சினிமாஆடி மாதத்தில் வந்த திரைப்படங்கள்
2012-08-06   மிரட்டல்
நடிகர்கள்:-வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன்.
கதை: - கொஞ்சம் வட்டாரம்,பெருமளவு சின்னத்தம்பியைக் கலக்கி தெலுங்கில் தீ (Dhee) என்ற பெயரில் வந்த படத்தை மறுபடியும் தமிழில்மிரட்டல்என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ்.
கருத்து: -. நகைச்சுவைக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்
புள்ளிகள்:-45
2012-08-02   மாலை பொழுதின் மயக்கத்திலே
நடிகர்கள்: -. ஆரி, சுபா, பஞ்சு சுப்பு, பாலாஜி,தேஜஸ்வினி, ஹரி,சேகர்,
கதை: - மழை பெய்யுற ஒரு மாலை நேரத்தில் ஒரு காபி ஷாப்ல ஒரு காபியை வாங்கி வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் உட்கார்ந்தா என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்கள்
கருத்து: -. இயல்பான உணர்வுகளுக்காகவே ரசிக்கலாம்.
புள்ளிகள்:-35
திரைஒளியின் பின்னால்..

நடிக்கத் தெரியாமல் வந்த என்னையும் நடிகனாக்கியவர் பாலச்சந்தர்: கமல்

நடிப்பு பற்றி எதுவுமே தெரியாமல் வந்த என்னையும் ஒரு நடிகனாக்கியவர் இயக்குனர் கே. பாலச்சந்தர் என்று கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் சந்தோஷம் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல் ஹாசன் தனது குருவுக்கு அந்த விருதை வழங்கினார்.
அதன் பிறகு அவர் பேசியாதவது,
நடிப்பு பற்றி எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே திரையுலகிற்கு வந்தேன். எங்களுக்குள் இருந்த திறமையைப் பார்த்து அவர் எங்களை ஊக்குவித்தார் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் நாங்கள் திரையுலகிற்கு வந்தபோது நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. பாலச்சந்தர் தான் எங்களை எல்லாம் நடிகராக்கினார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என்பது திரை உலகிற்கே விருது வழங்குவது போன்றாகும் என்றார்.
......................................................................................................................................................

3டி படத்தில் நயன்தாரா…!

அடுத்தடுத்த காதல் கலாட்டாக்களால், திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நயன்தாரா, தன் அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக துவக்கியுள்ளார். தற்போது, அஜீத்துடன் ஒரு படத்திலும், தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குனர் அமல் நீராட் இயக்கும், “அரிவாள் சுட்டிகா நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம், “3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். “மம்மூட்டி, பிருத்விராஜ், நயன்தாராவா… காம்பினேஷன் கலக்கலா இருக்கே! என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர், மலையாள ரசிகர்கள்.
...................................................................................................................................................

‘சிவாஜியின் பேரன்’ சிவாஜி தேவ் – மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்!

காதலை பல கோணங்களில் கோடம்பாக்கத்துக்காரர்கள் சொல்லிவிட்டார்கள். இன்றைய கால கட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும்…என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம்தான் நந்தனம்.
இன்றைய பெண்களும் சரி பசங்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற மையக்கருவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் என்சி ஷியாமளன். ஏ வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர்.
சிங்கக்குட்டி படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட சிவாஜி தேவ்தான் படத்தின் நாயகன். செவாலியே சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் புதல்வர். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டுள்ளார்.
சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவர், இப்போது அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். நந்தனம் தன்னையும் கோடம்பாக்கத்தில் ஒரு நல்ல இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்கிறார் நம்பிக்கையுடன்.
காவலன் நாயகி மித்ரா குரியன் ‘காவலனு’க்குப் பிறகு நடிக்கும் படம் இது.
படத்தின் முக்கிய வேடத்தில் சன் டிவியில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி நடத்தும் ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க, ஈசனுக்குப் பிறகு ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏ. எல் அழகப்பன்.
முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச் சி எல் போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில் அனுமதி பெற்று நடைபெற்றது. அன்வர் படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். எல். மோகன் ஒளிப்பதிவு செய்ய, வி. டி. விஜயன் எடிட்டிங் செய்ய சங்கர்தாசின் தயாரிப்பு மேற்பார்வையில் நந்தனம் வேகமாக வளர்ந்து வருகிறது.
..........................................................................................................................

"ரீமிக்ஸ் பண்ணுவது கற்பழிப்பதற்கு சமம்" எம்.எஸ்.விஸ்வநாதன் காட்டம்

சென்னை, ஆக.11 (டிஎன்எஸ்)700க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 6000க்கும் மேலான பாடல்கள் என்று 60 வருடகங்களாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என்று அனைத்து மொழிகளிலும் இசையமைத்திருக்கும் இந்த மெல்லிசை மன்னருடன் ஜெயா டிவி இணைந்து 'நினைத்தாலே இனிக்கும்' என்ற தலைப்பில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் உருவான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை முழுக்க முழுக்க லைவ் ஆர்க்கெஸ்ட்ரா மூலம் பிரபல பின்னணி பாடகர்கள் எம்.எஸ்.வி யுடன் இணைந்து பாடப்போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா நேற்று (ஆகஸ்ட் 10) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இப்போது உங்கள் பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறார்கள் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்று கேட்டதற்கு, "ரீ மிக்ஸ் என்பது தப்பான காரியம் தான் அதை செய்ய தைரியம் வேணும். தைரியம்
இருப்பவர்கள் அதை செய்கிறார்கள். அதைப் பற்றி பேச வேண்டாம்." என்றவரிடம், ஒரு நிருபர், "ரீமிக்ஸ் செய்வது நல்லதா? என்று கேட்டதற்கு, "ரீ மிக்ஸ் செய்வது கற்பழிப்பதற்கு சமமானது. அப்படி இருக்க அதை செய்யலமா? அவர் அவருக்கு என்ன தெரியுமோ அதைதான் செய்ய வேண்டும். புதுசாக எதையாவது செய்யுங்கள் அதை விட்டுவிட்டு மற்றவர்களின் பாடல்களை ரீ மிக்ஸ் செய்வது தவறானதாகும்." என்று எம்.எஸ்.விஸ்வநாதன் காட்டமாக பதிலளித்தார்.
.........................................................................................................................................................
ஹீரோவாகிறார் வடிவேல் மகன் 

நடிகர் வடிவேலுவுவின் மூத்த மகன் சுப்பிரமணிக்கு 23 வயது ஆகிறது.   பிளஸ்-2' படித்து முடித்த இவர், இப்போது `கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன்' கற்று வருகிறார். 

இவரை நடிக்க வைப்பதற்கு பல டைரக்டர்கள் முயற்சி செய்தார்கள். அதற்கு வடிவேல் முதலில் சம்மதிக்கவில்லை. ``நேரம் வரட்டும்...அப்புறம் பார்க்கலாம்'' என்று வடிவேல் கூறிவந்தார்.
இப்போது அதற்கான நேரம் வந்திருப்பதாக கருதி, வடிவேல் தன் மகன் சுப்பிரமணியை கதாநாயகனாக அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்.
மகனுக்காக, வடிவேல் பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். நல்ல கதை அமைந்ததும், மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர்,  ‘என் மகன் சுப்பிரமணிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அவனுக்கு பொருந்துகிற மாதிரி ஒரு கதையை தேடி வருகிறேன். இதுவரை மூன்று டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறேன். அதில், ஒரு டைரக்டர் சொன்ன கதை சுப்பிரமணிக்கு பொருந்துகிற மாதிரி இருக்கிறது.
என்னைப்போல் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆவான்.
அவனை, தமிழக மக்களிடம் நான் ஒப்படைக்கிறேன். என் பிள்ளையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் இப்போது, `பிஸி'யாக முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். அவன் என் பின்னால் ஓடி வந்து, என்னை துரத்தி பிடிக்கட்டும்.
என் `மார்க்கெட்' நன்றாக இருக்கும்போதே சுப்பிரமணியை தமிழக மக்கள் வசம் ஒப்படைப்பதில், பெருமைப்படுகிறேன்’’என்று கூறியுள்ளார்.
......................................................................................................................

0 comments:

Post a Comment