சமையலுக்கு உகந்த எண்ணெய் எது?

பெண்களுக்கான  வழிகாட்டி
பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெயாக தற்போது சூரிய காந்தி எண்ணெய் அதிகரித்து வருகிறது.
இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்கப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது. இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை சந்திக்கிறது.
சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன்,  லினோலிக் அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம். பலரும், பாமாயில் எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், சூரிய காந்தி எண்ணெயால் நமது உடலுக்குக் கிடைக்காத கொழுப்புச் சத்தைப் பெற, சூரிய காந்தி எண்ணெயுடன் கலந்தோ அல்லது ஒரு நாள் சூரிய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று மாற்றி மாற்றி உபயோகிக்கப்பதும் நல்லது.
பொதுவாகவே, எந்த வொரு எண்ணெயாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மாதத்தில் ஒரு முறையாவது ஆலிவ் ஆயில், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.
ஒரைசனால் எனப்படும் அரிசி உமி எண்ணெயும் விட்டமின் இ நிறைந்த எண்ணெய்-ஆக உள்ளது. ஆலிவ் எண்ணெய் உடலுக்கு நல்லது என்றாலும் விலை அதிகம் என்பதால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் அதை வாங்கிப் பயன்படுத்துவது இயலாதது.
எது எப்படி இருந்தாலும், எண்ணெயை அளவோடு சேர்த்துக் கொள்வது நலம்.

0 comments:

Post a Comment