💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-04]
பள்ளி போன வயதினிலே

பக்கத்திலே யெனை

 அரவணைத்து

பறுவதம் பாட்டி சொன்ன

 பாரதக் கதை முடிவிலே,

பரதன் எப்பிடிப்

பாரதப் போரில்

படுகாயம் 

அடைந்தானென இப்

பாவியின் கேள்வியின்

பயனாக ப்

பாட்டியெனைப் பார்த்த

பயங்கர பார்வையில்

நான்

பொசுங்கிப் போன

அந்த நாள்.

   செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment