வைகாசி
மாதத்தில் வெளிவந்த திரைப்படங்கள்.
2012-05-14
கலகலப்பு
நடிகர்கள்: - விமல், சிவா, சந்தானம், அஞ்சலி.
கதை: - இழந்த ஹோட்டலை மீட்டு,காதலை கெட்டியாக்கிய
ஒரு நாயகனின் கதை.
கருத்து: - நல்ல காமெடி படம்தான்.
புள்ளிகள்:-55
2012-05-06
வழக்கு எண் 18/9
நடிகர்கள்: - ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ்.
கதை: - வசதியானவர்களின் காம காதல் ஒன்றால், வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும், இன்னல்களும் படத்தின் கரு
கருத்து: - ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி
புள்ளிகள்:-60
2012-04-15 ஒரு கல் ஒரு கண்ணாடி
நடிகர்கள்: - உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா.
கதை: - அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை.
கருத்து: - குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை
புள்ளிகள்:-60
திரையுள்:-
விருது, பாராட்டு மழையில் ‘தூங்கா நகரம்’
நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்… என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் நேர்த்தியாக சொல்லிய படம் தூங்கா நகரம். இப்படத்தில் விமல், பரணி, நிஷாந்த், கௌரவ், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌரவ்-க்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படத்துக்கு நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்தது. மேலும் துபாயிலும் விருதுகள் வாங்கியுள்ளது. இதனால் இயக்குனர் கௌரவ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இப்படத்தை பார்த்த வெளிநாட்டினர் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தரமான படம் என பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இவர் அடுத்து ‘சிகரம் தொடு’ என்ற புதிய படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். தந்தை-மகன் உறவு குறித்து ஆழமாக சொல்லக்கூடிய ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகிறது. சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.
கடல் ஷூட்டிங்கில் குமுறி,
குமுறி அழுத கார்த்திக் மகன்
மணிரத்னத்தின் கடல் பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவை கலங்கடித்துவிட்டாராம்.
மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாகிறார் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம். படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
படத்தில் நாயகன் அனாதை ஆனாலும் ஊர் மக்களின் உள்ளங்களில் வாழ்பவன். நாயகனை எடுத்து வளர்த்த பொன்வண்ணன் ஒரு நாள் அவர் அனாதை என்ற உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்ட நாயகன் குமுறி, குமுறி அழ வேண்டும். காட்சியை நாயகனிடம் மணிரத்னம் விவரிக்க கௌதம் இயக்குனர் எதிர்பார்த்த மாதிரியே அழுது உருகிவிட்டாராம். இதைப் பார்த்த படக்குழுவும் கலங்கிவிட்டதாம்.
புதுமுகமாக இருந்தாலும் அவர் நடிப்பை பார்த்து அசந்த படக்குழுவினர் நாயகனை மனதாரப் பாராட்டினார்களாம். நவரச நாயகனின் மகன் அதுவும் மணிரத்னத்தின் இயக்கத்தில் என்றால் கௌதம் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.
இந்த படத்தில் தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சாமி இந்த படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோச்சடையான் படப்பிடிப்பு:
ரஜினி ஹாங்காங் பயணம்
ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அங்கு அரங்குகள் அமைத்து ரஜினி நடித்தார். முக்கிய காட்சிகளை படமாக்கினர். ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. ரஜினி, தீபிகா படுகோனே, ஆதி நடித்த காட்சிகளை அங்கு படமாக்கினர். ஒரு பாடலுக்கு ரஜினியும், தீபிகா படுகோனேவும் பரத நாட்டியம் ஆடும் காட்சியையும் அங்கு எடுத்தனர்.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரஜினி இன்று காலை விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். இதுபோல் தீபிகா படுகோனேயும் ஹாங்காங் செல்கிறார்.
ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் படப்பிடிப்பு நடக்கிறது. கோச்சடையான் படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
தமிழ் நடிகர்களின் முதல் திரைப்படம்
நடிகா்………………………..திரைப்படம்
பரத் ……………………….போய்ஸ்
விஷால்……………..செல்லமே
சிபிராஜ்……………….ஸ்டுடண்ட் நம்பர் 1
ஸ்ரீகாந்த்………………ரோஜாகூட்டம்
எஸ்.ஜே.சூர்யா………..நியூ
ஜீவன்……………………..யுனிவர்சிட்டி
பிரித்விராஜ்………..கனா கண்டேன்
ஜெய்…………………………..பகவதி
சசிகுமார்……………சுப்ரமணியபுரம்
பிரகாஷ் ராஜ்……….டூயட்
ராஜ்கிரண்………..என் ராசாவின்
மனசிலே
கார்த்தி………………….பருத்திவீரன்
எம்.ஜி.ஆர்………….சதிலீலாவதி
சிவாஜி…………………பராசக்தி
ஜெமினிகணேசன்………ஒளவையார்
எஸ்.எஸ்.ஆர்………பராசக்தி
முத்துராமன்……….அரசிளங்குமரி
ஏவி.எம்.ராஜன்…….நானும் ஒரு பெண்
சிவகுமார்………..காக்கும் கரங்கள்
ஜெய்சங்கர்………..இரவும் பகலும்
ரவிச்சந்திரன்………….காதலிக்க
நேரமில்லை
விஜயகுமார்……………..ஸ்ரீ வள்ளி
ரஜினிகாந்த்……….அபூர்வ ராகங்கள்
கமலஹாசன்……..களத்தூர் கண்ணம்மா
விஜயகாந்த்…….இனிக்கும் இளமை
சத்யராஜ்……………சட்டம் என் கையில்
பாக்யராஜ்…………………16 வயதினிலே
கார்த்திக்………….அலைகள் ஒய்வதில்லை
பிரபு……………………….சங்கிலி
முரளி………………பூவிலங்கு (தமிழில்)
ராம்கி…………..சின்னப்பூவே
மெல்லப்பேசு
பார்த்திபன்………..தாவணிக்கனவுகள்
அர்ஜூன்………………நன்றி
சரத்குமார்……கண் சிமிட்டும் நேரம்
விக்ரம்………..தந்துவிட்டேன் என்னை
பிரசாந்த்……….வைகாசி பொறந்தாச்சி
அஜீத்…………அமராவதி
விஜய்………..நாளைய தீர்ப்பு
பிரபுதேவா……..இதயம்
அரவிந்தசாமி……..தளபதி
அருண்குமார்…..பிரியம்
அப்பாஸ்………காதல் தேசம்
குணால்………காதலர் தினம்
சூர்யா…………நேருக்கு நேர்
ஷாம்……………12பி
மாதவன்……….அலைபாயுதே
தனுஷ்……….துள்ளவதோ இளமை
சிலம்பரசன்…காதல் அழிவதில்லை
பாலா………………அன்பு
ரவி………………..ஜெயம்
நரேஷ்…………….குறும்பு
ஆரியன் ராஜேஸ்…………….ஆல்பம்
வினித்………………ஆவாரம்பூ
விக்னேஷ்………….சின்னத்தாயி
வடிவேலு……………என் ராசாவின் மனசிலே
தங்கவேலு………..சதி லீலாவதி
சுரேஷ்……………………பன்னீர் புஷ்பங்கள்
மோகன்……………நெஞ்சத்தை கிள்ளாதே
ராமாராஜன்……….நம்ம ஊரு நல்ல ஊரு
ராதாரவி…….தண்ணீர் தண்ணீர்
தண்ணீர்
காத்தாடி ராமுர்த்தி….பெண்ணே நீ
வாழ்க
கரண்……………..அண்ணாமலை
வையாபுரி……………மாணிக்கம்
ஆனந்த பாபு……….உயிருள்ளவரை உஷா
ரஞ்சித்……………………சிந்துநதிப் பூ
நெப்போலியன்………….புது நெல்லு புது
நாத்து
0 comments:
Post a Comment