விளையாட்டு


சக வீரரிடம் மோசமாக நடந்து கொண்ட பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு பிசிசிஐ தடை

பெங்களூர்: தொழில்நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது எதிரணி வீரரை கெட்ட வார்த்தையால் திட்டி மிகவும் மோசமாக நடந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஓ.என்.ஜி.சி. அணி சார்பில் ஆடிய பிரவீன் குமார், வருமான வரித்துறை அணியின் வீர் அஜீத் அர்கல் என்பவரை மிகக் கடுமையாகவும், கெட்ட வார்த்தையிலும் திட்டமி அவதூறாகவும், மோசமாகவும் நடந்து கொண்டார். இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு மனதளவில் பிரவீன் குமார் தகுதியுடன் இல்லை என்று நடுவர் தனஞ்செய் சிங் கிரிக்கெட் வாரியத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து விசாரணை நடத்திய கிரிக்கெட் வாரியம் தற்போது பிரவீன் குமாரை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரவீன் குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனது நடத்தை தொடர்பாகஅவர் விளக்கம் தர வேண்டும். அதுவரை அவர் எந்தவிதமான போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்று தெரிவித்தார்.

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்- இந்திய அணி அறிவிப்பு! காம்பீர் நீக்கம்! ஹர்பஜன்சிங்குக்கு இடம்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. காம்பீர் நீக்கப்பட்டு ஹர்ஜபன்சிங், முரளிவிஜய், ஷிகர் தவாண் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா வருகை தரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் 22-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. மும்பையில் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு கூடி இந்திய அணியை தேர்வு செய்தது.
கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகார் தவாண் சேர்க்கப்பட்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹர்பஜன்சிங்கும் அணியில் இடம்பிடித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52 கோடி அபராதம்
 போட்டிகள் தொடர்பான சந்தை வர்த்தக ஒழுங்குப்படுத்தும் கமிஷன், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52.24 கோடியை அபராதமாக விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘‘ஐ.பி.எல். உள்ளிட்ட லீக் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. போட்டிக்கான அணிகளின் உரிமையாளர் உரிமம், டி.வி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பானர்ஷிப் ஒப்பந்தம் ஆகியவற்றை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. பொருளாதாரத்தில் அசுர பலத்துடன் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, வேறு எந்த தகுதியான போட்டியாளர்களும் இந்த போட்டிகள் மற்றும் அதன் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை’’ என்று சுரிந்தர் சிங் பார்மி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராதத்தை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது.

0 comments:

Post a Comment