அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் !!!

ஐ‌ந்து எ‌ன்பது ப‌ஞ்ச எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள் அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன்  அழை‌க்‌கிறோ‌ம்.

நில‌ம்,
நீ‌ர்,
தீ,
கா‌ற்று,
ஆகாய‌ம்
என ஐ‌ந்து‌ம் அட‌ங்‌கியதுதா‌ன் ப‌ஞ்ச பூத‌ங்க‌ள்.

மெ‌ய்,
வா‌ய்,
க‌ண்,
மூ‌க்கு,
செ‌வி
என ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தது ப‌ஞ்ச இ‌ந்‌தி‌ரிய‌ம்

வாழை‌ப்பழ‌ம்,
ச‌ர்‌க்கரை,
தே‌ன்,
நெ‌ய்,
பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம்
இவை ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்ததுதா‌ன் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்.

நா‌‌ள்,
நி‌தி,
யோக‌ம்,
கரண‌ம்,
ந‌ட்ச‌த்‌திர‌ம்
எ‌ன்ற ஐ‌ந்தையு‌ம் அ‌றிய‌க் கூடியதை‌த்தா‌ன் ப‌ஞ்சா‌ங்க‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.

மு‌த்து,
வைர‌ம்,
மரகத‌ம்,
நீல‌ம்,
பொ‌ன்
ஆ‌கிய ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தா‌ல் ப‌ஞ்சர‌த்‌தின‌ம்.

தர்மன்,
அர்ஜுனன்,
பீமன்,
நகுலன்,
சகாதேவன்
ஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர்.

ஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுக விளக்கு என்று அழைப்பர்.

ஜீலம்,
சீனாப்,
ரவி,
சட்லஜ்,
பியாஸ்
ஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.

இதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள் உ‌ள்ளன.

 📠தகவல் : கயல்விழி பரந்தாமன்0 comments:

Post a Comment