ஒளிர்வு-(16) மாசி த்திங்கள்-2012
தளத்தில்:சிந்தனைஒளி,கனடாவிலிருந்து....ஒருகடிதம்,கொலைவெறி,மனிதன்,வாழ்க்கையோடுவிளையாடுங்கள்…!! ஆராய்ச்சியாளரின் செய்திகள், உணவின் புதினம்,காக்க காக்க......கூடி வாழ்ந்தால்….கனடாவில்...திருமணம்,சிரிக்க...சிரிக்க...., விக்கல், சுபாஸ் சந்திரபோஸ், பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை, இராமாயணம் ஒரு புரட்டல்,மாசிமாதத்தில் சினிமா..

சிந்தனை ஒளி:


வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி.அழகான பசி.
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே.
ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
பின்கண்ணாடிவழி நடந்ததை பார்ப்பதைவிட,
முன்கண்ணாடிவழி முன்னே வருவதை பார்.

மனிதன்பசிக்கு உணவு இல்லையே
என்று வருந்துகிறான் ஏழை,
உணவை உண்ணப் பசியில்லையே
என்று வருந்துகிறான் பணக்காரன்.
பணம் மிகுதியாய் உள்ளவனிடம்
மக்கள் நற்குணத்தைத் தேடவில்லை,
பணம் இல்லாதவனின் நற்குணத்தை
மக்கள் மதிக்கவில்லை.
ஏழைகளுக்காகப்  பாடுபடுகின்ற பலரும் கூட
பணக்காரர்களுக்குத் தான் நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஏழையின் உறவினை உதாசீனம் செய்யும் மனிதன்
 பணக்காரனின் உறவை பல விதங்களில் தேடுகிறான்.

ஆராய்ச்சியாளரின் செய்திகள்;

பரம்பரை நோய்களைத் தடுக்க: பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ள ஓர் முக்கிய ஆராய்ச்சியின் விளைவாக பல பரம்பரை நோய்கள் முற்றிலுமாக இல்லாது போகிற நிலை உருவாகலாம் என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சி இடைநிறுத்தம்: பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் H5N1 வைரஸ் கிருமியின் செயற்கை வகை ஒன்றை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், அந்த செயற்கை வைரஸினால் உலகின் பாதுகாப்புக்கு குந்தகம் வரலாம் என அஞ்சி தமது ஆராய்ச்சிகளை இடைநிறுத்த உடன்பட்டுள்ள்னர்.
விளையாடும் குழந்தை: எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது ஏனெனில், விளையாடும் போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. இதனால் மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உயர் இரத்தழுத்தம்: தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும். இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று.
அறிவாற்றல்: எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும் என்கின்றனர் நார்வே நாட்டின் ஸ்தவஞ்சர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர். எழுதும் போது மூளையின் உணரும் பகுதியில் எழுத்துக்களின் உருவம் படிந்து விடுகிறது. ஆனால், டைப் செய்யும் போது அவ்வாறு படிவதில்லை. டைப் செய்வது படிப்பதற்கு வலு சேர்ப்பதில்லை. இதேபோல், உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிந்து விடுகின்றன. உடல் அசைவுகள் இல்லாத பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிவதில்லை.
மற்றொருவர் உடல் அசைவுகளுடன் பேசும் போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். அதையே நாம் நம் உடல் அசைவுகளுடன் செய்யும் போது பதிவதில்லை போன்றவை ஆய்வில் தெரிய வந்துள்ளன.
ஞாபக சக்தி: ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள் எவை என்பதனை மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இது மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும். மூளையின் செல்கள் அழியாதிருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
ஆண்களே தூங்குங்க!:இளைஞர் ஒருவர் நாளொன்றுக்கு 5 மணிநேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால்,அவரது பாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன்கள்  அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.அதுவும் நாளொன்றுக்கு 5 மணியிலும் குறைவாகத் தூங்கும்போது,ஒரு  வார காலத்துக்குள்ளாகவே அதன் பாதிப்பை உணரலாம் என்று மேலும் அந்த ஆய்வு கூறுகிறது.
 எடை குறைய:பால் கலக்காத தேநீர் குடித்து வந்தால் உடலின் எடை அதிகரிக்காமல் கணிசமான அளவு குறையுமென ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஏனெனில் தேநீரில் எடையினை குறைக்கக் கூடிய பல மூலப்  பொருட்கள் உள்ளன.அதே நேரத்தில் வெறும் தேனீர் இரத்த அழுத்தத்தினையும் குறைக்கவல்லது.தினமும் 3 கப் தேனீர் அருந்தினலே இரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிதிருக்கிரார்கள்.
ந்யூரோ போன்!:இது மிகச் சிறிய அளவில் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் செல் போlன் வடிவில் அழகுற அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதோடு மிகவும் மலிவாகவும் இருப்பது ஒரு அதிசயம் தான்உலகையே அதிரடியாக பிரம்மாண்டமான அளவில் மாற்ற இருக்கும் ந்யூரோபோன் என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய போன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது! இனி மொபைல் போன் அல்லது கைபேசி என அழைக்கப்படும் செல் போனில் டொக் டொக் என்று எண்களை அமுக்கி டயல் செய்ய வேண்டாம். உங்கள் வாய்ச்சொல் மூலமாகவே அதை டயல் செய்து இயக்கலாம்!
அதிசயமான இந்த பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருப்பவர் பெயர் ட்ஸி பிங் ஜங் (Tzyy Ping Jung). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியோ மாகாணத்தில் சான்டியாகோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஸ்வார்ட்ஸ் சென்டர் ஃபார் கம்ப்யூடேஷனல் ந்யூரோஸயின்ஸில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.
ஜங் இது பற்றி "கடுமையாக ஊனமுற்றிருப்பவர்கள் இதை எளிதாக இயக்கலாம்" என்று பெருமிதத்துடன் கூறுகிறார். இதை இயக்க கைகளே தேவை இல்லை. வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதி கவனமாக இருக்க வேண்டிய பயனாளிகளுக்கு இது ஒரு வரபிரசாதம்.
ரெட் வைன்,மாரடைப்பு:ரெட் வைன் குடித்தல் மாரடைப்பு போன்ற இதயநோய்களிருந்து பாதுகாப்பு அளிப்பதாகநம்பப்படுகிறது.ஆனால் லண்டன் தோற்று நோய் தொடர்பான ஒரு ஆய்வு நிறுவனத்தின்  அடிசன் அண்ட் மெண்டல் கெல்த் பிரிவு ஜுர்கேன்ரேம் தலைமையில் நடந்த ஆய்வில் அந் நம்பிக்கை மறுக்கப்பட்டுள்ளது. மேலும்,அவ்வறிக்கையில்  உணவு,உடல்பயிற்சி போன்ற வாழ்க்கை முறைகளாலேயே உடல்நலம் காக்கப்படலாமேயன்றி மதுவோ,புகையிலையோ அல்ல.
4 வது பூமி:விண்வெளியில் எமது பூமியை ஒத்த உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் உண்டா என்ற தேடலின் விளைவாக இதுவரை வானியலாளர்களால் 4 புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் இறுதியாக இணைந்திருப்பது பூமியில் இருந்து 22 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள GJ 667C என்ற குறியீட்டுப் பெயருடைய நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள் (GJ 667Cc) ஒன்று.
இந்தக் கோள் பூமியை விட பெரிய பருமனுடன்.. 4.5 மடங்கு அதிக அளவு திணிவையும் கொண்டிருப்பதுடன் 28 பூமி நாட்களில் அதன் சூரியனைச் சுற்றியும் வந்துவிடுகிறதாம்..! இந்தக் கோளிலேயே உயிரினங்கள் வாழக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மூளை செல்: மனிதன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரிபடுத்துவது மிகவும் கடினமாகும். ஆனால் மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித தோலில் இருந்து மூளை செல்களை உருவாக்க முடியும் என்று கண்டுபிடித்து உள்ளனர்.
 இதன் மூலம் பக்கவாத நோய் மற்றும் மூளையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தக்காளி:சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். தக்காளி உள்ளிட்ட சிவப்பான பழங்களில் லைகோபீன் என்ற சத்து உள்ளது. அந்த பழங்களுக்கு சிவப்பு நிறத்தை கொடுப்பதுகூட லைகோபீன்தான். வெறும் தக்காளியிலேயே இது அதிகம் உள்ளது. சற்று எண்ணெய் விட்டு சமைக்கும்போது, லைகோபீன் சத்து அதிகமாகிறது. நோயின் தீவிரத்தை குறைப்பது மட்டுமின்றி, பரவி வரும் கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தாவரங்கள்:செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்று இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ் கொடியானது ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப்பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் ஒருவித வாயுவை வெளியேற்றி, ஒலியை ஏற்படுத்தி பக்கத்தில் உள்ள செடியை எச்சரிக்கை செய்கிறது. இதனை நுட்பமான கமெராவின் மூலம் ஆய்வு செய்து முதன் முறையாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இருதய நோய்-:ஆண்கள் தங்கள் தந்தையரிடமிருந்து இருதய நோயை பெற்றுக் கொள்வார்கள் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்தந்தையரிடமிருந்து மகன்மாருக்கு இந்த நோயின் தாக்கம் செல்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக சென்றிருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள். பிரித்தானியாவில் ஐந்தில் ஒருவர் இதனைக் காவுகின்றனர். பெண்களிலும் பார்க்க ஒரு தசாப்தம் முன்னதாகவே ஆண்களுக்கு இருதய நோய் வந்து விடுகின்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 40 வயதில் உயிராபத்து ஆண்களுக்கு இரண்டில் ஒன்று என்றும் பெண்களுக்கு மூன்றில் ஒன்று என்றும் தெரிவிக்கப்படுகின்றது.உணவின் புதினம்:


எப்போதும்  இளமையாக  இருக்க  உணவு  விஷயத்தில் ங்களுக்கு  உதவும்   குறிப்புகள்  இங்கே ......


·         தினசரி  ஒரு  கைப்பிடியளவுக்கு  பாதாம் பருப்புவேர்க்கடலை  போன்ற  கொட்டை   வகைகளைச்  சாப்பிடுங்கள்இதை  சாப்பிட்டால்  இதய நோய்  அபாயம்  வெகுவாக  குறையும்.   ஆயுளில்  3   ஆண்டுகளை  அதிகரிக்கும்  என்கிறார்கள்  அமெரிக்க  ஆராய்ச்சியாளர்கள்இதயத்துக்கு  ஆரோக்கியமளிக்கும்   நல்ல  கொழுப்புஒட்டுமொத்த   நலனை  காக்கும்  'செலினியம்ஆகியவை  கொட்டை வகை  உணவுகளின்  சொத்து.
·         உங்கள்  உணவில்  வாரத்தில்  2   முறை  மீன்  இருக்கட்டும்இரண்டில்  ஒன்று  எண்ணெய்  மீனாக  இருந்தால்  நல்லதுகொலஸ்ட்ராலை  குறைத்துஇருதய  நோய்  அபாயத்தைக்  கட்டுப்படுத்தக்கூடிய  'ஒமேகா  3  பேட்டி  ஆசிட்',   எண்ணை  செறிந்த  மீன்களில்  அதிகம்  உள்ளது.
·         சாப்பாடுகளுக்கு இடையே  3   மணிநேர  இடைவெளி  அவசியம்மூன்று  பிரதான  உணவுகளில்  காலை  உணவை  முழுமையாக  சாப்பிடுங்கள்.
·         தினசரி   ஒரு கப்  காபி  பருகலாம்ஆரோக்கியம்  காக்கிறேன்  பேர்வழியென்று  காபியையே  துறக்க  வேண்டாம்அளவாக  காப்பி  பருகுவது  என்பது  சர்க்கரை  நோய்உணவுக்குழாய்  கேன்சர்ஈரல்  நோயிகளைத்  தடுக்கும்  என்பது  ஆய்வாளர்களின்  கருத்து.
·         தினந்தோறும்  5   வகை  பழங்கள்காய்கறிகள்  சாப்பிடுவது  ஆரோக்கிய  வாழ்வுக்கு  அடித்தளமிடும்பழங்கள்காய்கறிகளில்  உள்ள   'ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்'   கேன்சர்இருதய   நோயிகளைத்  தடுக்கும், நோயித் தொற்றுக்கு  எதிராக   இருக்கும்முன்றுக்கு  இரண்டு  என்ற  விகிதத்தில்  காய்கறிபழங்கள்  எடுத்துக்  கொள்ளலாம்காய்கறிகள் அதிகமான  நார்ச்சத்தையும்குறைவான சர்க்கரை  சத்தையும்  கொண்டுள்ளன.
·         வயதுக்கு  வந்தவர்கள்  தினமும்  6   கிராமுக்கு  மேல்  உப்பு  சேர்க்க  வேண்டாம்சமையல்  செய்யும்போது  மட்டும்  உப்பு  சேர்க்கவேண்டும்பிரெட்பாக்கிங்  உணவு  வகைகளில்  அதிக  உப்பு  மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
·         மொத்தம்  7   வகையான  நிறங்களை  கொண்ட  காய்கறிகள்பழங்கள்  இருக்கின்றனஒவ்வொரு  வண்ண  காய்கறிபழங்களும்  வெவ்வேறு  வகையான  'ஆண்டி ஆக்ஸ்டன்ட்களைகொண்டிருக்கிறனஎனவே  எல்லா  வண்ண  காய்கறிபழங்களும்  உங்கள் உணவில்  இருக்கட்டும்.
·         தினமும்  8  கப்  திரவம்  குடிப்பது   அவசியம்ஆனால் அது  எல்லாம்   தண்ணீராக  இருக்க  வேண்டும்  என்ற  அவசியமில்லை.   டீகாபியும்  இதில்  இடம்பெறலாம்.
·         சராசரியாக  பெண்கள்  9 வகை  மாவுசத்து  உணவுகளை  (ஆண்களுக்கு  11  வகைசாப்பிடவேண்டும்ஒரு  துண்டு ரொட்டிமுட்டை  அளவு  உருளைக்  கிழங்கு,  28  கிராம்  சாதம்  போன்றவை  இதில்  அடங்கியிருக்கலாம்.
·         சாதரணமாக  குளிபானங்களில் 10  சதவீத  சர்க்கரை  உள்ளதுஅதாவது  ஒரு   புட்டியில்  150  கலோரி  இருக்கிறதுதொடர்ந்து   குளிர்பானம்  பருகுவது   தொப்பைக்கு  ஒரு  முக்கிய  காரணம். 'டயட் '   குளிர்பானங்களுக்கு  மாறலாம்ஜூஸுடன்  அதிக தண்ணீர்  சேர்த்துப்   பருகலாம்.
·         காலை  உணவும்மதிய  உணவும் காலம் தாண்ட வேண்டாம்அதிகப்  பசியின்  போது  நீங்கள்  அதிகமாக   சாப்பிடுவீர்கள்.
·         பொதுவாக   பெண்கள்  உணவில்  12   மில்லி   கிராம்     இரும்புச் சத்தை  எடுத்துக்கொள்கிறார்கள்இரும்புச்சத்து  செறிந்த  உணவுகளை  உங்கள்  உணவில் தினசரி  சேர்த்துக்  கொள்ளுங்கள்.
·         சாதாரணமாக   நாம்  நம்  ஒவ்வொரு  கிலோ  எடைக்கும்  26   கலோரி   உணவு  சாப்பிடலாம்.
·         நீங்கள்  ஒருமுறை  உணவை  விழுங்கும்போது  15  முறை  மெல்ல  வேண்டும். நாம்  சராசரியாக  7   முறைதான் உணவை  மேல்கிறோம்.
·         அங்களுக்கு  தினசரி  16   சதவீதபுரதம்  அவசியம்அதாவது  55  கிராம். பெண்களுக்கு  என்றால்  45  கிராம்.
·         நாம்  அனைத்து  விதமான சத்துக்களையும்  பெறஒவ்வொரு  3  நாட்களுக்கும்  17   வகையான உணவு வகைகளை  உண்ண  வேண்டும் என்கின்றனர்  உணவியல்  நிபுணர்கள்.
·         அனைவருக்கும்  தினசரி  18   கிராம் நார்சத்து  தேவைஅதற்கு தானியங்கள்பழங்கள்காய்கறிகள்  ஆகிறவை  நல்ல  ஆதாரங்கள்.
·         மொத்தம்  19   வகையான  தாது  உப்புகள்வைட்டமின்கள்  அனைவருக்கும்   அவசியத்  தேவை  என்பது  மருத்துவர்களின்  கருத்து.
·         உங்கள்  தினசரி  உணவில்கொழுப்பு  20  கிராம்களுக்கு  அதிகமாக இருக்கக்கூடாதுஉங்கள்  தினசரி  கலோரிகளில்   35   சதவீதத்துக்குள்   தான்  கொழுப்பின்   பங்கு  இருக்க  வேண்டும்.
·         பால்  சார்ந்த  உணவு  வகைகளில்  21,  ஒவ்வொரு  வாரமும்  உங்கள்  உணவுப்  பட்டியலில்  இருப்பது  கட்டாயம்தினசரி  மூன்று  வகையான  பால்சார்ந்த  உணவுப்  பொருட்களை  சாப்பிடுங்கள்.