"உரிய தருணம்"
வானம் தெரியுமோ, வேளையை நனைய,
மனமும் மலருமோ காதலை உணர,
அந்த உரிய தருணம் வரும் நேரம்தான்,
திருமணம் புனிதம் அது நேர்மையால் தான்...
பச்சை பசுமைச் சிறு வயதில்,
படர்ந்த கனவுகள் மெழுகியதடி,
பட்டுப் புடவையில் புன்னகை பூத்தாள்,
பாடும் சுருதியில் வாழ்க்கை தேடாள்...
மாமி சொல்ல, "மதிப்புக் காலம்",
மாமா கேட்பார், “எப்போது நாளாம்?”
ஆனால் இதயம் தான் தீர்ப்பு தருமே,
அழகு நேரமோ அது தானே வருமே...
காலம் விரைவான வீசும் தென்றல்,
காணும் கண்கள் கனவு காணும் பூமி
விருப்பம் என்பதே விதியின் நாணயம்,
விதிவிலக்காக வென்றிடும் மனசு தான்!
தோழி சொன்னாள், “தூக்கம் குறைந்ததே!”
தாய் சொன்னாள், “பார்வை வந்ததே!”
ஆனால் மனம் தான் சொல்கிறது – "இன்னும்",
பிறந்தது காதல், இன்னும் விடியாது கனவும்...
வயது என்பதே எண்ணம் மட்டும்,
வாழும் உணர்ச்சி என்றும் மேகம்,
தயார் மனதில்தான் சேரும் பேரியம்,
அங்கேதான் மலருமே திருமண நிலவும்...
இரு உள்ளங்களும் இசைவாய் கலந்தால்,
ஒரு ஓவியம் அது வாழ்க்கை எழுதும்,
அழகு தருணம், அருவி போல ஓடும்,
அதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்...
வானம் தெரியுமோ, வேளையை நனைய,
மனமும் மலருமோ காதலை உணர,
அந்த உரிய தருணம் வரும் நேரம்தான்,
திருமணம் புனிதம் அது நேர்மையால் தான்...
: மனுவேந்தன்,செல்லத்துரை
"அலையாடும் அழகு"
"அலையாடும் அழகு குமரியின் வனப்பே
விலையற்ற அவளின் கவர்ச்சி சிரிப்பே!
உலை வைக்கும் மங்கையின் கையோ
கோலை பிடித்து நளினம் போடுதே!"
"சேலைத் தாவணியில் பூத்து குலுங்குதே
கலை நடனம் ஆடும் கண்களே!
சோலை நடுவில் எழில் பொழியுதே
இலைமறை காய் போன்ற மங்கையே!"
தலை முடி தோளைத் தொட
சிலை போல நீரில் நிற்கிறாள்!
சோலை நடுவில் பூத்த மலராய்
தலைவனை நினைத்து காத்து இருக்கிறாள்!"
"நிலைதடுமாற வைக்கும் தையல் இவளோ
குலைந்து விழுத்தும் அணங்கு இவளோ!
ஓலை மடலின் கவிதை இவளோ
தலை குனியா மடந்தை இவளோ!"
நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]