பெண்களைத் தீட்டு என்று ஒதுக்கலாமா?- சித்தரின் விளக்கம்

Image result for women tamilஇந்துக்களில் எத்தனை நாயன்மார் வாழ்ந்து சென்றென்ன இறைவனை முற்றிலும் உணர்ந்து கொண்டவர்கள் சித்தர்கள்  மட்டுமே. நாலு நல்ல விஷயத்தினை கூறினால் கூறியவரை கடவுளாக்கிவிடும் நம்மவர் மத்தியில் சித்தர்கள் கருத்துக்கள் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதாலேயே அவர்கள் ஆரியரின் ஆலய  வியாபாரத்துக்குள் எடுத்துக்கொள்ளப்பட முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை.
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள - 049 
றையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
 
 பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டுஅவர்கள் குளிக்கும் அறையில் குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டுஇறந்தால் தீட்டு என்று சொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

****************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்050 -  
தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள் தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. 

தீட்டாகிவிட்டதே, தூமையாகிவிட்டதே என்று சொல்லி துவண்டு வருந்தி அலையும் ஏழைகளே! தூமையானவாலைப்பெண் உனக்குள்ளேயே இருக்கும்போது தீட்டு என்பது உன்னைவிட்டு எவ்விடம் போகும். அதுபோனால் உனது உயிரும் உடலை விட்டு போய்விடும். ஆமையைப் போல் நீரில் தலையை மூழ்கிவிட்டு, தீட்டு போய்விட்டதாகக் கூறி அனேகவித வேத மந்திரங்களை ஒதுகின்றீர்கள். அந்த வேத சாஸ்திரங்களை உங்களுக்குச் சொல்லித் தந்த சொற்குருக்களும் இந்த தூமையினால்தான் உருவாக்கி வளர்ந்து திரண்டுருண்டு ஆனவர்கள்தான் என்பதனை அறிந்துருங்கள்.
                                                      

2 comments:

  1. பரந்தாமன்Wednesday, August 16, 2017

    சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
    ஆனால் இக்காலத்தில் மேற்படி சித்திகளை எடடாத மக்களால் சாமிகளாக்கப்படட மனிதர்களையும் சித்தர்கள் என சிலர் குறிப்பிடுவது வேதனைக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான வேதனை

      Delete