உலகில் இப்படியும் ஒரு தாயா?


வழக்கம் போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா ,பார்வதியின் குரல் கேட்டு ,தன்  கவனத்தினை அவள் பக்கம் திருப்பிக்கொண்டார்.
'சிவ ,சிவ 'என கைகூப்பிய  பார்வதி பஞ்சாங்க நமஸ்காரம் செய்து எழுந்து மூன்றாவது நாளாக இன்றும் 
'சிவபெருமானே, என்னை நரகத்திற்கு  அனுப்பிவிடு ' என்று வேண்டிக்கொண்டாள்.
பொறுமையினை இழந்த குருக்கள் அவளை அணுகி ' பார்வதி அம்மா, நான் கேட்கிறேன் என்று தப்பா எடுக்காதீங்க , எல்லோரும் சொர்க்கத்திற்கு போகவேணும் என்று வழிபடுவதே வழக்கமாக இருக்க , நீங்க மட்டும் நரகத்தினை வேண்டுகிறீர்களே , ஏனம்மா? என்று வினவினார்.
அதற்கு பார்வதி அம்மா ' ஐயா ,என் மகன் ஊருக்குள் செய்யாத குழப்படி இல்லை. ஊர் முழுவதுமே அவனைத் தூற்றுகிறது. அவன் நிச்சயம் நரகத்துக்குத் தான் அனுப்பப்படுவான். அங்கே அவனை யாருக்கும் பிடிக்கப்போவது இல்லை.  எனவே அவனை யாரும் கவனிக்கப்போவது இல்லை. அதுதான் அவனுக்கு அங்கும் தாயாக நான்  இருக்க ஆசைப்படுகிறேன்,' என்றாள்
அத்தாயின் பாசத்தினை உணர்ந்த குருக்கள் தன்னை மறந்து அவளை நோக்கி கை கூப்பி வணங்கி நின்றார்.
 குறிப்பு:சொர்க்கம்,நரகம் இவையெல்லாம் பூமியில் நாமே வாழும்போது  உண்டாக்கிக் கொள்வது. கதைக்காக அவை வேறு உலகமாகக் கற்பனைப்படுத்தப்பட்டுள்ளது.
செவி மூலம் : செ.மனுவேந்தன்🤯🤯🤯 சிறு கதை 



0 comments:

Post a Comment