💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-01]


ஔவையார் படம் பார்க்கவென்று
அப்புவிடம் அனுமதிபெற்று
ஆசை அறுபது நாள் ஓடிய
ஐங்கரன் திரையரங்கினுள்
ஆவலுடன் நுழைந்து
அரைமணி நேரம் அசைய
 -நம்
அடுத்தவீட்டு  தாத்தாவின்
இருமல் நெஞ்சில்
இடியோசையாய் என்
அருகில் காதில் விழ
எழுந்த பயத்தினால்
எழுந்து பதறி ப்பின்னே
அடிக்கக் குதிக்கால்
அலறிப் பறந்து வீடு
 அடைந்தபோது
அவ்விருமல் தாத்தா
அப்பு,ஆச்சியை அங்கே
அறுத்துக்கொண்டு
இருந்தது கண்டு
அசடு வழிந்தது..

 🌛செல்லத்துரை,மனுவேந்தன்


0 comments:

Post a Comment