வெளிவந்த திரைப்படங்கள் பார்க்கலாமா?

 


''தேள்'' விமர்சனம் 

 ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா, சம்யுத்த ஹெக்டே, யோகிபாபு, இமாம் அண்ணாச்சி எனப்பலர்  நடிக்கும் திரைப்படம்.  கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க,  சி.சத்யா இசையமைத்துள்ளார்..

கொரியன் மொழியில் 10 வருடத்திற்கு முன்வந்த கதையினை தழுவியது. அடியாளான அநாதை பிரவுதேவா முன், தான் தான் தாய் என்று வந்தவரை விரட்டியவர், அதே தாய் பாசத்தினை உணர்ந்தபோது, கடத்தப்பட்ட தாயை எப்படிக் கண்டுபிடித்தார் என்பதே கதை.

 மொத்தத்தில் ‘தேள்’ விஷம் குறைவு. அதிகமாக ரசிகர்களை கவரவில்லை.

 

''புத்தம் புது காலை விடியாதா'' விமர்சனம் 

இயக்குனர்களான பாலாஜி மோகன், ஹலித்தா ஷமீம், மதுமிதா ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணா இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். இப்படம் அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு  அமேசான் ஓடிடி செயலியில் வெளியானது.

ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ் ஜெயராம், கல்யாணி ப்ரியதர்ஷன், எம்.எஸ். பாஸ்கர், ரீது வர்மா, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், சிக்கல் குருசரண், பாபி சிம்ஹா, முத்துக்குமார் எனப் பலர் நடித்துள்ளனர்.

கோவிட் நோய்த்தொற்று காரணமாக  முழு ஊரடங்கு வேளையில், வெவ்வேறு இடங்களில் மாட்டிக்கொள்ளும் ஒரு 5 நபர்களின் கதைகளை ஒரு திரையில் இணைத்திருக்கிறார்.

பாஸிட்டிவான படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த "புத்தம் புது காலை" ஒரு புத்துணர்ச்சியை அளிக்கலாம். தேர்ந்த திரைப்பட ரசிகர்களுக்கு இதிலுள்ள சில படங்கள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும்.

 

''கொம்பு வச்ச சிங்கம்டா'' விமர்சனம்

 இயக்குனர் பிரபாகரன்  இயக்கத்தில்  நடிகர் சசிகுமார், மடோனா, சூரி மற்றும் இந்தர் குமார் நடித்துள்ள நகைச்சுவை அதிரடி திரைப்படம்.  இந்தர் குமார் தயாரிக்க, திபு நினான் தாமஸ் இசையமைத்துள்ளார்.

சசிகுமாரும்  ஐந்து நண்பர்களும்   சாதி, மத வேறுபாடின்றி பழகி வருகிறார்கள்.தேர்தல் வருகிறது. இதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலை சம்பவம் நிகழ்கிறது. பிறகு அது ஜாதி பிரச்சனையாக மாறிவிடுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன? கொலைக்கான பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை.

மொத்தத்தில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ – வேகம் குறைவு.

 

''என்ன சொல்ல போகிறாய்'' விமர்சனம்

  ஹரிஹரன் இயக்கத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம்.  இவருடன் புகழ் (குக் வித் கோமாளி), தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முக்கோண காதல் கதையை கொஞ்சம் ஜவ்வாக இழுத்துவிட்டார் இயக்குநர். புகழ், லொள்ளு சபா ஸ்வாமிநாதனின் காமெடி கை கொடுக்கவில்லை.

 

''கார்பன்'' விமர்சனம்

 ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்ணன், மாரிமுத்து என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம்.   சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

விதார்த்துக்கு கனவில் வருகின்ற விஷயங்கள் நிஜத்தில் நடந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தனது தந்தைக்கு விபத்து ஏற்படுவது போல கனவு வருகிறது. அதை தடுக்க முயற்சி செய்வதற்குள் அந்த விபத்து நடந்துவிடுகிறது. அதன் பிறகுதான் இது விபத்தல்ல கொலை என புரிகிறது.

இது ஏன் நடத்தப்பட்டது என்று தினம் தினம் கனவில் தேடி செல்கிறார். உண்மையில் இது கொலையா? இந்த கொலையை நிகழ்த்த காரணம் என்ன? கொலையாளிகளை கதாநாயகன் விதார்த் பிடித்தாரா? என்பதே இப்படத்தின் கதை.

மொத்தத்தில் ”கார்பன்” ரசிக்கலாம்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்  


0 comments:

Post a Comment