ஒரு சிறுமியின் சிறுகதை

பேருந்தில்  மூதாட்டி

செய்ந்நன்றி 

இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர் வாழ்ந்துவந்தார்.  
கன்னியா வெந்நீர் கிணறுகளில்  குளிக்க வருபவர்களுக்கு   சிறுவயதில் இருந்தே விளாம்பழம் விற்கும் தொழில் செய்யும்  வழக்கத்தினைக்  கொண்டிருந்தார்  காமாட்சி. அவருடைய கணவன்   யானை மிதித்து இளம் வயதினிலேயே  இறந்துவிட்டாலும்கூட  மூதாட்டி தனது  ஒரேயொரு மகள் சீதாலட்சுமியுடன் பன்குளத்தில் வசிக்காது கன்னியாவில் இருந்து தன் தொழிலைத் தொடர்ந்து  செய்து வந்தார்.

நீண்ட நாட்களாக தனது மகளையும், பேரப்பிள்ளைகளையும் சந்திக்காததால், காண விரும்பிய அவள் அவர்களை சந்தித்து ப்பேசிவர  பருப்பு வடை சுட்டு , கையிலிருந்த நூற்றிஐம்பது ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு அங்கு செல்லப்  புறப்படடார். பேருந்துக்கு வீதியில் காத்திருந்த வேளையில் அங்கு வந்த பேருந்துக்கு தன் கையினைக்  காட்டி அதில் ஏறிக் கொண்டபோதுபேருந்தில்  அதிக கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இருப்பதற்கு ஆசனம் இல்லையே என்று தடுமாறிய காமாட்சி ஆசனத்தில் அமர்ந்து இருப்போரை ஏக்கத்துடன் பார்த்தார். யாருமே அவளைக்  கண்டு கொள்வதாக தெரியவில்லை என உணர்ந்து சலித்துக்கொண்டார்.

பேருந்து நடத்துனர் மூதாட்டியின் பயணத்துக்குரிய பற்றுச் சீட்டினை  வழங்கி விட்டுப்  பணத்தை கேட்டபோது, தன் இடுப்பில் செருகி இருந்த பணப்பையை காணாது திகைத்துப்போன  மூதாட்டியை நடத்துனர் கண்டபடி ஏசி பேருந்தில் இருந்து இறங்குமாறு கூச்சலிட்டார். என்ன செய்வது என்று திகைத்து நின்றார் மூதாட்டி. அப்போது  சிங்களமொழி பேசும் நடுத்தர வயது நபர் ஒருவர் அவருக்குரிய பற்றுச்  சீட்டுக்கான பணத்தினை வழங்கினார்.  மூதாட்டி பார்வையால் அவருக்கு நன்றி கூறினார்.

 பன்குளம் சந்தியில் மூதாட்டியைப்  பின்தொடர்ந்து இறங்கிய அந்த நபரிடம் ''நீங்கள் பன்குளமா?'' எனக் கேட்டபோது    அந்த நபர் ''இல்லை பாட்டி நான் வவுனியாவுக்கு செல்கிறேன் உங்களுடன் கதைக்கவே நானும் இறங்கினேன்'' என கூறிய அந் நபரை  ஆச்சரியத்துடன் பார்த்த மூதாட்டியிடம் '' உங்களுக்கு என்னை தெரியவில்லையா,  10 வருடங்களுக்கு முன் கன்னியா வெந்நீர் ஊற்று பார்ப்பதற்காக வேனில் வந்த எமது குடும்பத்தை யானை தாக்க வந்தது. அப்போது சிதறி ஓடிய எங்களுக்கு உங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்து தேநீரும் வழங்கி உதவிகள் செய்தீர்கள் ''  என சிங்களத்தில் கூறினர்.

 பாட்டிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மகள் வீட்டுக்கு அவரையும் அழைத்துச் சென்றார் பாட்டி. அங்கு நடந்தவற்றை கூறி அவருக்கு கொஞ்சம் பருப்பு வடை சாப்பிட கொடுத்து தோட்டத்தில் விளைந்த சோளம் பொத்திகள்  சிலவற்றை கொடுத்து வழியனுப்பி வைத்தார்  காமாட்சி பாட்டி.

எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.-[திருக்குறள்]

:சுபஜி ,ஜெயரூபன்
 தரம்5 டி
 ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி
  திருகோணமலை 

✍: සුබාජි, ජයරුපන්
  ත්රිකුණාමලය
👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩

17 comments:

  1. அருமை,அருமை,அருமை.இப்படியான கருவுக்குரிய சிந்தனைக்கும், முயற்சிக்கும் , எழுதிட எழுந்திடும் துணிவுக்கும் பாராட்டுக்கள். திங்கள் தோறும் தீபத்தில் வரும் கவிதை ,அல்லது கதைக்குரிய பகுதிக்கு தலைப்பினை தெரிவுசெய்து மேலும் அனுப்புங்கள். நன்று.

    ReplyDelete
  2. அனைவருக்கும் புரியும்படி அழகாகக் கூறியுள்ளீரகள் நன்றிகளும் பாராட்டுக்களும் ! தங்கள் கதைக்களம் தொடர வாழ்த்துக்கள் நன்றி மறப்பது நன்றன்று

    ReplyDelete
  3. இளசுகள் விழிக்க பண்ணபடல் வேண்டும்.இந்த குறும் கதையை ஆவலுடன்-வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Kandiah Manoharan ManoharThursday, November 21, 2019

      இன்று தான் கதை படிக்க கிடைத்தது. அருமை.அற்புதம்.
      இது வெறுமனே புனையப்பட்ட கற்பனை கதையல்ல.
      அன்றாட வாழ்வில் அரங்கேறுபவை.
      இலகு தமிழில் கதைகூறும் முறை அழகே.
      கதை கதை பல கூறுகின்றது.
      மனித நேயம்.செய்நன்றி மறவாமை.
      யானை தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்ட மூதாட்டியை காப்பாற்றுகிறார் வருடங்கள் கடந்து.
      வசு திக்கற் எடுக்கமுடியாது தவிக்கும்
      மூதாட்டிக்கு. கொண்டக்ரர் ஏச்சசும் பேச்சும் பேச்சும் பேச்சும். காசில்லாட்டில் இறங்கு கிழவி. அடித்து சொல்வேன் அவன் ஒரு வீர தன்மான தமிழன்
      அன்றில் ஒரு சோனகன் கிண்ணியா
      கும்புறு பிட்டி பக்கம்.
      பிரதிபலன் எதிர்பாராமல் செய்யும்அ் உதவி நீ ஆபத்தில் உள்ள போது ஏதாவது வடிவில் உனைகாக்கும் காலம் கடந்தாவது.அது நான் அநுபவித்தவை பல தடவைகள்.
      அதி சிறந்த நிகழ்வொன்றை மட்டும்்கு கதையாக புனைந்து தீபம் சஞ்சிகைக்குஅனுப்ப உத்தேசம்.
      அது சிறுகதை அல்ல. நெடுங்கதை.யுத்த காலம்
      நான் பிறிமாவில் பணி.
      விடுமுறையில் வீடு சென்று மீண்டும் திருமலை பயணகதை.
      இறுதியாக ஈவிரக்கமற்ற
      அமாநுடர்
      மூதாட்டியின் பணத்தை சனநெரிசலில் திருடிய மிருகம்
      மூதாட்டிக்கு ஒரு இருக்கை வழங்க முடியா சுயநல பிசாசுகள்.
      1960 கடைக்கூற்றில்
      என்பள்ளிப்பருவத்தில் உருண்டு பிரண்டு தவழ்ந்த இடங்கள் கன்னியா வென்னீர் ஊற்று வெல்கம் விஹார
      பண்மதவாச்சி....திருமலையில் இருந்து மிதிவண்டியில் சென்று காடு வெட்டி சேனை பயிர் செய்கை.நல்லபிட்டி வேப்பங்குளம் பன்குளம் .அது மொறவவவாம் இப்போ.
      அருகருகே புதிதாக உருவாகிய கிராமங்கள்.
      பல.
      கதை புனைந்தவர் முயன்றால் வளர வளர
      ஒரு சிறந்த எழுத்தாளராக வளரலாம்
      வாழ்த்துக்கள்.

      Delete
    2. வரவேற்கிறோம்

      Delete
  4. நல்ல ஒரு முயற்சி. கருத்துள்ள கதை. தமிழும் நன்று.பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. தேவி சிறிமகான்Monday, November 18, 2019

    நன்று

    ReplyDelete
  6. Good job Subajee

    ReplyDelete
  7. I love your story.
    Good job subajee.

    ReplyDelete
  8. நல்ல கதை. தொடர்ந்து படிக்க ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Selvamalar RatnajahTuesday, November 19, 2019

    இந்த கதையை எழுதியவர் ஒரு சிறுவர் போல் தெரிகிறது இந்த சிறுவயதில் நன்றி உணர்வும் இன ஒற்றுமையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த கொண்டு வந்து இருந்தார் இவரின் எதிர்காலம் நன்றாக அமைய வாழ்த்துகள் 👍👍👍😍😍😍

    ReplyDelete
  10. நன்றிக் கடனுக்கான நல்லதொரு சிறு கதை!

    ReplyDelete
  11. தவராசா தங்கராசாWednesday, November 20, 2019

    சிறப்புடன் கூடிய மகிழ்ச்சி

    ReplyDelete
  12. Super super super ,,,

    ReplyDelete
  13. வாழ்கவழமுடன் வளர்க மிகச்சிறப்பு.

    ReplyDelete
  14. Manickavasagar ThiruketheeswaranFriday, November 22, 2019

    Arumai.

    ReplyDelete
  15. தரம் 5ல் கற்கும் மாணவன் எழுதிய கதை என நம்ப இயலாத அளவிற்குத் தரமாக உள்ளது
    வாழ்த்துக்கள் அன்த மாணவருக்கு
    கதைக் கரு அருமை!

    ReplyDelete