ப   அரைத்த மாவினையே அரைத்துக்கொண்டிருக்கும் வன்முறையின் வெளிப்பாடான திரைப்படங்களின் 'கட் அவுட்'ற்கு பாலாபிசேகம் செய்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததனை வெளிக்காட்டுகிறது.கலை ஆர்வம் மனிதனுக்கு இருக்கத்தான் வேண்டும்.அதற்காக இப்படியா கீழ் நிலையுக்கு செல்வது,
ஒரு இனம் தழுவிய திரைப் படத்தினை பார்த்தால் அவகளின் அவ்வினத்தின்  பண்பாட்டினை புரிந்து கொள்ளலாம் என கூறும் உலகத்தின் மத்தியில் தங்கள் பணப்பையை நிரப்புவதே நோக்கமாகக் கொண்ட இன்றைய தமிழ் சினிமா/சின்னத்திரை  தமிழர்களை இரத்த/கொலை வெறியர்களாகவும், பெண்/ஆண் பித்துப் பிடித்தவர்களாகவும், ஆபாசப் பிரியர்களாகவும், பழிவாங்கும் காட்டு விலங்குகளாகவும் தமிழர்களை வெளிஉலகிற்கு காட்டுவதன் மூலம் எதிகாலச் சந்ததியினரை அவ்வழிக்கே இட்டுச் செல்கின்றனர்.
அப்பு,உங்கள் அடுத்த கேள்விக்கு எனது பதிலைச் சொல்கிறேன்.இங்கு மட்டும் கல்யாணத்திற்கு நாள் பார்க்கக் கேட்டால் சனி ஞாயிறு விடுமுறை நாளாகத் தேடி சுபமுகூர்த்தங்கள் அதுவும் எல்லோருக்கும் வசதியாக சனி அல்லது ஞாயிறு மதியம் 12 மணியை அண்மித்ததாக கூறி உழைத்துவிடுவார்கள்.வீடு குடிபூரல் என்றால் அது கோயில் திறக்க முந்திய நேரமாக அதிகாலை சுபநேரமாக ஆக இருக்கும். இப்பிடித்தான் இங்கு சுபகாரியங்கள் நடக்கின்றன.
அதிலும் அண்மையில் நடந்த சுவையான சம்பவத்தினைக் கூறுகின்றேன்.
என் நண்பன் ரகுவரன்  தனது திருமணத்துக்காக ஐயரை சந்திச்சு நாள் கேட்டபோது அவர் ஜனவரி மாதத்தில் நாள் குறிச்சுக்  கொடுத்தவர், அடுத்தகிழமை டெலிபோன் மூலம் அது பிழை என்று பெப்ரவரி மாதம் கொடுத்தாராம்.சரி என்று பயபக்தியுடன் ஏற்றுக் கொண்ட ரகுவரன், அவனுக்கென்று முதலில் ஐயர் கூறிய நாளில் அழைக்கப்படிருந்த தனது நண்பனின் கலியாண வீட்டுக்கு சென்றிருந்தானாம்.என்ன ஆச்சரியம்!அதே ஐயர் அங்கே நண்பனின் திருமணத்தினை நடத்திக் கொண்டிருந்தாராம்.
எப்பிடி இருக்கு?
அப்பு,நீங்களும் உங்கள் சுகத்தினையும், தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.மீண்டும் கடிதம் மூலம் சந்திப்போம்.
இப்படிக்கு,
உங்கள் மகன்
செ..வேந்தன்

0 comments:

Post a Comment