காப்புறுதி



 கனடாவில்....................


வீட்டுக் காப்புறுதிப் பத்திரங்கள் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
காப்புறுதிப் பத்திரங்கள் அவற்றின் காப்பு, விலை மற்றும் சேவை என்பவற்றில் நிறுவனத்திற்கு நிறுவனம் மிகவும் வேறுபட்டனவாக இருக்கலாம்.
காப்புறுதி நிறுவனங்கள் தமது சொந்த முகவர்கள் அல்லது சுயாதீனமான காப்புறுதி தரகுவேலையாளர்கள் மூலமாக உங்கள் வியாபாரத்திற்குப் போட்டியிடுகின்றன. அவர்கள் கட்டணங்களில் மட்டுமல்லாது சேவை மற்றும் பணமளிப்பு போன்ற விடயங்களிலும் போட்டியிடுகின்றன. காப்புறுதி தரகுவேலையாளர் ஒருவர் உங்களுக்குரிய தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் ஒரு காப்புறுதிப் பத்திரத்தினைச் சிறந்த விலையில் பெற்றுத் தருவதற்காக வெவ்வேறு காப்புறுதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் உதவ முடியும். தரகுவேலையாளர்கள் தங்கள் சேவைக்கென கட்டணத்தை அறவிடுவார்கள்.
நீங்கள் ஒரு இல்லத்தினை வாங்குவதாக இருப்பின், உங்களுக்கு அடமானப் பணத்தை வழங்கும் வங்கிகள் ,உங்கள் கடனுக்கான பாதுகாப்பாக உங்கள் நிலஆதனம் இருப்பதனால், நீங்கள் வீட்டு உரிமையாளர் (அல்லது ஆதன) காப்புறுதியைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்கும். ஒரு வீட்டு உரிமையாளர் காப்புறுதிப் பத்திரம் நீங்கள் வசிக்கும் கட்டிடத்திற்கும் அதன் கொள்பொருட்களுக்குமான காப்பினை வழங்கும். இப்பத்திரம் இல்லத்தின் கட்டமைப்புக்கு மட்டுமே காப்பு வழங்கும் அது அத்திவாரத்திற்கு அல்லது இல்லம் அமைந்திருக்கும் காணிக்கான பெறுமதிக்கு காப்பு வழங்காது. நீங்கள் உங்கள் இல்லத்திற்கெனச் செலுத்திய முழுத் தொகைக்கும் அது காப்பு வழங்க மாட்டாது.
            நீங்கள் ஒரு தனியுரிமை அடுக்குமாடி இல்லம் (condominium) அல்லது அடுக்குமாடி இல்லத்தினை (apartment) வாடகைக்குப் பெற்றிருந்தால், நீங்கள் அக்கட்டிடத்திற்கு உரிமையாளர் அல்லாததினால் அதிலுள்ள கொள்பொருட்களுக்கு மட்டுமே காப்பு வழங்கப்படும்.
                  நீங்கள் மாதாந்தம் செலுத்தும் காப்புறுதித் தொகை காப்புறுதிக் கட்டுப்பணம் அல்லதுபிறிமியம்’ (premium) என அழைக்கப்படும். இது உங்கள் இல்லத்தின் பெறுமதி மற்றும் / அல்லது அதன் உள்ளடக்கத்தின் பெறுமதியில் தங்கியிருக்கும். உங்கள் வங்கி அல்லது கடன் பணமளிப்பவர் உங்களை ஓர் அடமான ஆயுள் காப்புறுதியினைப் பெறுமாறு ஆலோசனை வழங்குவார். இது உங்கள் வழமையான அடமானக் கட்டணத்துடன் மேலதிகமாகச் சேர்க்கப்படும் ஒரு காப்புறுதிக் கட்டுப்பணத் தொகையாகும். இந்த வகையான காப்புறுதி நீங்களோ அல்லது உங்கள் துணைவரோ மரணித்தால் உங்கள் அடமானக்கடனை முழுமையாகச் செலுத்திவிடும்.
காப்புறுதிப் பத்திரங்களின் வகைகள்
காப்புறுதிப் பத்திரங்கள் 3 வகைப்படும்:
பெயரிடப்பட்ட பாதிப்புக் காரணிகள் /நேம்ட்பெறில்கள்’(Named Perils) –உங்கள் இல்லக் கட்டிடம் மற்றும் அது கொண்டுள்ள கொள்பொருட்களுக்கு குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள காரணிகளான மின்னல், பனிக்கட்டி மழை, புயல்காற்று, நீர் சேதம் அல்லது களவு போன்றபாதிப்புக் காரணிகள் (‘பெறில்கள்’) அல்லது ஆபத்துக்கள் / பேரழிவுகளால் ஏற்படும் நேரடியான இழப்பு அல்லது சேதத்திற்கான காப்பினை இது வழங்கும். இதுவே மிகக்குறைந்த கட்டணமுள்ள ஆனால் மிகவும் ஆபத்துக்கூடிய பத்திரமாகும்.
விரிவானது / ‘ப்றோட்’ (Broad) – பரவலான இந்தக் காப்புறுதி "சகல ஆபத்துக் காரணிகள்" என்பவற்றின் அடிப்படையில் உங்கள் இல்லத்துக்கு (பௌதிகக் கட்டிடம்) பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் நீங்கள் அதிலுள்ள கொள்பொருட்களுக்கு பெயரிடப்பட்டபெறில்களைக் குறிப்பிட வேண்டும். "சகல ஆபத்துக்காரணிகள்" என்ற அடிப்படை பல காரணிகளால் ஏற்படும் இழப்பிற்கான காப்பினை இது வழங்குகின்றது.
யாவும் அடங்கியது /‘கொம்ப்பிறிஹென்ஸிவ்’(Comprehensive) –இக்காப்புறுதி உங்கள் இல்லத்துக்கும் (பெளதிகக் கட்டிடம்) மற்றும் அதன் கொள் பொருட்களுக்கும் சகல ஆபத்துக் காரணிகள்அதாவது இழப்பு அல்லது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எவற்றிற்கும் பொருந்துகின்ற பாதுகாப்பினை வழங்குகிறது. இதுவே மிக விலை உயர்ந்த வகையாகும்.
இந்த மூன்று வகைப் பத்திரங்களின் காப்பு, ஒரு காப்புறுதி வழங்குனருக்கும் இன்னொரு காப்புறுதி வழங்குனருக்குமிடையே வேறுபடக்கூடும். நிறுவனங்கள் தம்மிடமுள்ள சேவைத்திட்டங்களைப் பொறுத்து இவ்வகைகளை வேறுபட்ட பெயர்கள் கொண்டு அழைக்கக்கூடும்.

நீங்கள் காப்புறுதிக்குச் சம்மதிக்க முன்னர் உங்கள் காப்புறுதி முகவர் அல்லது தரகுவேலையாளர் மூலம் நீங்கள் காப்புறுதிப் பத்திரம் பற்றிய விளக்கத்தைப் பெறுவது முக்கியமாகும். நீங்கள் எதனை வாங்குகின்றீர்கள், மற்றும் உங்கள் காப்புறுதிப் பத்திரத்தின் கீழ் எவை காப்பினைப் பெற்றுள்ளன என்பதனை நீங்கள் அறிந்து கொள்வதை உறுதிப்படுத்துங்கள்.
முக்கியமான தொலைபேசி இலக்கங்கள்
கனடா காப்புறுதி பணியகம் (Insurance Bureau of Canada /IBC) (1) – கனடாவிலுள்ள பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதியாக இது இருக்கின்றது. நீங்கள் ஒன்ராறியோ ஐபிசி நுகர்வோர் தகவல் நிலையத்தினை (IBC Ontario consumer information centre) அழைத்து ஐபிசி அங்கத்துவம் பெற்ற நிறுவனம் ஒன்றைக் கண்டறியலாம்.
கட்டணமற்ற தொலைபேசி இலக்கம்: 1-800-387-2880
தொலைபேசி: 416-362-9528
ஒன்ராறியோ காப்புறுதி தரகுவேலையாளர் அமைப்பு (The Insurance Brokers Association of Ontario /IBAO) (2) – இது உங்களுக்கு ஒரு தரகுவேலையாளரைக் கண்டறிவதற்கான உதவியை வழங்கும். அழையுங்கள்: தொலைபேசி: 416-488-7422
கட்டணமற்ற தொலைபேசி இலக்கம்: 800-268-8845 அல்லது 888 ASK-IBAO
உங்கள் உள்ளூர் மஞ்சள் பக்கங்களில் (Yellow Pages) ‘காப்புறுதி முகவர்கள் ("Insurance Agents") அல்லதுகாப்புறுதி தரகுவேலையாளர்கள்’ ("Insurance Brokers") என்ற தலைப்புகளின் கீழும் நீங்கள் பார்க்கலாம்.
அடமானம் மற்றும் வீட்டுவசதிக்கான கனடா கூட்டுத்தாபனம் (Canada Housing and Mortgage Corporation) (3) என்பது கனேடியர்களுக்கு பாதுகாப்பான, உறுதியான மற்றும் கட்டுப்படியாகக்கூடிய வீட்டுவசதியினை வழங்குவதை உறுதிப்படுத்தவென கனேடிய அரசினால் நிறுவப்பட்ட ஒரு முகவர் நிலையமாகும். இந்த CMHC ஆனது வீட்டுக்கான பணம் பெறல் மற்றும் வீட்டுத்துறை சார்ந்த ஆய்வு பற்றிய தகவலையும் வழங்குகின்றது.
சிஎம்எச்ஸி ஒன்ராறியோ அலுவல்கள் நிலையம், ரொறோன்ரோ – (CMHC Ontario Business Centre, Toronto):
தொலைபேசி: 416-221-2642
கட்டணமற்ற தொலைபேசி இலக்கம்: 1-866-389-1742
மேலதிக தகவலுக்கு:
(1) கனடா காப்புறுதி பணியகம் (Insurance Bureau of Canada):
http://findlink.at/ibc
(2) ஒன்ராறியோ காப்புறுதி தரகுவேலையாளர் சங்கம் (Insurance Brokers Association of Ontario):
http://findlink.at/ibao
(3)அடமானம் மற்றும் வீட்டுவசதிக்கான கனடா கூட்டுத்தாபனம் (Canada Housing and Mortgage Corporation):
http://findlink.at/cmhc

0 comments:

Post a Comment