Happy Pongal

கேலிச்சித்திரம்:-கவலை இல்லாத மனிதன்

ஆன்மீகம்:- காவி ஆடையில் பாவி மனங்கள்

உலகத்தில் உள்ள அநியாயங்களை பார்த்து வெறுப்படையும் மனிதன் மனசாந்திக்காகவும், ஒழுக்கமான வாழ்க்கை முறைக்காகவும் கடைசி புகலிடமாக ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கிறான். நியாய சபையின் முன் நீதி கேட்க சென்றவனை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சாட்டையால் அடிப்பது போல் பல நேரங்களில் அமைதிக்காக சரணடையும் ஆன்மிக புகலிடம் கொலைக்களமாக மட்டுமல்ல அருவறுப்பான உளுத்த மேடையாகவும் இருப்பதை பார்த்து வெறுத்து போய் எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை கொள்ள ஆரம்பிக்கிறான்.

கடவுள் இல்லை, கடவுளை வணங்காதே என்று சொல்லுபவனும், நம்புபவனும் குற்றவாளி அல்ல. அவன் பாவப்பட்டவனும் அல்ல. ஏனெனில் அவன் தனக்குள் இறைவன் இல்லை என்பதனை ஒளிவு மறைவு இன்றி ஒத்துக் கொள்கிறான். கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு அவரை மாயவாத கவர்ச்சி பொருளாக பயன்படுத்தி தமக்குத் தெரிந்த மாஜாஜாலா வித்தைகளை காட்டி,மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவன் அயோக்கியன் மட்டுமல்ல வாழ தகுதியற்றவனாகவும் இருக்கிறான்.ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் அட்டுழியம் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் இரும்பாக்கி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு சீர்கேட்டை ஏற்படுத்தி விடும்.

பிரம்மாண்டமான ஆலயம் கட்டுவதும்,பெரும் செலவில் திருவிழாக்கள் செய்வதும் ஆன்மீகத்தின் நோக்கமல்ல. வியாபார நோக்கங்கள் அவை கொண்டிருக்கும்போது, அவை இறை பணியும் ஆகாது.மக்கள் பணியே இறைபணியாகும் என்பதனை மறந்து மக்கள் சேவை மகேசன் சேவை என்றவாசகம் ஆலயங்களிலிருந்து தூக்கி எறியப்பட்டு பல்லாண்டுகளாகி விட்டது. கல்வி கிடைக்காதவர்க்கு கல்வியும் மருந்து தேவைப்படுவர்க்கு மருந்தும், விளக்கு இல்லாத ஊருக்கு விளக்கும் கொடுக்க வேண்டியது தான் இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.சமூக சேவகர்கள் என்று கூறிக் கொள்ளும் சாமியர்களின் பலர் கூட நூறு ரூபாய் சேவை செய்வதற்க்கு ஆயிரம் ரூபாய்க்கு விழா எடுக்கிறார்கள்.இதனால் வாங்கும் நன்கொடைகள் விமர்சனத்திற்கு உட்பட்டுவிடுகிறது.(தொடரும்.....)
- குருதேவசித்தனன்தாஜி

சினிமா:-கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்

2011-01-11 “தென்மேற்கு பருவக்காற்று”


நடிகர்கள்- :சேது, வசுந்தரா, சரண்யா, தாஸ்

கதை-இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் வாழ்வியல் சார்ந்த கதை

புள்ளிகள்-90

2010-12-29 "மன்மதன் அம்பு"

நடிகர்கள் – கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா, ரமேஷ் அரவிந்த்,ஊர்வசி.

கதை- ஒரு நடிகையை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை காமெடியோடு சொல்லியிருப்பதுதான் இப்படத்தின் கதை!

புள்ளிகள்-70

2010-12-27 “ஆட்டநாயகன்”

நடிகர்கள் –ஷக்தி, ரம்யா நம்பீசன், சந்தானம், நாசர்

கதை-அண்ணனை திருத்தும் தம்பியின் கதை.

புள்ளிகள்—45

2010-12-27 “அய்யனார்”

நடிகர்கள் – ஆதி, மீரா நந்தன், விஷ்ணுப்ரியன், சந்தானம், ஜெயபிரகாஷ்.

கதை- தன்மீது நம்பிக்கையில்லாத குடும்பத்தினரை ஒரு மனிதன் எப்படி நம்ப வைக்கிறார் என்பதுதான் கதை.

புள்ளிகள்—45

2010-12-27 “விருதகிரி”

நடிகர்கள் –விஜயகாந்த், மாதுரி இடாகி, ஷங்கர், மன்சூர் அலிகான்.

கதை -தீவிரவாதிகளைத் தனது புத்திசாலித்தனத்தாலும், புஜபலத்தாலும் பிடிக்கிறார்.

புள்ளிகள்— 50

10-12-23 “ஈசன்”

நடிகர்கள் – சமுத்திரக்கனி, ஏ.எல்.அழகப்பன், அபிநயா

கதை - சென்னையில் சாமங்களில் தறிகெட்டுத் திரிவோரின் கதை..

புள்ளிகள்— 45

2010-12-19 சித்து பிளஸ்2

நடிகர்கள் – சாந்தனு, சாந்தனி, கஞ்சாகருப்பு.

கதை- பரீட்சையில் தோற்றதால் வீட்டை விட்டு ஓடும் ஒரு மாணவன்-மாணவி.

புள்ளிகள்— 55

2010-12-15 “மந்திரப் புன்னகை”

நடிகர்கள் – கரு.பழனியப்பன், மீனாட்சி, சந்தானம்

கதை - பெற்றோருக்கு துரோகமிழைத்தவன்,பெண்சாதி தனக்குத் துரோகமிழைத்திடுவாளோ என்று சந்தேகப் படுவது.

புள்ளிகள்— 50

2010-12-15 “மகிழ்ச்சி”

நடிகர்கள் – வ.கௌதமன், கார்த்திகா, கஞ்சா கருப்பு.

கதை- அக்காவின் வாழ்வுக்காக தம்பியின் தியாகம், நிறைந்த கதை.

புள்ளிகள்— 50

2010-12-15 வ குவாட்டர் கட்டிங்

நடிகர்கள் – சிவா, பாலகிருஷ்ணா

கதை- அசத்தல் என்று சொல்வதற்கு பதில் ஸாரி

புள்ளிகள்—30

கடந்த ஆண்டு வெளியான 195 திரைப்படங்களில் 10 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஞாபகம் வருகிறதா?இவர்கள்தான்....

சுப்பிரமணியபாரதியாரும் கண்ணம்மாவும்