புதிய திரைப்படங்கள்-சுருக்கமான விமர்சனம்

 கடந்த வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?📽''கடைசி விவசாயி'' விமர்சனம்📽

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கன்னா, யோகி பாபு, பசுபதி நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு  இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஒரு விவசாயி தன் நிலத்தினை விற்க மறுத்த காரணத்தால் பொய்யான குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுகிறார். அவர் விடுதலை செய்யப்பட்டாரா?, இல்லையா? என்பதே மீதிக்கதை.

மொத்தத்தில் ‘கடைசி விவசாயி’ உயிரோட்டம்.

 Kadaisi Vivasayi movie revew

📽''கூர்மன்'' விமர்சனம்📽

ப்ரயன் பி. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், கெளதம் மேனன்   என பலர் நடித்திருக்கும் திரைப்படம்.   டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

ஒருவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்ட போலீஸ் நாயகன் ராஜாஜி  தப்பிச்சென்ற குற்றவாளியை கண்டுபிடித்தாரா? போலீஸ் வேலையில் இருந்து ராஜாஜி சஸ்பெண்ட் செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மொத்தத்தில் 'கூர்மன்' கூர்மை.

 koorman movie review 

📽''மகான்'' விமர்சனம்📽

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ விக்ரம், வாணி போஜன், சிம்ரன் என  பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம்.  லலித் குமார் தயாரிக்க,  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காந்தியவாதியான ஆசிரியர் விக்ரம் திருமணம்,குழந்தை என்றபின்   ஆரம்பித்த மதுபானஆலையின்  அதிபரான பின் வரும் போலீஸ் அதிகாரியின் சிக்கல்களை எப்படிச் சமாளித்தார் என்பதே மீதிக்கதை

மொத்தத்தில் ‘மகான்’ சிறந்தவன்.

Mahaan, movie Review

-:தொகுப்பு /செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment