யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்?



யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"

 

"உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில்

வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில்

மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா?

மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??"

 

"வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா

வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா

வெறும் புகழும் பதவியும்  மனிதனல்லா

யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"

 

"கண்கள் விழித்து கருணை காட்டும்

கொடுமையைக் கண்டு மனது குமுறும்

அறிவுடன் அறிந்து உதவும் கரமும்

எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!"

 

"துயரம் கண்டு அக்கறை காட்டி

ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து

தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும்

அவனே மனிதன்! அவளே மனிதன்[மனிதி]!!"

 

 ෴෴

"பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்"

 

"பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்

பூரியரென்று யார் சொன்னது?

பூவையர் என்றால் கேவலமா

பூத்துக்குலுங்குவது அழகு மட்டுமா?"

 

"மண்ணில் வளத்தைக் காண்பவனே

பெண்ணில் வளமோ ஏராளம்!

ஆண்களின் இன்பப் பொருளல்ல

கண்கள் அவர்களே வாழ்வில்!"

 

"சிவன்- பார்வதி கதை தெரியாதோ

சித்தத்துடன் சமஉரிமை வழங்காயோ?

சினம்கொண்டு அவள் எழுந்தால்

சிதறிப்போவாய் வாழத் தெரியாமல்?"

[பூரியர் - இழிந்தோர், கீழ்மக்கள்]

 ෴෴

 

குறளோடு கவிபாடு

 

"அறிவு பரந்து கிடக்கும் உலகில்

அயராது அதைத் தேடி சுவைக்க

அக்கம் பக்கம் யார் நின்றாலும்

அச்சம் துறந்து கேள்வி கேட்டு

அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!"

 

"குறைந்த உணவை நிறைவாக அருந்தி

குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட

குறைகள் அற்ற ஆன்றோர் போல்

குமிழி வாழ்வில் நிறைவு அடைய

குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!"

 ෴෴

நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

'இனி' குறும்படம்

 


கணவன்/மனைவி  இறந்தால் தான்  அருமை தெரியும்.

📽பகிர்வு: தீபம் இணையத்தளம் / www.ttamil.com /dheepam / theebam

சிரிக்க... சில நிமிடம்

 


01😁

ஆசிரியர்: தேர்வுக்கு முன்னாடி என்ன பண்ணனும்?

மாணவன்: நமக்கு தெரியாம நமக்கு தெரிஞ்ச மாதிரி எழுதனும்!

02😁

நண்பன்: உனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாமா?

நான்: தயவு செஞ்சு செய்யாத! என் மூளை ஏற்கனவே மியூட் வச்சிருக்கேன்!

03😁

மனைவி: நான் தூங்குறப்போ உங்களுக்கு  என்ன தோணுது?

கணவன்: நிம்மதி!

04😁

நண்பன்: உன் லவ் ஸ்டோரி எப்டி முடிஞ்சது?

நான்: Battery low-னு அவளாய்   போயிட்டா!

05😁

வாத்தியார்: ஹோம் வொர்க் யாரும் பண்ணலையே?

மாணவன்: Whatsapp- Forward ஆகலைங்க...

06😁

பாட்டி: நீயும் என்ன மாதிரி பழைய பொம்மையா?

நான்: இல்ல பாட்டி, நா new model – charge பண்ணனா தான் வேலை செய்றேன்!

07😁

ஆசிரியர்: நீ எதுக்கு late?

மாணவன்: Sir, காலம், தாமதம் பண்ணிச்சு!

08😁

நண்பன்: உனக்கு stress கம்மியா செய்ய என்ன பண்ணுற?

நான்: Mobile silent mode போடுறேன்... பிறகு நான் சத்தமா சிரிக்கறேன்!

09😁

மாமா: ஏன் பாஸ் வேலைக்குப் போக மாட்டியா?

நான்: Dream job தான் வேலை பாக்கறேன்என் கனவில்!

10😁

டாக்டர்: உங்க உடம்பில சோர்வு அதிகமா இருக்கு, ஓய்வு எடுத்துக்குங்க

ஆசிரியர்: நான் பள்ளி ஆசிரியர்... ஓய்வு எடுக்க 60 ஆகணும்ங்க

11😁

ஆசிரியர்: இந்த பையனுக்கு என்ன பிரச்சனை?

டாக்டர்: உடம்புக்கு இல்லை மேடம்… Home work பண்ணாம வந்ததால தான் fever ஆகல இருக்கு!

12😁

மனைவி: உங்க லவ் எப்போ துவங்கியது?

கணவன்: நீ பேசாத நாளில் தான்!

13😁

கணவன்: நீ தான் என்னை first propose பண்ணினே!

மனைவி: நானு propose பண்ணல, mistake பண்ணேன்!

14😁

மனைவி: வீட்டில் TV இல்லாத நாளா இன்றைக்கு?

கணவன்: நீ பேசுறதால mute பண்ணிடேன்!

15😁

மனைவி: டாக்டர், இவர் என்கிட்ட பேச மாட்டேன்

டாக்டர்: அது நோயா, நன்மையா?

16😁

கணவன்: எனக்கு memory loss ஆகுதே!

மனைவி: என்னா ஆச்சு?

கணவன்: நீ யாரு?

17😁

மனைவி: இவர் ரொம்ப தூங்குறாரு

டாக்டர்: இது குறை இல்லம்மாஇது gift!

18😁

கணவன்: எப்பவுமே என் மனதைக் காயப்பண்ணுவே!

மனைவி: அதான் உங்களை  monthly check-upக்கு கூட்டிக்கிறேன்!

19😁

கணவன்: சாப்பாடு எப்போ?

ஆசிரியர் மனைவி: பத்து நிமிஷம் கழிச்சு bell அடிச்சா!

20😁

மனைவி: ஏனுங்க  வேலையால 9 மணிக்கு வீட்டுக்கு வாறிங்க?

கணவன்: Boss- அழைச்சாருடா

மனைவி:  உங்களுக்கு, நான் தான் போஸ் என்று அவருக்கு தெரியாதாக்கும்.

தீபம் இணையத்தளம் /theebam /dheepam / www.ttamil.com