எந்தநாடு போனாலும் தமிழன் ஊர் [குருநகர்] போலாகுமா?

குருநகர் [Gurunagar] , இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர். இது, குருநகர் கிழக்கு, குருநகர் மேற்கு, சின்னக்கடை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் அடங்குகின்றது. யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் இப்பகுதிக்குள், மாநகரசபையின் 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் வட்டாரங்கள் பகுதியாக அடங்குகின்றன. குடியேற்றவாதக் காலத்து யாழ்ப்பாணத்தின் ஐரோப்பியர் நகரம் அல்லது பறங்கித்தெரு என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் பகுதி குருநகர்ப் பகுதியின் மேற்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது. கிழக்கு எல்லையை அண்டிச் சுண்டிக்குளி, திருநகர் ஆகியவை உள்ளன.

குருநகர் யாழ்ப்பாணத்தில் மக்கள்தொகை அடர்த்தி கூடிய பகுதிகளுள் ஒன்று. இங்கு கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். குருநகர்ப் பகுதி மக்களிற் பலர் மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள்.

வரலாறு
யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால குடியேறிகள், உள்ளூர் புராணங்களின்படி, ஒரு இசைக்கலைஞரும் அவரது குடிமக்க்ளுடன், அவர்கள் கொழும்புத்துறை சுற்றியுள்ள பகுதியும், குருநகர் சுற்றியுள்ள பகுதியும் முதன் முதலில் குடியேறிய இடமாக இருந்தது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள கொழும்புத்துறை வணிகக் களஞ்சியமும் குருநகர் பகுதியிலுள்ள முன்னர் அமைந்துள்ள " அலுப்பாந்தி " என்றழைக்கப்படும் துறைமுகமும் அதன் ஆதாரங்களாகத் தெரிகிறது.

ஆரியச் சக்கரவர்த்திகளுடன் கடற்படை குருநகரின் மக்களால் நிர்வகிக்கப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டது. இங்கு மோரோக்கன் ஆராய்ச்சியாளர் இப்னு பதூதா ஆரியச்சக்கரவர்த்தியின் அரசர்களின் கப்பல்களைக் கண்டது என்று நம்பப்படுகிறது.

யாழ்ப்பாண இராச்சியத்தின் மேற்கு பகுதி குருநகரினை சேர்ந்தவரால்    ஆட்சி செய்ய பட்டதாக அறியப்படுகிறது.
குருநகரின் மணியக்காரர்கள் மற்றும் அடப்பனார் யாழ்ப்பாண துறைமுகங்களின் தலைவர்களில் ஒருவராக பணியாற்றினார்.
வழிபாட்டிடங்கள்

குருநகரில், கார்மேல் மாதா தேவாலயம், புனித யாகப்பர் தேவாலயம், புனித அடைக்கல அன்னை தேவாலயம் போன்ற கிறித்தவ வழிபாட்டிடங்கள் உள்ளன. அத்துடன், சிறீ ஞானச் செல்வ விநாயகர் ஆலயம், சின்னக்கடை அம்மன் ஆலயம் என்னும் இந்து ஆலயங்களும், ஒரு மசூதியும் குருநகரில் உள்ளன.

குருநகர்  தொடர்பாக மேலும் அறிய கீழே யுள்ள காணொளியினை அழுத்தவும்........................................................நன்றி IBC
🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼

0 comments:

Post a Comment