எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் மரபின [ஜெனடிகல் /genetical] ரேகைகளை விட்டு விட்டு போயிருக்கிறது. இங்கு,மரபணு (இலங்கை வழக்கு: பரம்பரை அலகு, ஆங்கிலம்: gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக்குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid – DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.  உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் மரபணு[ஜீன்] மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த மரபணுக்கு [ஜீனுக்கு] சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் அல்லது மரபியல் அடிப்படையில் காலப்போக்கில் மனித இடமாற்றம் பற்றிய ஆய்விற்கான திட்டம் [Genographic Project] எனப் படும். மனிதர்களின் ' Y' குரோமோசோம்களை அடிப்படையாக
வைத்து இந்த வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப் படுத்தப் படுகிறது. M என்பது பெரும் ஒருமைப் பண்புக் குழு [Macro-haplogroup ] என்பதின் சுருக்கம் ஆகும். ஒவ்வொரு வழித்தடமும், ஆப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும். ஆகவே ஆப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என்பதே உண்மை. அந்த தொடக்க துணிகர இடம் பெயர்வு காலத் தில், வேட்டை மற்றும் உணவு சேகரிப்பதுமே அவர்களின் அன்றாட வாழ்க்கையாக இருந்தது. இந்த மனி தர்கள் சில நூறு தனிப்பட்டவர்களை கொண்ட சிறு சமுகமாக, அனேகமாக வாழ்ந்தார்கள். சமூகப் பிணைப்புகள் அங்கு அவர்களுக்கு இடையில் உண்டாகி, அது இந்த சிறிய மக்கள் கூட்டங்கள் தங்களுக்கு இடையில் உணவு வளங்களை பகிரவும் ஒன்றாக இணைந்து வேட்டையாடவும் உதவின. இந்த பிணைப்பு மலர்ந்து, இன்று நாம் அறிந்த சமூகம்
மற்றும் கலாச்சாரம் போன்ற ஒன்று அவர்களுக்கு இடையில் தோன்ற மொழி வளர்ச்சி உதவியது. இந்த மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக் குறிப்புகள் உதவின. அதுதான், நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது எனலாம். கி மு 14,000-9500 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. நாடோடிகளாக  வேட்டை யாடி உணவு சேர்ப்பதில் இருந்து அவர்கள் வாழ்வு மாற்றம் அடைந்தது. இந்த கால கட்டத்தில் மழை வீழ்ச்சி உச்ச நிலையை அடைந்து சஹாரா, வட ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள் பசுமையா மாறின. இந்நிலையில், வேளாண்மை அங்கு பிறந்தது; காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங்களை, தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்து கொண்டான். அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை என்கின்றனர். நைல் நதி,மற்றும் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த
மெசொப்பொத்தேமியாவின் டைகிரிஸ்  யூப்ரதீஸ் நதிகளை உள்ளடக்கிய இளம் பிறை வடிவம் [Fertile Crescent lands] கொண்ட செழுமையான பகுதியில் முதல் விவசாயி பிறந்தான் என நம்பப்படுகிறது. முதலில்,உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான். மெசொப்பொத்தேமியா நாகரிகம் கி மு 5000 ஆண்டில் இருந்து அடையாளம் காணக் கூடியதாக உள்ளது. எனினும் அவர்களால் எழுதப் பட்ட ஆவணங்கள் கி மு 3300 இல் இருந்தே எமக்கு கிடைத்துள்ளன. எனினும் இந்த நாகரிகம் கி மு 2000 ஆண்டளவில் ,வரலாற்றில் இருந்து மறைந்து விட்டது. சுமேரிய நாகரிகத்தின் இறுதி ஆண்டு அநேகமாக கி மு 1750 ஆக இருக்கலாம்? . சுமேரியாவின் அண்டை மக்கள் படை எடுத்து அவர்களை தோற்கடித்து, சுமேரியாவை ஆள தொடங்கியதும், சுமேரியர்களின் சிலர் அங்கேயே தங்கி அவர்களுடன் கலந்து இருக்கலாம்?, மற்றும் பலர் அங்கிருந்து வெளிக்கிட்டு வெளியே போய் இருக்கலாம். அப்படி போனவர்கள் அதிகமாக பலூசிஸ்தான் ஊடாக 
சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள் என நம்பப் படுகிறது. உதாரணமாக, முனைவர் கி.லோகநாதன், இவர்களை பற்றி குறிப்பிடுகையில்,
இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று பாபிலோனிய நாகரிகத்தை வளர்த்தனர் என்றும், அதன் பின்  சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்ற. போதிலும், உண்மையில் அது அழிந்துவிடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும் பான்மையோர்  தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்றும் கூறுகிறார். மேலும் சுமேரு மொழி பழந் தமிழே! என்று சுமேருத் தமிழைப் பற்றி எளிமையான பல கட்டுரைகளை படைத்தும் உள்ளார்.  
அங்கு தான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் கவனிக்கத் தக்கது என்னவென்றால்,நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், யூப்ரடிஸ் டைகிரிஸ் ஆறுகளை அண்டியும்,இறுதியாக சிந்து நதி கரையிலும் அமைந்த முன் னைய நாகரிகத்தை அமைத்தவர்கள் அனைவருமே கருத்த தோல் மனித அடையாளத்தை கொண்டவர்கள் என்பது ஆகும். 

சிந்து சம வெளி நாகரிகம் சிறு குடியேற்றமாக கி மு 3500 ஆண்டளவில் ஆரம்பித்தாலும் அது 4,500-5,000 ஆண்டுகளிலேயே  சிறப்புற்று விளங்கியது எனலாம். அவர்கள் மெசொப்பொத்தேமியா வுடன் வர்த்தக உறவு வைத்திருந்தார்கள். கி மு 3000  இத்திற்கு பின் நேரடியான வர்க்கமாக காணப் படுகிறது. சிந்து வெளி கப்பல்கள் [ships from Meluhha (the Indus) ] மெசொப்பொத்தேமியா வின் துறைமுகங்க ளில் நிறுத்தப் பட்டன. சில சிந்து வெளி மக்கள் [Meluhhans] அங்கு குடியேறியும் உள்ளார்கள். இவர்களின் சில வர்த்தகத்திற்கு, இடைத் தரகராக டில்முன் [Dilmun] செயற் பட்டுள்ளது, குறிப்பாக ஊர் III  சரிந்ததும், அதன் பங்கு மேலும் அதிகரித்தது. கி மு 2000 ஆண்டின் தொடக்கத்தில், பஹரைன் [Bahrain / Dilmun] மட்டுமே அவர்களின் கப்பல்கள் சென்றன. பஹரைன் அவர்களின் பண்டகசாலை [entrepot] ஆக தொழிற் பட்டது. ஆகவே இங்கு இருமொழிகளில் எழுதப்பட்ட [bilingual] ஆவணங்கள் கிடைக்கலாம் என எவரும் எதிர் பார்க்கலாம் ? ஆனால் அப்படி ஒன்றும் இது வரை கிடைக்க வில்லை. என்றாலும் அங்கு ஹரப்பான் கல்வெட்டு களுடன் உள்ளூர் முத்திரைகள் கிடைத்துள்ளன. ஆனால் அவை இன்னும் மொழி பெயர்க்கப் பட வில்லை. ஹரப்பான் அழிந்து போகக்கூடிய பொருள்களில் பெரும்பாலும் எழுதி இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது. அப்படியே டில்முனிலும் தமது கொடுக்கல் வாங்கலை எழுதி இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது? 

கி மு 1800  ஆண்டளவில்,சிந்து வெளி நாகரிகம் வீழ்ச்சி அடைய தொடங்கியது. எழுத்துக்கள் மறையத் தொடங்கின, தரப்படுத்தப்பட்ட எடைகள், நீட்டலளவைகள் போன்றவை பாவனையில் இருந்து மறைந்தன. மற்றும் அண்மைக் கிழக்கு நாடுகளுடனான தொடர்புகள் தடைப் பட்டு, நகரங்கள் படிப்படியாக கைவிடப்பட்டது. இதற்கான காரணங்கள் முழுமையாக அறியப் படாவிட்டாலும்  ,அவை சரஸ்வதி ஆறு வறண்டதாலும் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து ஆரியரின் வருகையாலும்,அல்லது வெள்ள பெருக்காலும் இவை நிகழ்ந்து இருக்கலாம் என கருதப் படுகிறது. மேலே கூறப்பட்ட காரணங்களால், சிந்து வெளி மக்கள் தெற்கு நோக்கி தள்ளப் பட்டார்கள் என பொதுவாக கருதப் படுகிறது. இதனால், சிந்து வெளி நாகரிகம் கி மு 1700 ஆண்டளவில்  சிதைவுற்று, அதன் பின் ஆயிரம் ஆண்டுகள் வரை அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறார்கள். அதன் பின்  கி.மு. ஏழாம்  நூற்றாண்டளவிலே மறைத்த வரலாற்றின் திரைவிலகும்போது, கடைசி தமிழ் சங்க காலத்தில், அவர்கள் திராவிட மக்களாக ஓரளவு நாகரிகம் பெற்றுத் தென்னிந்தியாவில் வாழ்வதனை நாம் காண்கிறோம். இவை எல்லாம் எமக்கு எடுத்துக் காட்டுவது, புரோட்டோ -திராவிட  [அல்லது ஆதிமுன்னோர் சார்ந்த திராவிட / Proto-Dravidian ] மொழி எழுத்துக்கள், குறைந்தது 5000 ஆண்டுகளாவது இந்தியாவில் தொடர்ந்து இருந்து இருக்கிறது என்பது ஆகும். ஆகவே தமிழ் எழுத்தின் மூலத்தை காண நாம் குறைந்தது சிந்து வெளி பக்கமாவது  கட்டாயம் போகவேண்டும்?

உதாரணமாக,சிந்து சம வெளி இடுபாடு களுக்கிடையில் கண்டு எடுக்கப்பட்ட சிவலிங்க த்தின் முந்தைய வடிவத்துடன் இன்னும் ஒரு முக்கி யமான தெய்வம் பொறிக்கப்பட்ட முத்திரையும் கண்டு எடுத்தார்கள். சொற்குறியிடு "ஆ,மு,வான்". இந்த பழமையான தெய்வத்தை வரையறுகிறது. இதனால், இந்த தெய்வத்தை "ஆமுவான்" என பரிந்து ரைத்தார்கள். சிந்து சம வெளி வில்லையில் இந்த இறைவனுக்கு நீண்ட மனிதவுரு கொடுக்க ப்பட்டு ள்ளதுடன் . அதன் தலையில் மூன்று கொம்பும் உள்ளது. இந்த கடவுள், "ஆமுவான் /Ahmuvan" ,தமிழர்களின் பெருமை மிக்க கடவுளான, முருகனை ஒத்த வடிவத்தையம் மேலும் கொண்டுள்ளார்.அது மட்டும் அல்ல,ஆ+மு+வானின் முதல் எழுத்து, டிராகன் விண்மீன் குழுவை [Draco constellation] குறிக்கும் சிந்து வெளி எழுத்தாகும். இதில் இருந்து தான் 'ஆ' குறிக்கும் முன்னைய தமிழ் வட்டெழுத்து உருவாகியது என அறிஞர்கள் இன்று கூறுகிறார்கள். மேலும் சிந்து வெளி எழுத்துக்கள் வலது பக்கம் இருந்து இடது பக்கமா எழுதப்பட்டவை என்பதையும் வனிக்க  ஆகவே இது தமிழ்-சிந்து வெளி தொடர்பை மேலும் உறுதி படுத்து கிறது எனலாம். மேலும் சில சிந்து சம வெளி ஓவிய எழுத்தின் [உரல், ஜாடி, உரலுக்குள் உலக்கை,ஈட்டி [வேல்], மீன், ஒரு கண் மீன், வெட்டிய [சீவிய] மீன், மூடிய மீன், கொம்பு மீன், கொழுத்த நண்டு ] விளக்கம் படம் இணைக்கப் பட்டு உள்ளது. அதே போல, தனியாக மீன் பட எழுத்து ஒன்றும் அதன் விளக்கமும் தரப் பட்டுள்ளது,

5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட,  செடிகள் போன்ற திரிசூல வடிவம் கொண்ட குறிகள் பதிந்த, பானை ஓடு ஹரப்பாவில் கண்டு எடுக்கப் பட்டது. அது இங்கு இணைக்கப் பட்டும் உள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழக டாக்டர் ரிச்சர்ட்  மேடோவின் [ Dr Richard Meadow of Harvard University] கூற்றின் படி, இந்த கண்டு பிடிப்பு, எமக்கு தெரிந்த எல்லா எழுத்துக்களுக்கும் முன், இந்த எழுத்தின் காலம் தேதி இடப்படும் என்கிறார் [pre-date all other known writing].எனவே இது அதிகமாக எமக்கு எடுத்து உரைப்பது, எகிப்து,மெசொப்பொத்தேமியா,ஹரப்பா [Egypt, Mesopotamia and Harappa] போன்ற இந்த மூன்று இடங்களில் ஆவது எழுத்து தன் பாட்டில் ,சுதந்திரமாக,கி மு 3500  இற்கும் கி மு 3100 இடையில் வளர்ந்து இருக்கும் என்பதே ஆகும். 

[கந்தையாதில்லைவிநாயகலிங்கம்]                                     பகுதி:14  தொடரும்


0 comments:

Post a Comment