ஒளிர்வு-(25) கார்த்திகைத்திங்கள்-2012


தளத்தில்:,சிந்தனைஒளி,,பறுவதம்பாட்டி,எல்லாரும் எல்லாமும் ?ஒரு அண்ணனின் ஏக்கம் !ஓயாத அலைகள் ?ஆன்மீகம் , ஆராய்ச்சியாளரின்
செய்திகள்,தொழில்நுட்பம் ,உணவின்புதினம் ,அறிவியல், நாயைப் பற்றி….....கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை ,உங்களுக்குதெரியுமா? ,சிரிக்க... !,சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com

சிந்தனைஒளி
மனிதனிடம் காணப்படும் அரக்க குணங்கள் அழிந்து அனைவரும் இவ்வுலகில் நற் குடிமக்களாக வாழ வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் தீபம் மகிழ்ச்சி கொள்கிறது.
* துன்பத்தைஅனுபவித்தகாலத்தைமறந்துவிடு!
ஆனால், அதுகற்பித்தபாடத்தைமறந்துவிடாதே!
* வாழ்க்கைக்குப்பொருள்வேண்டும்!
வாழ்விலும்பொருள்வேண்டும்!
* ஒவ்வொருசிறந்தநண்பனும்
ஒருநேரம்அந்நியனாகஇருந்தவன்தான்!
* வாழ்வதற்காகவேலைசெய்யுங்கள்!
வேலைசெய்வதற்காகவாழாதீர்கள்!
* மற்றவர்களைமரியாதையாகநடத்தியதால்
நஸ்டமடைந்தவர்கள்எவருமில்லை!

பறுவதம்பாட்டி


(இதுஒருநடப்புநிகழ்வுகளின்அலசல்)
அன்றுபாடசாலையின்விடுமுறை என்பதால் விடிந்து நெடுநேரமாகியும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் தொலைபேசி அழைப்பாகஇருக்கவேண்டும்.பாட்டிஅவசரமாக போனை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிப்பக்கமாக வந்ததிலிருந்து எனக்கு அது புரிந்தது. பாட்டி போனை ஸ்பீக்கரில்விட்டு பேசிக்கொண்டிருந்தது என் அறை ஜன்னலுடாக தெளிவாகக்கேட்டது.
அண்ணாமலைத்தாத்தாதான்பேசிக்கொண்டிருந்தார்.
"என் இவையள் இப்படி?" என்று தாத்தா ஆரம்பித்துக்கொண்டார்.
"ஆரை சொல்லுறியள்".
"எங்கட தமிழ் ஆட்கள் தான்"
"எதை வச்சுக்கொண்டு அப்பிடிக் கதைக்கிறியள்?"
"ஒண்டா இரண்டா.இவன் மேன் வீடு வாங்கினதிலிருந்து எத்தினை தமிழாட்களை  வீட்டில கூரை,சுவர்,நிலம்,ஜன்னல்,washroom வேலைகள் என்று பலமுறையும் தமிழாட்களை ௬ப்பிட்டு ஒவ்வொருவரும் ஏமாற்றி தானே போகினம்.அவனும் தமிழாட்கள் என்று நம்பித்தானே ௬ப்பிட்டவன்.அவையும் தமிழாட்கள் தானே என்டுவிட்டுத் தமிழாட்களிலை  தானே வேலை பழக வாறது.ஆனால் கதைக்க விட்டுப் பார்க்கவேணும்.தங்களை விட்டால் கனடாவிலை திறமா வேலை செய்ய ஆர் இருக்கினம் எண்டு விலாசம் பேசுவினம்.வீட்டு ரிநோவேசன் வேலையில தமக்கு தெரியாதவை எதுவுமில்லை தம்பட்டம் அடிப்பினம். ஆனா எதுவும் தெரியாது.கழிவிடங்களில சும்மா பொறுக்கின பழைய ஆயுதங்களோட விலாசமாய் வந்து இறங்குவினம்.செய்வதெல்லாம் குப்பை வேலைகள்.
பாட்டியும்  தொடர்ந்தாள்.
"ஏன்,இங்கை மேள் நெடுகச் சொல்லுவாள்.கார் ஒண்டை திருத்துவதற்காக கொம்பனிக்கு கொண்டுபோனா அதை உயர்த்தி கணணி இயந்திரங்கள் மூலம் CHECKபண்ணி 2,3 மணித்தியாலங்களில் தான் என்ன பிழை எண்டு சொல்லுவாங்கள்.ஆனால் தமிழாட்கள் சரியான கெட்டிக்காரர்கள்..தாங்களே ஒருமுறை குனிஞ்சு பார்த்துவிட்டு படக்கெண்டு என்ன பிழை எண்டு  சொல்லி PARTS எங்கள் காசில வேண்டிப் போட்டு அது எப்பிடி எண்டு பழகிக் கொள்வார்கள்.ஆனால் பிழைகள் தொடரும்.தெரியாத விசயங்களுக்கெல்லாம் ஏன் தலையிட்டு பேரினைக் கெடுத்துக் கொள்கிறார்களோ தெரியாது".
"ஒரு வளர்ந்துவிட்ட நாட்டில வாழ்ந்துகொண்டு இன்னும் நாம் திருந்தவில்லை.ஒருவனை ஏமாற்றினால் அவன் தன்னோட பழகிற உறவுகள்,நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லாமல் விடமாட்டான்.இவர்கள் எத்தினை பத்திரிகைகள்,வானொலிகளுக்கு விளம்பரம் கொடுக்கட்டும்.ஆனால்  அவை எல்லாவற்றிலும் வலிமையானது வாடிக்கையாளரின் பிரச்சாரம் என்பது எங்கட ஆட்களுக்கு  இன்னும் புரியாதது ஏன் என்று  விளங்கவில்லைஎன்றார் அண்ணாமலைத்தாத்தா.
முடிவாகப் பாட்டியும், தமிழரிட்டை போகக் கூடாது என்பது பிள்ளையளின்ட நோக்கமில்லை.அவர்கள் தான் தமிழரை ஏமாத்தக் கூடாது என்று முடிவேடுக்கவேணும். அந்த எண்ணம் எங்கடயளிண்ட நெஞ்சில எப்ப முடிவாகுதோ அப்பத்தான் எங்கடயலும் இந்த நாட்டில வளர்ந்துவிட்ட இனங்களுக்கு சமமாக வளர்ந்துவிட முடியும்.
பாட்டியின் இவ் முடிவுரையினை நான் நற்சிந்தனையாக  உள்வாங்கிக்கொண்டேன்.
ஆக்கம்: பேரன் செ.மனுவேந்தன்

ஒரு அண்ணனின் ஏக்கம்!!


ஒன்றும் புரியவில்லைத் தம்பீ!
எந்தவொரு மனிதனும் வசதியான வாழ்வுக்காக சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய உபாயங்கள் எங்காவது கிடைக்குமா என்று அலைந்து திரிந்து தேடிக்கொண்டு இருக்கிறான். இந்தத் தேடலின்போது தனக்கு எதிரே எவராவது வந்து இவற்றை அடைவதற்கு இலகுவான குறுக்கு வழி இருக்கின்றது என்று கூறினால், உடனே அவரின் வாக்கை நம்பி அவரின் பின்னால் சென்று செல்வம் வேண்டிப் பணம் செலவு செய்யத் தயங்கமாட்டான். இக்குறுக்குவழிக் கிரிகைகளை அவர்கள் தங்களுக்கே செய்து, தாமே செல்வம் சேர்க்க முடியாமையினால்தானே  மற்றையோரின் செல்வத்தைக் குறிபார்த்துக் கண் வைக்கிறார்கள் என்ற ஒரு பெரிய உண்மையை ஏன்தான் மனிதன் உணர மறுக்கிறான் என்று புரியத்தான் மாட்டேன் என்கிறது!
இப்படி ஐஸ்வரியம் தரும் என்று நம்பச் செய்யும் புரியாத சம்பவங்கள் அன்றாட வாழ்வில் நிறையவே உள்ளன!
* கிழிந்த, அழுக்குத் துணியுடன் வீதியில் இருந்து அதிஷ்ட மந்திரத் தகடும், நூலும் வழங்கும் சாத்திரம் கூறும் பெண்கள்.
* பணம் தேடி ஊரூராய் அலைந்து திரிந்து, உயர்வதற்கு வழிமுறை கூறி, தோஷ பரிகாரம் செய்து, அதிர்ஷ்டக் கற்கள் விற்கும் சோதிட பண்டிதர்கள்.
* பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டுக் கஷ்டத்தில் வாழும்தன்சாத்திரமும், தன பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சாத்திரமும் பார்க்க மறந்த பிரபல ஜோதிட நிபுணர்கள்.
* வீடின்றி வீதியில் வதியும், மற்றயோருக்குக் குறி சொல்லும் கிளி ஜோசியர்.
* தன் நலம் இன்றி பிறர்பால் அன்புகொண்டு அவர்கள் புகழேணி ஏறப்  பெயர்களை மாற்றச் செய்யும் எண்கணித சாத்திரிகள்.
* பெரும் புதையல் பிறருக்குத் தேடித்தரச் சிறு தொகை கூலியுடன் பெரும் பூசை செய்யும் மாந்திரீகர்கள்.
* சூனியம் செய்து எதிரியை ஒழிக்கும் பகைவர்கள் பலர் கொண்ட சூனியக்காரர்.
* நோய்வாய்ப்  பட்டும், ஈனச்செயல்கள், குற்றச் செயல்களில்  அகப்பட்டு மீளமுடியாமல் அல்லல்பட்டுக்கொண்டும் இருக்கும், நோய் தீர, நல்வாழ்வு மலர  அறிவுரை பகரும் சுவாமிமார்கள், அவதாரங்கள், மத குருமார்கள் மற்றும் புத்திஜீவிகள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப் படுத்தியவர்கள்.
* வீதியில் வெட்டியாய் உட்கார்ந்து கொண்டிருந்து, பலவித விலைகளில் பூசைகள் செய்தால் உயர்ச்சி அடையலாம் என்று ஆட்களை மூளைச் செலவு செய்யும் அர்ச்சகர்கள்.
* பிள்ளை வரம் பிறருக்குக் கிடைக்க  யாகம் செய்யும் வாரிசே இல்லாத புரோகிதர்கள்.
* ஐஸ்வரியம் தரும் யானை வால் முடியைக் களவாய்ப் பிறருக்கு விற்கும் ஏழை யானைப் பாகன்.
* கோடிக்கணக்கான மக்கள் தினசரி குளிக்க, குடிக்க, சமைக்க, துவைக்க, கழுவக் கங்கை நீரைப் பாவித்தும் இன்னும் அங்கு அவர்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்க, அங்கிருந்து சௌபாக்கியம் தரும் என்று கொண்டு வரப்படும் ஒரு சொட்டுக் கங்கை நீர்.
* மதுரா என்று ஒரூருக்குப் பெயர் வைத்துவிட்டு, அங்கு தொன் கண்ணக்கில் மண்ணைச் சொந்தமாகக் கொண்டு, அந்த மண்ணில் ஒலைக்குடில்களில் இருந்து கஷ்டப்படும் மக்கள் வாழும் அந்த இடம்தான்  (பல யுகங்களின் முன்) பல பெண்களின் காதல் மன்னன் கிருஷ்ணன் பிறந்த ஊர் என்று சொல்லி, சுகவாழ்வு அமையும் என்று நம்பிக் கொண்டுவரப்படும் ஒரு பிடி மதுரா மண்.
*அயோத்தி என்ற பெயருள்ள சிறு ஊர், மகா கஷ்டங்களோடு தன் பெரும்பகுதிக் காலங்களை வீணாக்கிய ராமன் பிறந்த  ஊரின் பெயராய் இருப்பதால், பெருவாழ்வு வரச் செய்யும் என்று எண்ணிக் கொண்டு வரப்படும் அயோத்தியா மண்.
* இறந்தோர், இருப்போர் எல்லாம் (காணாத) சொர்க்கம் செல்வதற்காக, கடவுளுக்கே ஐஸ் வைத்து, லஞ்சம் வழங்கிக் கடவுளின் முடிவையே மாற்றவல்ல  பூசைகள் பிரார்த்தனைகள் செய்யும் பூசகர்கள், பக்தர்கள்.
* செய்யும் பாவங்கள் எல்லாம் கடவுள் முன் மன்னிக்கப்படலாம் என்று கூறிமேலும் பாவங்களைச் செய்யத்தூண்டும் ஆள் சேர்க்கும் சமய குருமார்கள்.
* அவதார கடவுள்மார், அநாதியான கடவுள்மார்களின் பஞ்சப்பட்ட ஊர்களில்  இருந்து கொண்டுவரப்படும்  ஐஸ்வரியம் தரும் என்று நம்பப்படும் பிரசாதங்கள், அணிகலன்கள்.
இப்படியாக ஏன்தான் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்? இப்படியெல்லாம் செய்வதால் என்னிலும் பார்க்க அவனுக்குக் நிறையவே கிடைக்கும் என்று நினைக்கிறானோ?
ஒன்றும் புரியவில்லைத் தம்பீ!
ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன்