பெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள…..



ரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
நகரியில் 9-வது வார்டில் பங்கேற்ற ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பெண் மருத்துவர் திசாவின் நல்ல எதிர்காலம் தற்போது படிப்பு முடிந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் கொடிய காமகொடூரன்களின் கையில் சிக்கி இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மரணம் அடைந்த விதம் இந்த நாட்டையே உலுக்கிவிடடது.

பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் தங்கள் மகள்களை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு அனுப்பவே பயந்தனர். ஒரு மகளுக்கு தாயாக நானும் பயந்தேன்.

இதற்கெல்லாம் காரணம் அந்த நான்கு குற்றவாளிகளின் வளர்ப்புதான். அவர்களை சரியாக வளர்த்திருந்தால் திசாவின் குடும்பத்திற்கோ இந்த சமூகத்திற்கோ எந்தவிதமான நஷ்டமும் ஏற்பட்டிருக்காது.

சில பெற்றோர் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். நள்ளிரவுக்கு வீட்டிற்கு வரலாம். வராவிட்டாலும் பரவாயில்லை. பெண் குழந்தைகளை மட்டும்தான் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் அப்படி வளர்க்கப்படும் தங்களின் ஆண் மகன்களால் அடுத்த வீட்டு பெண் மகள்களுக்கு ஏற்படும் ஆபத்தை நினைத்து பார்ப்பதே இல்லை. இதை முதலில் பெற்றோர் உணர வேண்டும்.

நேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிடு என்றாலே மகள்களுக்கு கோபம். ஏன் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று. இதுபோன்ற காம கொடிய மிருகங்களின் பார்வை தங்கள் மகள்கள் மீது விழுமோ என்கிற அவர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க எந்த வகையிலும் முயற்சி செய்ய உரிமை உள்ளது. பயத்தை ஒதுக்கிவிட்டு தப்பிக்க அனைத்து வழிகளையும் கையாளுங்கள். கையோடு பெப்பர் ஸ்பிரே கொண்டு செல்லுங்கள். தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுங்கள்.

குற்றவாளிகள் குடும்பத்தை பார்த்தாலும் பரிதாபமாக உள்ளது. எல்லோருமே வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் தான். குற்றவாளி சென்ன கேசவலு மனைவி 5 மாத கர்ப்பிணி. பதினாறு வயது தான் ஆகிறது.

இனி அப்பெண்ணின் நிலைமை என்ன என யோசிக்கவே கஷ்டமாக உள்ளது. முதல் குற்றவாளி ஆரிப் முகமது தாயாருக்கு கண் பார்வை இல்லை. தந்தை தினக்கூலி பொறுப்பற்ற, பயம் என்பதே இல்லாத- தான் தோன்றித் தனமாக வளர்ந்த செயல்தான் இவர்களை இதுபோன்ற பாதக செயலில் ஈடுபட வைத்தது இவர்களின் வளர்ப்பு தான்.

பெற்றோர் தலைதூக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகளை சரியாக வளர்க்காவிட்டால் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கே எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணம் திசா மரணம்.

குற்றவாளிகளின் என் கவுண்டர் ஒரு பாடமாக அமைய வேண்டும். இதுபோன்றவற்றை தடுக்க கடுமையான சட்டங்கள் வர வேண்டும்.
இவ்வாறு ரோஜா கூறியுள்ளார்.
👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧

0 comments:

Post a Comment