ஒளிர்வு-(21)ஆவணி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,/ /கனடாவிலிருந்து.....ஒரு கடிதம்  // பாடுபட்டுத் தேடிப் பணத்தை… //ஆராய்ச்சியாளரின்செய்திகள் // பணம் வந்தால்.. // ஆன்மீகம் // சங்க கால மக்களின் மறுபக்கம்! // தொழில்நுட்பம் // கனடாவில்....,//உணவின்புதினம் ,//கணிணிஒளி //பாருக்குள் ஒரு நாடு.ஒரு பார்வை // உங்களுக்குதெரியுமா?// அறிவியல்//சிரிக்க..!, //சினிமா//பண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்-video.  
 தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
* உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால்
இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்!
* அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும்!
ஆனால் முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்!
* காதலுக்குரிய கண்ணினை யொத்த
மாதருக் குரிமை மறுப்பவர் மடையர்!
*பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால்
உன் சிறப்புக்களை ஊர் புகழும்!
*உண்மையைச் சொல்லுங்கள்!
உண்மையாய்ச் சொல்லுங்கள்!ஆன்மீகம்-இல்லை/இருக்கிறது


ஆண்டவன் பிரச்சனை
இருக்கிறது என்பதுவும் பிரச்சனையில்லை
இல்லையென்பதுவும் பிரச்சனையில்லை
இருக்கிறது என்ச் சொல்லிப் பிழைப்பதுவும்
இல்லையெனச் சொல்லிப் பிழைப்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

நம்புவதும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்பாததும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

கோவில் சன்னதி பக்தி முதலான
நம்பிக்கைகள் கூட பிரச்சனையில்லை
நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்கவேண்டியவனே
சன்னதிக்குள் லீலைபுரிவதே பிரச்சனை

பகுத்தறிவு மூட நம்பிக்கை ஒழிப்பு முதலான
பிரச்சாரங்கள் கூட பிரச்சனையில்லை
பிரச்சாரம் செய்பவனே தன் வீட்டிற்கு அது
பொருந்தாது என்பதுதான் பிரச்சனை

போற்றிப் புகழ்ந்தால் அள்ளி வழங்கவோ
தூற்றித் திரிந்தால் தீமை புரியவோ
ஆண்டவன் மனிதன் இல்லை
அவன் கதிரவனைப் போல் பொதுவானவன்

நோயுள்ளவனை நடுங்கச் செய்தும்
பலசாலியை மகிழச் செய்தும்  போகும்
தென்றல் இரண்டாக இல்லை
அதுவும்  நிலவைப் போல் பொதுவானதே

மொத்தத்தில்
பிரச்சனைகள் எதுவும்
ஆண்டவனால் சிறிதும் இல்லை
சித்தத்தில்
இதனைக் கொண்டால் இங்கே
இத்தனை பிரச்சனை இல்லை
---------- Ramani

ஆராய்ச்சியாளரின் செய்திகள்


முதுகுவலியை ஒழிக்கும் புதிய கண்டுபிடிப்பு
முதுகுத் தண்டின் நெகிழ்ச்சித் தன்மையை அப்படியே சுருதி பிசகாமல் பிரதிபலிக்கும் ஒரு சிறு செயற்கை வட்டை (Disc) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது முதுகுவலிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வளிக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்காவின் பிரிகாம் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழுவினர் உருவாக்கிய இந்த "ரோலர்" என்ற வட்டு முத்குத் தண்டில் பழுதடைந்த டிஸ்க்குகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தண்டுவடத்தில் இயற்கையாக உள்ள டிஸ்க் எப்படி வேலை செய்கிறதோ, அப்படியே சுருதி பிசகாமல் இந்த செயற்கை வட்டும் வேலை செய்யும்.

இந்த புதிய செயற்கை வட்டு ரோலிங் செயல்பாட்டுடன் தண்டுவடம் பல திசைகளில் இயங்க வழிவகை செய்கிறது.

தண்டுவட டிஸ்க்குகளில் ஒரு ஜெல் போன்ற ஒரு திரவம் உள்ளது உடல் அசையும் போது இது தண்டுவடத்திற்கு இயக்கத்தை குஷன் போன்று பராமரிக்கிறது. இயக்கத்திற்கு இந்த டிஸ்குகள் பெரிதும் பயன்படுகிறது என்றாலும் இவை பழுதடையும்போது முதுகு வலி தோன்றுகிறது. உடனே வலிநிவாரணி மாத்திரைகள், பிசியோதெரபி, முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

இதில் மிகவும் பிரபலமான மருத்துவம் "ஃபியூஷன்" என்று அழைக்கப்படுகிறது. பழுதடைந்த டிஸ்கின் இருபுறத்திலிருக்கும் தண்டெலும்புகள் ஒன்று சேர்க்கப்பட்டு வலி குறைக்கப்படுகிறது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்தால் இயக்கம் மட்டுப்படுத்தப்படும். இந்த அறுவை சிகிச்சையினால் தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மை பாதிக்கப்படும்.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவே இப்போது "ரோலர்" என்ற செயற்கை டிஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்னும் பின்னும், பக்கவாட்டுகளிலும் இயங்கக்கூடியதாகும். தண்டெலும்பு மற்றும் டிஸ்கிற்கு இடையே இந்த செயற்கை சிறிய டிஸ்க் பொருத்தப்படும். இதன் மூலம் முதுகுவலிக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக இந்த விஞ்ஞானிகள் கோருகின்றனர்.

இப்போது பெஇர்ய அளவில் கிளினிக்கல் டிரையல்களில் இதனை பரிசோதித்து வருகின்றனர். வெற்றி அடைந்துவிட்டால் அடுத்த 3 ஆண்டுகளி இது பொதுமக்கள் பயனுக்கு வந்தூ விடும்.
உணவு நேரத்துடன் பசியை தொடர்புபடுத்தும் மரபணு
ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் வயிறு தானாகவே பசிக்கிறது. இதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் மரபணுவை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் வயிறு சுருங்கும். கடமுடா என்று சத்தமிடும். கண்கள் கிறுகிறுக்கும். சோர்வாக இருக்கும். இதையடுத்து எதையேனும் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம். இத்தகைய உணர்வுகளுக்கு காரணமான மரபணுவை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்குபெர்-2′ என்று பெயரிட்டுள்ளனர். மூளை மற்றும் உடலின் இதரபகுதிகளில் செயல்படும் இந்த மரபணுவை ஆய்வு செய்தால் கொழுப்புச்சத்து நோய்க்கும், தூக்கமின்மை, மதுவுக்கு அடிமையாதல் ஆகியவற்றுக்கு சிகிச்சை முறைகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
புற்றுநோயை தடுக்க உதவும் திராட்சை
திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்
தண்ணீர் குடிப்பது நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஒருவர் தினமும் 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு.
ஆனால் தண்ணீர் நல்லது என்று கருதி அளவு கடந்து இஷ்டத்துக்கு குடித்தால் அதுவும் விஷம் போலத் தான்.
நிறைய தண்ணீர் குடிக்கிற போது, உடலில் சுரக்கிற திரவங்கள் நீர்த்துப் போகின்றனவாம். இதனால் உடலில் சோடியத்தின் அளவு குறைந்து போய் சமயங்களில் உயிராபத்தையும் ஏற்படுத்தி விடுமாம்.
தண்ணீரை தாகத்துக்கு குடியுங்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.
100 கிலோ எடை உடைய ஒருவர் அதிகபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாமாம். அதாவது ஒரு கிலோ எடைக்கு 3 மில்லி தண்ணீர் என்ற விகிதாச்சாரத்தில் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.

பணம் வந்தால்…………..


          துன்பமும் சேர்ந்து வருமா?
பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது முட்டாள்தனமும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த நிலையில் துன்பமும் சேர்ந்து வரலாம். அதற்காக பணம் வந்துவிட்டாலே துன்பமும் வந்தாக வேண்டும் என்று கிடையாது. பணம் உங்களுக்கு நிச்சயமாக வசதிகளைக் கொண்டு வருகிறது.

ஆனால் வசதிகள் ஏன் துன்பமாக மாற வேண்டும்? நாம்தானே வசதியை தேடினோம்? அப்படியிருக்க, நாம் விரும்பியதே நமது துன்பத்திற்கு ஏன் காரணமாக வேண்டும்? ஏதோ ஒன்று நமது கையில் இருக்கும்போது, அதனுடன் சேர்ந்த மற்றொன்றை முழுவதுமாக மறந்து விடுகிறோம். மனிதர்களின் பெரிய பிரச்சனை இது. காலையில் சாப்பிட உட்கார்கிறீர்கள். ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கிறது. இப்போது மற்றவற்றை மறந்து விடுகிறீர்கள். ஊறுகாய், ஊறுகாய், ஊறுகாய் மட்டுமே வயிறு நிரம்ப சாப்பிடுகிறீர்கள். மாலையே பிரச்சனை ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை வரை கூட அது காத்திருக்காது.

அதே போலத்தான் செல்வமும் செழுமையும். அவை உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வரும்போது மிகவும் அழகாக இருக்கும். உங்களிடம் போதுமான பணம் இருந்தால் அடுத்த நாள் வேலை செய்வதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால் கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் உட்கார்ந்து விடலாம். இன்று சம்பாதித்தால்தான் நாளை உணவு என்ற நிலையிலிருப்பவர், விரும்பினாலும் அப்படி தியானத்தில் உட்கார முடியாது. எனவே பணம் உங்களுக்கு துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்கு துன்பத்தை வரவழைக்கிறது.

"கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. என் சிறு வயதில் இது என்னை மிகவும் குழப்பியிருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது, இல்லையா?"
ஏராளமானோர் தினமும் கோவில், மசூதி, மாதா கோவிலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து திரும்பிவரும்போது அவர்கள் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் முகம் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறதா? நான் 11 வயதாக இருக்கும்போது இது என்னை மிகவும் குழப்பியிருக்கிறது. அந்த வயதில் நான் ஒரு பெரிய கோவில் வாசலில் நிறைய நேரம் உட்கார்ந்து கொண்டு கோவிலிலிருந்து திரும்பி வருபவர்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். கடவுளைப் பார்த்து வந்த பின் அவர்கள் முகம் பிரகாசமாக மாறியிருக்கிறதா என்று கவனிப்பேன். கோவிலிலிருந்து திரும்பிவரும் போது ஒருவருக்கொருவர் 'கிசுகிசு'வோடு திரும்பி வருவதைத்தான் அதிகம் கவனித்திருக்கிறேன். கடவுளைப் பற்றி பேசுவதை விட கோவிலில் பார்த்த மற்ற மனிதர்களைப் பற்றிக் கிசுகிசுவோடு வெளிவருவதைத்தான் கவனித்தேன். அல்லது அவர்கள் விட்டுச் சென்ற செருப்பு வேறு யாரோடாவது நடந்து போய் விடடால் இந்த உலகத்தையே, ஏன் கடவுளைக் கூட சபிக்க ஆரம்பித்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்.

கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. அதிக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வெளிவருகிறார்கள். இது மிகவும் வெட்கக் கேடானது, இல்லையா? தெய்வீகத்தை விட தோசை அவர்களுக்கு அதிக திருப்தியைத் தந்திருக்கிறது. எனவே தெய்வீகமா, செழுமையா, தோசையா என்பதல்ல கேள்வி. மனிதர்கள் விஷயங்களை மோசமாகக் கையாண்டால் எப்படியும் துன்பம் வருகிறது என்பதைப் பாருங்கள்.

துன்பம் பணத்தால் வரவில்லை. பணம் உங்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக உங்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம் வருகிறது. அதை சட்டைப் பைக்குள் மட்டும் வைத்துச் கொண்டால் அது மிகவும் அற்புதம். பணம் இருக்க வேண்டிய இடம் அதுதான், உங்கள் தலை இல்லை. பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இவ்வுலகில் அற்புதமான பணிகள் பலவற்றை செய்யமுடியும்.

பணம் உங்களுக்கு துன்பத்தை கொண்டு வருகிறது என்றால் அதை என்னிடம் கொடுத்து விடுங்கள். அதை வைத்து இந்த உலகில் நான் பல விஷயங்கள் செய்ய முடியும்(சிரிக்கிறார்). அது என்னை துன்பத்தில் ஆழ்த்தாது. ஏனெனில் பணம் என் தலைக்குள் இறங்குவதில்லை. நீங்கள் வசதியாக இருப்பதற்கும், மற்றவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கும் பணம் பயனுள்ளதாக இருக்கிறது.

உலகில் மனிதர்களுக்கிடையே இதுதான் ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. உலகின் மேற்கு பகுதியில் உள்ளவர்கள் உள்நிலையை சரியாகக் கையாள்வதில்லை. அமெரிக்க நாட்டில் 40 சதவீத மக்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறையாவது மன அழுத்தத்திற்கான மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் வெளியில்தான் அனைத்தும் இருக்கிறது என நினைத்து உள்சூழ்நிலையைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வாழ்க்கை ஒரு குழப்பமாகி விடுகிறது.

இங்கு, இந்தியாவில் வேறு விதமான தவறு நடக்கிறது. சொர்க்கம்தான் எல்லாமே என்று நினைத்து தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள். இங்கு பெரிய கோவிலைக் கட்டுவார்கள், ஆனால் சரியான கழிவறை இருக்காது. இது இந்தியர்களின் பிரச்சனை. எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது என்று நினைத்து தற்போது தாங்கள் வாழும் உலகை மறந்து விடுகிறார்கள், எனவே அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். எனவே எப்போதும் இந்த இரண்டிற்கும் இடையிலான ஒரு சமநிலையைக் கொண்டு வர வேண்டும்.
- ----------சத்குரு