சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்

2011-04-11 பொன்னர்-சங்கர்
நடிகர்கள்: பிரஷாந்த், திவ்யா பரமேஸ்வரன், பூஜா சோப்ரா, சினேகா,குஷ்பூ, விஜயகுமார், பிரபு, சீதா, டெல்லி கணேஷ்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன்.
கதை:ஒரு சரித்திரக்கதை.
கருத்து: கலைஞரின் கதையல்லவா!!
புள்ளிகள்:55
2011-04-11 அப்பாவி
நடிகர்கள்: கெளதம்,சுஹானி,கே.பாக்யராஜ், சூரி,மனோபாலா.
கதை: யார் யார் தங்களது சுயநலத்திற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்துகிறார்களோ அவர்களையெல்லாம் களையெடுக்கும் ஒரு அப்பாவியின் ஆக்ரோஷம்தான் படத்தின் கதை.
கருத்து: பரபரப்பான திரைக்கதை, பக்குவமான வசனங்கள்.
புள்ளிகள்:55

2011-04-07 நஞ்சுபுரம்
நடிகர்கள்: ராகவ், மோனிகா.
கதை: பாம்பு படையே இருக்கும் ஒரு ஊரில் நடக்கும் படபட சம்பவங்களே நஞ்சுபுரத்தின் கதை.
கருத்து: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரில்லர் படம்.
 புள்ளிகள்:55
2011-04-04 சிங்கையில் குருஷேத்திரம்
நடிகர்கள்: விஷ்ணு, சிவகுமார், மதியழகன், விக்னேஷ்வரி, பிரகாஷ் அரசு
கதை: போலீஸில் சிக்கி தூக்கிலிடப்படும் ஒரு பெண்ணின் சிறு வயது மகன், மாமா மீது ஆத்திரம் கொண்டு பெரியவனாகி மாமாவை பழி வாங்குவது தான் கதை.  
கருத்து: அதிரடி ஆக்ஷன் காட்சிகள், இயல்பான நடிப்பு, நேர்த்தியான திரைக்கதை.
புள்ளிகள்:50
2011-04-03 சட்டப்படி குற்றம்
நடிகர்கள்: :  ஐஸ்வர்யா, பானு, ஜெயஸ்ரீ, சத்தியராஜ், சீமான், ராதாரவி. 
கதை: அரசியல்வாதியின் இழுப்புக்கு இணங்காத ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபீசர் குடும்பத்தை பலி ஆக்கிய அரசியல்வாதியை அந்த ஆஃபீசர் பழி வாங்கறதுதான் கதை.
கருத்து: எஸ்..சந்திரசேகரன்  தனது கோபத்தைதான் படமாக எடுத்திருக்கிறார்.
புள்ளிகள்:55
2011-03-29 குள்ளநரி கூட்டம்
 நடிகர்கள்: விஷ்ணு, ரம்யா நம்பீசன்,
கதை:படம் நெடுக இழையோடும் மெல்லிய காதல், நகைச்சுவை

கருத்து: மொத்தத்துல குடும்பத்தோட பார்க்க முடியற, எந்த வெட்டு குத்து கொலை இல்லாத, பஞ்ச் டயலாக், வில்லன், கார் சேசிங்னு எந்த தலைவலியும் இல்லாத கொஞ்சம் லாஜிக்கும் இல்லாத அருமையான திரைப்படம், கண்டிப்பா பாருங்க.
புள்ளிகள்:65
2011-03-23 முத்துக்கு முத்தாக
 நடிகர்கள்:  விக்ராந்த், மோனிகா,சரண்யா, இளவரசு.
கதை: பெற்றோரை பொக்கிஷமாக நினைத்து நல்லபடியாக பார்த்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம்.
கருத்து: பலே மூவி !
புள்ளிகள்:60

2011-03-23 லத்திகா
நடிகர்கள்:டாக்டர் சீனிவாசன், மீனாட்சி கைலாஷ்,ரகுமான்,.

கதை: குழந்தையையும், மனைவியையும் யாரோ கடத்திவிட தலைவர் அவர்களை மீட்கிறாரா...? இல்லையா...? என்பதை வெண்திரையில் பார்த்து வெந்து சாவுங்கள்.
புள்ளிகள்:35
2011-03-22 அவர்களும் இவர்களும்
 நடிகர்கள்: விமல்நடராஜன்,சுப்ரஜா,சதீஷ், ஐஸ்வர்யா, சார்லி.

கதை: பெரிய இடத்துப் பெண்ணும், தாழ்ந்த ஜாதிபையனும் காதலித்து ஓடிப்போனால் ஏற்படும் விளைவுகளை அவர்களது பக்கத்தில் இருந்தும், அவர்களை சார்ந்தவர்களது பக்கத்தில் இருந்தும் அணுகியிருக்கும் படம்தான் அவர்களும் இவர்களும்!
புள்ளிகள்:50
2011-03-20 ஐவர்
நடிகர்கள்: அதுல்யா,விஜய் ஆன்ந்த், இலா, பேரரசன்.
கதை: நல்ல நட்பிற்காகவும், அவனது குடும்பத்திற்காகவும் துரோகி பட்டத்தையும் சுமந்து ஒதுங்கி வாழும் ஒருத்தரை அவனது உயிர் நண்பனுடன் இணைக்க போராடும் நான்கு இளைஞர்களின் கதைதான்
புள்ளிகள்:45
2011-03-17 அய்யன்
நடிகர்கள்: வாசன் கார்த்திக், திவ்யா பத்மினி,கஞ்சா கருப்பு,சிங்கமுத்து.

கதை: நித்தம் நம் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் நடக்கிற உயிரோட்டமான சம்பவம் தான் கதை.
புள்ளிகள்:40
2011-03-17 பவானி
 நடிகர்கள்: சினேகா,சீனிவாசராவ்,விவேக்,சம்பத்.
கதை: பொலிட்டிக்கல் தாதா கோட்டாவின் கோட்டையை சீன்சியர் போலீஸ் ஆபீசரான சினேகா எப்படி தகர்க்கிறார்? அதற்காக பதவி உள்ளிட்ட எதையெல்லாம் இழக்கிறார்? என்பதுதான் பவானி படத்தின் மொத்த கதையும்!
கருத்து: சுமார், பரவாயில்லை.
புள்ளிகள்:50
2011-03-17 காதலர் குடியிருப்பு
நடிகர்கள்: அனீஷ், காயத்ரி, சரண்யா.
கதை: பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெங்களூரில் நடந்த கலவரத்தில் காணாமல் போன ஒரு காதலனை பற்றிய கதை.
புள்ளிகள்:20
2011-03-17 வர்மம்
நடிகர்கள்: அகிலன்,அனகா,நிழல்கள்ரவி, மீரா கிருஷ்ணன்.
கதை:தங்கையை கற்பழித்து, அவரது சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் பாசக்கார அண்ணனின் கதைதான் "வர்மம்".
கருத்து: இந்தப்படம் பழம் பாடம்.
புள்ளிகள்:30

0 comments:

Post a Comment