செயற்கை ரத்தம்: சென்னை ஐ.ஐ.டி.-யில் செயற்கை ரத்தம் கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்து உள்ளனர். டாக்டர் சோமா குஹதா குர்தா தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் “ஸ்டெம்செல்”களில் இருந்து பல லட்சம் கோடி சிவப்பு ரத்த செல்களை சேகரித்தனர். இதில் இருந்து செயற்கை ரத்தம் தயாரித்தனர். இது ஆய்வகத்தில் 17 நாட்கள் வைத்து உருவாக்கப்பட்டது.
பின்னர், அதை விலங்குகள் உடலில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தனர். இன்னும் 3 ஆண்டுகளில் இது மனித உடலுக்குள் செலுத்தப்பட உள்ளது. தற்போது இது ஆக்சிஜனை எடுத்து செல்லும் திறன் கொண்டதாக உள்ளது. மனித உடலில் செலுத்தும்போது ரத்த சிவப்பணுக்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக அது இருக்கும். இந்த தகவலை செயற்கை ரத்தம் தயாரிக்கும் குழுவின் தலைவர் டாக்டர் சோமா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, ‘இந்த செயற்கை ரத்தம் முதலில் ரத்தசோகை நோய் பாதித்த எலிக்கு செலுத்தப்பட்டது. அதை அந்த எலியின் உடல் ஏற்றுக் கொண்டு உயிர் பிழைத்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட பரிசோதனைக்கு சென்றோம்.
உலகம் முழுவதும் செயற்கை ரத்தம் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். பிரான்சில் மனிதர்கள் உடலில் செலுத்தி பரிசோதிக்க தொடங்கி விட்டனர். இங்கிலாந்தில் இதை பயன்படுத்தி வருகின்றனர்’ என்றார்.
செயற்கை தசைகளை உருவாக்கி சாதனை: உயிரினங்களில் காணப்படும் இயற்கையான தசைகள் சேதமடையும் போது, அவற்றிற்கு பதிலாக செயற்கையான மாற்றீட்டு தசைகளை பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு வெற்றியளித்துள்ளது.
புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் David H. Koch Institute - இல் பணியாற்றும் MIT ஆய்வாளர்களே இந்த செயற்கை மாற்றீட்டு தசையினை உருவாக்கியுள்ளனர்.
இச்செயற்கைத் தசையானது இருவகையான பொலிமர் சேர்வைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது மீள்தன்மை உடை, கட்டமைப்பையும் வழங்குவதற்காக ஒருவகை பொலிமர் சேர்வையும், நீர் போன்ற ஈரலிப்பு தன்மையை உறுஞ்சும்பொருட்டு பிறிதொரு பொலிமர் சேர்வையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கீரையிலிருந்து மின்சாரம்: உணவாக மட்டும் கருதப்பட்ட கீரையிலிருந்து தற்போது உயிரியல் கலப்பு(Bio-Hybrid) சோலார் செல்கள் தயாரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள வென்டர்பில்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பசலைக் கீரையில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் புரதம் சூரிய ஒளியை மின் வேதியியல் ஆற்றலாக மாற்றும் தன்மை கொண்டது
எனவும், இதை சிலிகானுடன் சேர்த்து சோலார் செல்களை தயாரிக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
புவியில் ஒக்சிஜனுக்கு அடுத்து அதிகம் காணப்படும் தனிமங்களில் சிலிக்கானும் ஒன்று. இது ஒரு அலோகம். குறை மின்கடத்தி கருவிகளில் இது பயன்படுகிறது.
போட்டோ சிஸ்டம் 1 என்ற சிறப்பு புரதம் பசலைக் கீரையில் உள்ளது. இதனை சிலிக்கானுடன் சேர்த்து பயோஹைப்ரிட் என்ற சோலார் செல்லை தயாரித்தனர்.
இது மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதை விட குறைந்த செலவே ஆகும்.
மேலும் சில தாவரங்கள் கீரைக்கு ஒப்பான புரதங்களை பெற்றுள்ளதால், பயோஹைப்ரிட் சோலார் செல்கள் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களையும் எளிதில் பெறலாம்.
0 comments:
Post a Comment