💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-03]


🥀புள்ளிமானாக
🥀🥀துள்ளி நானாக
🥀🥀🥀பள்ளி பயின்ற
🥀🥀🥀🥀🥀நாட்களில்,

🥀பூந்தோட்டத்து

🥀🥀பூவிழியக்கா
🥀🥀🥀மாந்தோட்டத்துள்
🥀🥀🥀🥀புதைத்து மறைத்து
🥀🥀🥀🥀🥀வைத்தது நகைகளென
🥀🥀🥀🥀🥀🥀புரியாது,

🥀மாரிமழை

🥀🥀முடிந்தும் அவை
🥀🥀🥀முளைக்கவில்லையே
🥀🥀🥀🥀என எண்ணி,

🥀களைக்க ,களைக்க

🥀🥀மண்ணை
🥀🥀🥀சுரண்டி,சுரண்டி
🥀🥀🥀🥀கிளறியபோது

🥀சோற்றுக் கரண்டியால்

🥀🥀அவவிடம்
🥀🥀🥀வாங்கிய அடிகள்.

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀செ.மனுவேந்தன்🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

0 comments:

Post a Comment