"என்றும் உன் நினைவில் வாழும்"


"என்றும் உன் நினைவில் வாழும்
ஒன்றும் அறியா குழந்தை இவன்
இன்றும் உன் அணைப்பை தேடி
நின்று கண்ணீர் சொட்டும் மகனிவன்"

"கன்றுகள் நாலா பக்கமும் பிரிந்தாலும்
குன்றுகள் பள்ளங்களில் பயணம் செய்தாலும்
வென்று தோற்று வாழ்வை கடந்தாலும்
ஈன்று எடுத்தவளை என்றும் மறந்ததில்லை"

"ஊன்று கோலாய் அவள் கட்டளைகள்
சான்று பகிரும் அவள் வாழ்க்கைகள்
மென்று தின்ற அவள் கொள்கைகள்
இன்றும் என்றும் எம் நினைவுகளே"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]

 🤶🧒🤶🧒🤶🧒🤶🧒 🤶🧒🤶🧒🤶🧒🤶🧒


0 comments:

Post a Comment