ஒளிர்வு-(25) கார்த்திகைத்திங்கள்-2012


தளத்தில்:,சிந்தனைஒளி,,பறுவதம்பாட்டி,எல்லாரும் எல்லாமும் ?ஒரு அண்ணனின் ஏக்கம் !ஓயாத அலைகள் ?ஆன்மீகம் , ஆராய்ச்சியாளரின்
செய்திகள்,தொழில்நுட்பம் ,உணவின்புதினம் ,அறிவியல், நாயைப் பற்றி….....கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை ,உங்களுக்குதெரியுமா? ,சிரிக்க... !,சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com

சிந்தனைஒளி
மனிதனிடம் காணப்படும் அரக்க குணங்கள் அழிந்து அனைவரும் இவ்வுலகில் நற் குடிமக்களாக வாழ வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் தீபம் மகிழ்ச்சி கொள்கிறது.
* துன்பத்தைஅனுபவித்தகாலத்தைமறந்துவிடு!
ஆனால், அதுகற்பித்தபாடத்தைமறந்துவிடாதே!
* வாழ்க்கைக்குப்பொருள்வேண்டும்!
வாழ்விலும்பொருள்வேண்டும்!
* ஒவ்வொருசிறந்தநண்பனும்
ஒருநேரம்அந்நியனாகஇருந்தவன்தான்!
* வாழ்வதற்காகவேலைசெய்யுங்கள்!
வேலைசெய்வதற்காகவாழாதீர்கள்!
* மற்றவர்களைமரியாதையாகநடத்தியதால்
நஸ்டமடைந்தவர்கள்எவருமில்லை!

2 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, November 17, 2012

  பெஞ்சமின் பிராங்கிளின் உதிர்த்த மற்றும் மூன்று பொன்மொழிகள்:

  "இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்"

  "தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை"

  "பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது"
  ......................................

  "வாழ்க்கைக்கு இன்றைய காலகட்டத்தில் செல்வம்[பொருள்] கட்டாயம் வேண்டும். அதே சமயம், அந்த வாழ்க்கையில் ஓர் அர்த்தமும்[பொருள்] இருக்க வேண்டும்."- மிக அழகான துளிகள்.
  ......................................

  அஸ்தினாபுரத்தில் துரோணர் குரு இளவரசர்களின் திறன்களை காண்பிக்கும் ஒரு போட்டியை நடத்தினார். இந்த போட்டியில் குறிப்பாக "வில்லாளி" என்ற பரிசை அர்ஜூனன் வென்றார். கர்ணன் அந்தப் போட்டிக்கு வந்து, போட்டிக்காக சவால்விடுத்தார். போட்டி விதிமுறைகளின் படி, அர்ஜூனன் குரு இல்லத்தின் இளவரசனாக இருப்பதால் ஒரு இளவரசன் மட்டுமே சவால் விட முடியும். கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன், உடனே கர்ணனை அங்கதேசத்தின் அரசனாக்கி, அரசன் அர்ஜூனனுடன் போட்டியிட தகுதியானவனாக்கினார். அப்போது கர்ணன் அவரிடம் இதற்கு ஈடாக நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டதற்கு துரியோதனன் தனக்கு அவரது நட்பைப் வேண்டுவதாகக் கூறுகின்றார்.

  ஒரு நேரம் அந்நியனாக இருந்த கர்ணன் சிறந்த நண்பனாக மாறினான். கர்ணன் துரியோதனன் நட்பை, நட்புக்கு எடுத்துக்காட்டாக இன்றும் கூறுவார்கள்.
  ..........................................

  நீங்கள் உயிர் வாழ்வதற்காக ஏதோ வேலை செய்கிறீர்கள். உங்கள் பிழைப்புக்காக, நன்றாக சம்பாதிக்கக்கூடிய எந்த வேலையானுலும் செய்யுங்கள்.அதை ஒழுங்காக, நேர்மையாக, ஏமாற்றாமல் செய்யுங்கள்."பறுவதம்பாட்டி"க்கு மேலும் வேலை கொடுக்காதீர்கள்!
  .........................................

  ஆமாம்,

  "நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்" ,

  "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் "

  ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல-"எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு"-நீ அதையே பெருவாய்.

  "நம் செயல்களுக்கு நாமே காரணம்!"

  "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார்.

  "ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம்.

  "எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
  வீயாது, பின் சென்று, அடும்."- திருக்குறள்

  [ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.]

  இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு
  வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த
  பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை
  முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது
  கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது.அது அவரை இந்த பிறப்பிலேயே பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும் என்பதே அவர் கருத்து.அது மட்டும் அல்ல ஔவையார் கருதும் அதுவே.

  ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்துவதுடன் இப்ப பலன் தரும் இவைகளையும் செயுங்கள்.

  உனது வாக்கை காப்பாற்று
  எல்லோருக்கும் மதிப்பு கொடு
  நல்ல நண்பனாக இரு
  ஒருவரிடம் இருக்கும் நல்லதை எதிர் பார்
  மன்னிப்பை காட்டு
  அன்பாய் இரு
  நீ தவறு இழைக்கும் போது, மன்னிப்பு கேள்
  அன்பு வேண்டியவர்களுக்கு அன்பு செலுத்து
  பிள்ளைகளின் தேவையை முதல் செய்
  உன்னுடன் ஒருவர் கதைக்கும் போது கவனம் செலுத்து
  உன்னை தினம் காதலி
  உணர்வை காட்டு
  கொடும் சொல் பாவிக்காதே
  உனது அறிவை மற்றவர்களுடன் பகிர்
  உனக்கு தேவையற்றதை தானம் கொடு
  சிரிப்பை கூட்டு முகச்சுளிப்பை குறை
  நல்ல வழ்வை எதிர் பார்
  எப்பவும் நல்லதையே செய்
  உன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்
  உனது பிழைகளில் இருந்து பாடம் படி

  ReplyDelete
  Replies
  1. பலன் தரும் பழக்கங்கள்.
   பலமான கருத்துகள்.

   Delete