ஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர் குறிப்பு.

Image result for ஆன்மீகம் ஆன்மீகம் என்ற வார்த்தைக்குத்தான் ஆளுக்கொரு அர்த்தங்களை ஒவ்வொரு மதத்தவரும் தாமாக ஒரு கருத்தினைப் புனைந்துகொண்டு என்னென்னவோ மாய மந்திரங்களையும் வேடிக்கைகளையும் எல்லாம் செய்து  தங்களுடைய பாதைகள்தான் உயர்வானது என்று நிருபிக்கத் துடிக்கிறார்கள்.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இத்தகைய மதங்களினால் சமூக முன்னேற்றம் எங்காவது ஏற்பட்டிருக்கிறதா என்றால் அது கேள்வியாகவே தரித்து நிற்கிறது.

ஆன்மீகம் என்பது  எந்த ஒரு மதத்தின் அடையாளமாக இருக்கமுடியாது. நிச்சயமாக மதசின்னங்களை உடம்பெல்லாம் அணிந்துகொண்டும்,வேதநூல்களைப்படித்துக்கொண்டும்உலகெங்கும் மனிதனால்   கட்டப்பட்ட ஆலயங்களுக்கு விரதம் பிடித்து உடலை வருத்தி வாழ்வதல்ல ஆன்மீகம்.

எது எம்மை இயக்குகிறதோ அதுவே ஆன்மீகம்.அது ஒவ்வொரு மனிதனின் மனத்தின் அடையாளமே. மனிதனுள் மனிதத்தை வளர்க்கும் நெறியே ஆன்மீகநெறிஇதை  தெளிவாக புரிய, மத சாயம் பூசிய சமயங்கள் சந்தர்ப்பங்களை மனிதனுக்கு கொடுத்ததில்லை, கொடுக்க விரும்பியதில்லை. அதனால்தான்  கவர்ச்சிகரமான கேளிக்கைகளையும் விழாக்களையும் காட்டி மனிதனை தம்வலையில் வீழ்த்தி அவர்களை மீளாத் துயிலில் ஆழ்த்தி தாம் மட்டும் பொருளாதாரத்தில் வளர்ந்துகொண்டு வாழ்கிறார்கள் மதவாதிகள்.
''ஆசை,கோபம்,களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்,
அன்பு,நன்றி,கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.''

தொகுப்பு:செல்லத்துரை மனுவேந்தன்.


0 comments:

Post a Comment