26-01-2013 விஸ்வரூபம்
கதை : விஸ்வநாதன்(கமல்) ஒரு கதக் கலை நிபுணர். ஆனால் அவருடைய நளினத்தின் பேரினாலும், தன்னுடைய அலுவலக முதலாளியின் பொருட்டு ஆசை கொண்டதனாலும் நிருபமா (பூஜா குமார்) தன் கணவரைப்பற்றி துப்பறிய ஒருவனை பின்தொடர செய்கிறாள். அவன், வேறு ஒரு இடத்தில் தவறி செல்ல, ஜிஹாதி தீவிரவாதிகளின் கூடாரத்தில் சிக்கிக்கொள்கிறான். அவன் மூலமாக நிருபமாவின் அலுவலகம் தங்களை துப்பறிய அனுப்பினார்களோ என்று சந்தேகப்பட்டு விஸ்வநாதன் மற்றும் நிருபமாவை அவர்கள் தங்கள் இடத்தில் அடைத்து விசாரிக்கின்றனர். விஸ்வநாதன் உண்மையில் ஒரு இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர். விஸ்வநாதன் எவ்வாறு தப்பி செல்கின்றனர். என்ன நடந்தது என்பதை விறுவிறுப்புடன் கூறியுள்ளார் இயக்குனர்.
நடிகர்கள் : கமல் ஹாசன்,பூஜா குமார்,ஆண்ட்ரியா .
கருத்து : கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!
புள்ளிகள்:50
2013-01-16 கண்ணா லட்டு தின்ன ஆசையா
கதை : பாக்யராஜ் இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ என்ற பழைய படத்தின் கதை
நடிகர்கள்: சந்தானம், சீனிவாசன், சேது, விசாகா
கருத்து : பழைய படத்தோடு ஒப்பிட்டு பார்க்காமல் புதிய படமாக பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம்.
புள்ளிகள்:55
2013-01-16 சமர்
கதை: தானுண்டு தன் காதலுண்டு என்று போகிற ஒருவனை, சம்பந்தமேயில்லாமல் சீண்டிப்பார்த்தால் என்னாகும்?
நடிகர்கள்: விஷால், த்ரிஷா, சுனைனா
கருத்து : கொடுத்த காசுக்கு பாதகமில்லை
புள்ளிகள்:45
திரையுள்......
சினிமா விழாக்களில் கலந்துகொள்ளப் போவதில்லை: சிம்பு
தமிழ் சினிமா உலகில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் அஜீத். இவர், சக நடிகர்களைப்போல்
அல்லாமல், ஒரு சராசரி மனிதனாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார். இப்படி சாதாரணமாக இருப்பதாலேயே இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
இவருடைய தீவிர ரசிகர் நடிகர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரியும். அஜீத்தின் படங்களை சராசரி ரசிகன் போல் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவார். அந்த அளவுக்கு அஜீத்தின் தீவிர ரசிகர். அஜீத்தின் பல வழிமுறைகளை அப்படியே பின்பற்றுபவர் சிம்பு.
அஜீத் தான் நடித்த படங்களின் வெற்றி விழாக்களிலோ, திரையுலகம் நடத்தும் விழாக்களிலோ பெரிதாக கலந்து கொள்வதில்லை. தன்னுடைய படங்களைப் பற்றி விளம்பரமும் கொடுப்பதில்லை. அதேபோல், இனி சிம்புவும் அஜீத்தின் பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். இதனால் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டாலும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது இந்த முடிவை பின்பற்றப் போவதாக கூறியுள்ளார்
சூர்யாவின் சிங்கம்-2 பற்றிய சில தகவல்கள்
சிங்கம்-2வின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. ஆனாலும் இன்னும் படம் பற்றிய தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. இருந்தாலும் கிடைத்த சில தகவல்கள் இதோ…
* சென்னை, ஐதராபாத், தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி, பகுதிகளில் இரண்டு கட்டமாக வசன பகுதிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது.
* அனுஷ்காவும், ஹன்சிகாவும் போட்டி போட்டு கிளாமராக நடித்திருக்கிறார்கள்.
* அஞ்சலி நடித்த ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ஒரு கோடி செலவு செய்திருக்கிறார்கள். அஞ்சலிக்கு சம்பளம் 20 லட்சம்.
* தெலுங்கில் “யடுகு-2″ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
* படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளரே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். இந்தியில் அவரே தயாரிக்க இருக்கிறாராம்.
* நடுக்கடலில் கடற் கொள்ளையரும் சூர்யாவும் போடும் சண்டைக் காட்சி தூத்துக்குடி கடலில் 10 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் கடற் கொள்ளையர்கள் முஸ்லிம்கள் என்பதற்கு அடையாளமாக அவர்கள் முஸ்லிம் பெயர்களை சொல்லிக் கொள்வது போல காட்சி இருந்ததாம். இது வெளியில் கசிந்து எதிர்ப்பு கிளம்பியதால், டப்பிங்கில் அதை மாற்றி வேறு புரியாத பெயர்களை பயன்படுத்த இருக்கிறார்கள்.
* 3வது கட்ட படப்பிடிப்பு முழுவதும் பாடல் காட்சிகள்தான் படமாக்கப்படுகிறது. கென்யா, தான்சானியா நாடுகளுக்கு சென்று இயக்குனர் ஹரி லொக்கேஷன் பார்த்து திரும்பி உள்ளார். பாடல் காட்சிக்காக சூர்யா தான் வைத்திருந்த ஸ்பெஷல் மீசையை எடுத்து விட்டார்.
மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி
1980-90களில்
காமெடியில் தமிழ் சினிமா ரசிகர்களை கலகலப்பாக்கியவர் கவுண்டமணி. இவருடன் சேர்ந்து செந்திலும்
நடித்து அப்போது வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றன. இவருடைய காமெடிக்காகவே
அப்படங்கள் அனைத்தும் ஹிட்டாகின என்றால் அது மிகையல்ல. பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து
இவர் செய்யும் காமெடி இன்றளவும் தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.
அதன்பிறகு,
வடிவேலு, விவேக் ஆகிய காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் நுழையவே, இவருக்கு வாய்ப்புகள்
குறைந்து போனது. இவர் கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த
‘ஜக்குபாய்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு, வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டிலேயே முடங்கிவிட்டார்.
இருந்தாலும்,
தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை தேடிக் கொண்டிருந்த இவருக்கு தற்போது ஒரு படத்தில்
நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகர்
சாந்தனு நடிக்கும் ‘வாய்மை’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் கவுண்டமணி.
இப்படத்தில் டாக்டர் பென்னி என்ற கதாபாத்திரத்தில் வருகிறாராம். டாக்டர் பணியை ஒழுங்காக
செய்து கொண்டிருக்கும் இவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி சிலர் வற்புறுத்துவார்களாம்.
அதற்கு இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் முழுநேர காமெடியாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
இப்படத்தில்
சாந்தனுவுக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ பானு நடிக்கிறார். அ.செந்தில்குமார் இயக்குகிறார்.
விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து கூட்டம்… இங்கிலாந்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் தொடர்ந்து 3வது வாரமாக
அரங்கு நிறைந்த காட்சிகளாக விஸ்வரூபம் ஓடி வருகிறது. மேலும் ரசிகர்களின் கோரிக்கையைத்
தொடர்ந்து மேலும் 15 இடங்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளதாக அதன் வெளியீட்டாளரான
ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி15ம் தேதிக்குப் பி்ன்னர்
மேலும் பல தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படவுள்ளதாகவும் ஐங்கரன் தெரிவித்துள்ளது.
விஸ்வரூபம் படம் இங்கிலாந்தில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக கூறியுள்ள ஐங்கரன் நிறுவனம்,
படத்திற்கு திரும்பத் திரும்ப ரசிகர்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மஞ்சள் நிற எழுத்துப் புலப்படவில்லை என்றால் mouse ஆல் highlight பண்ணிப்போட்டு வாசிக்கவும்.
ReplyDelete